வலைப்பதிவு வழிகாட்டி - 04
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இதுவரை நாம் பார்த்தோம்.
![]() |
Image Credit: Google |
அதன் படி முறைகளை நீங்கள் கீழ்வரும் இணைப்புகளில் ஒழுங்குமுறையில் காணலாம்.
சரி, வலைப்பதிவை உருவாக்கிவிட்டோம். இனி எழுதப் போகலாமே என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால் அதை விட முக்கியமான சில படிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் செய்த பின்னர் நாம் எழுதத் துவங்குவோம்.
வலைப்பதிவு அமைப்புகளை (Settings) கட்டமைக்க வேண்டும்.
உங்கள் வலைப்பதிவின் கட்டுப்பாட்டு பகுதியில் (Dashboard) இடது பக்கத்தில் கீழே இந்த Settings காணப்படும்.
Settings இனை தெரிவு செய்யுங்கள்
இங்கு 'Basic' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவின் அடிப்படை விவரங்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம்.
Title என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு தலைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவுக்கான புதிய தலைப்பை உள்ளிட்ட பின்னர் 'Save Changes' என்பதை சொடுக்குங்கள்.
'Description' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு குறித்த விளக்கத்தை அளிக்க முடியும். என்ன நோக்கத்துக்காக நீங்கள் இந்த வலைப்பதிவை துவங்கியிருக்கிறீர்கள் என்பதை 500 சொற்களுக்குள் இங்கே கொடுக்கலாம்.
இது உங்கள் வலைத்தளத்தின் தலைப்பின் கீழேயே காட்டப்படும். வாசகர்கள் கண்ணில் தலைப்புக்கு அடுத்தபடியாக முதலில் கண்ணில் படுவது இது தான். ஆகவே வாசகர்களைக் கவரக் கூடியவாறும் உங்கள் நோக்கத்தை தெளிவாக விளக்கக் கூடியவாறும் இது அமைதல் சிறப்பு.
'Description' ஐ கொடுத்து 'Save Changes' பொத்தானை சொடுக்குங்கள்.
இப்போது உங்கள் வலைப்பதிவின் முகப்புப் பக்கம் மேற்கண்டவாறு காட்சியளிக்கும்.
அடுத்ததாக 'Basic' இல் 'Privacy' என்பதை தெரிவு செய்யுங்கள். இதில் இரண்டு தெரிவுகளும் 'Yes' என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும்.
முதலாவது 'BLOGGER' சேவைகளில் உங்கள் வலைத்தளம் பட்டியலிடப்படுவதையும் அடுத்தது இணையத்தள தேடு பொறிகளில் (Search Engines) உங்கள் வலைத்தளம் காண்பிக்கப்படுவதையும் குறிக்கும்.
இரண்டையும் முடக்காமல் இருப்பது நல்லது. உங்கள் வலைத்தளத்துக்கான வாசகர்கள் வருகை எண்ணிக்கையை இதுவும் தீர்மானிக்கும். தெரிவுகளை மாற்றாமல் 'Save Changes' ஐ சொடுக்குங்கள்.
இன்னும் இருக்கிறது நமது வழிகாட்டி. காத்திருங்கள். அனைத்து அடிப்படை மற்றும் அவசியமான விடயங்களையும் உங்களுக்காக இங்கே விளக்கத் தயாராக உள்ளோம். இந்தத் தொடர் முடிவடைந்ததும் வேர்ட்பிரஸ் தளங்களை வடிவமைப்பது குறித்தும் விளக்க எதிர்பார்த்துள்ளோம்.
வலைப்பதிவு வழிகாட்டி - 04
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-04.html
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்