கேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்!!!
நீங்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேவை வழங்குநர் (கேபிள் ஆபரேட்டர் / Cable Operator) ஊடாகவோ அல்லது டிஷ் டிவி அல்லது டிஷ் ஆன்டனா எனப்படும் செய்மதித் தொலைக்காட்சி சேவை ஊடாகவோ உங்களுக்கான தொலைக்காட்சி இணைப்பினை பெற்றிருக்கலாம்.
இப்போது கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பெரும்பாலும் இல்லை. பெரும்பாலானோர் செய்மதித் தொலைக்காட்சிகளையே பயன்படுத்துகிறோம்.
கடந்த வருட இறுதியில் ட்ராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்மதித் தொலைக்காட்சிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த நடைமுறைகள் பிப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தன.
முன்னர் Package எனப்படும் பொதிகளாகவே நமக்கு அலைவரிசைகள் வழங்கப்பட்டன. அதாவது 150 ரூபாய்க்கு 100 அலைவரிசைகள் அல்லது 450 ரூபாய்க்கு 500 அலைவரிசைகள் என வழங்கப்பட்டன. இவற்றில் நமக்கு தேவைப்படும் அல்லது நாம் பார்க்கும் அலைவரிசைகள் நமக்கு வழங்கப்படும் அலைவரிசைகளில் 25% கூட இருக்காது.
இதனை மாற்றுவதற்காக ட்ராய் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் நீங்கள் விரும்பும் அலைவரிசைகளுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்த்து மகிழலாம். உங்களுக்கு 50 அலைவரிசைகள் மட்டும் தான் தேவை என்றால் அந்த 50 அலைவரிசைகளை மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம். அதற்கு மேலதிகமாக எந்தவொரு அலைவரிசையையும் உங்களுக்கு வழங்கவோ அல்லது அதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடவோ முடியாது.
ஆனால் இந்த மாற்றம் பெரும்பாலான சாதாரண மக்களுக்குப் புரியவில்லை. இதனை செய்மதித் தொலைக்காட்சிக்கு மீள் நிரப்பும் தரகர்கள் நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி இணைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறி சாதாரண மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்கள் செய்மதித் தொலைக்காட்சி இணைப்பில் 1ஆம் இலக்கம் முதல் இறுதி இலக்கம் வரை என்னென்ன தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்குகின்றன என்று பாருங்கள். அவற்றை ஒரு தாளில் முறையாக எழுதுங்கள். அவற்றில் உங்களுக்குத் தேவையில்லாத அலைவரிசைகள் இயங்கினால் அவற்றை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அலைவரிசைகள் இயங்காவிட்டால் அவற்றை வேறாகக் குறித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்களுக்கு என்னென்ன அலைவரிசைகள் தேவையோ அவற்றை மட்டும் எழுதி உங்கள் செய்மதித் தொலைக்காட்சி இணைப்பு மீள்நிரப்பும் முகவரிடம் வழங்கி செயற்படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் தமிழ் அலைவரிசைகள் மட்டும் தான் பார்ப்போம் என வைத்துக் கொள்வோம். Dishtv செய்மதித் தொலைக்காட்சியில் 521 முதல் 601 வரையான இலக்கங்களில் தமிழ் அலைவரிசைகள் இயங்குகின்றன. எனவே நாம் தினமும் இந்த இலக்கங்களுக்குள் இயங்கும் தொலைக்காட்சிகளை மட்டும் தான் பார்ப்போம். அதற்கு மேலோ அல்லது கீழோ இயங்கும் அலைவரிசைகளை நாம் கவனிப்பதில்லை.
இதனை மீள்நிரப்பும் முகவர்கள் (Recharge Agents) பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆங்காங்கே பல அலைவரிசைகளை உள்நுழைத்து மாதாந்த கட்டணத்தை அதிகரித்து விடுகிறார்கள்.
ஆகவே நாம் உஷாராக செயல்பட வேண்டும். உங்களுக்குத் தேவையான அலைவரிசைகளை மட்டும் எழுதி அதனை மட்டும் செயல்படுத்தித் தருமாறு மீள் நிரப்பும் முகவர்களிடம் கூறுங்கள். அவர்கள் சரியாக அலைவரிசைகளை இணைத்திருக்கிறார்களா என்பதை உங்கள் செய்மதித் தொலைக்காட்சி இணைப்பிலுள்ள எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளையும் இயக்கிப் பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்!!!
https://newsigaram.blogspot.com/2019/04/be-aware-about-your-satellite-tv-connection.html
#TRAI #SatelliteTV #DishTV #Videocond2h #AirtelDigitalTV #TataSky #BigTV #Reliance #NCF #dth #d2h #Channels #Operator #Recharge #TvGuide
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்