எதற்கு நீ சலித்தாய் மனமே?
இன்று, இந்த நிமிடம் உங்கள் மனம் என்ன யோசிக்கிறது?. "சே! என்ன வாழ்க்கை இது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்படுவது?" - இவ்வாறு நம்மில் பலரின் மனங்கள் சலித்துக் கொண்டிருக்கின்றன அல்லவா? வாழ்க்கை நாம் நினைத்த படி அமையாத போது மனம் சலிப்படைகிறது. சிலர் சலிப்புத் தன்மையை தோற்கடித்து வாழ்க்கையை வெல்கிறார்கள். ஆனால் அதிலேயே மூழ்கிப் போகிறவர்கள்?
ஏதோ ஒரு நொடியில் ஏற்படுகிற சலிப்புத் தன்மையானது முழு வாழ்க்கையையுமே அர்த்தமற்றதாக்கி விடுகிறது. எத்தனையோ கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கிய பலர் சலிப்புத் தன்மை காரணமாக கனவுகளை நனவாக்காமலேயே மரித்துப் போகிறார்கள்.
சிலருக்கு வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். அதை அதிர்ஷ்டம் என்கிறோம். சிலருக்கோ வாய்ப்புகளைத் தேடி பயணப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் பயணம் நாள் கணக்கில், வாரக் கணக்கில் ஏன் வருடக் கணக்கில் கூட நீளும். சரியான வாய்ப்பைக் கண்டறியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குப் பொறுமை வேண்டும்.
இப்போது யாரிடமும் பொறுமை இல்லை. அவசர அவசரமாகவே எல்லா வேலைகளையும் செய்து பழகி விட்டோம். எதிலும் பொறுமையோ அல்லது திட்டமிடுதலோ இல்லை. தற்கால நவீன வணிக யுகம் நம்மை அப்படி ஆக்கி வைத்திருக்கிறது.
வெற்றியை அடைய முதலில் தேவை பொறுமை. அடுத்து இலக்கைத் திட்டமிட வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சிறு சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை நோக்கிய பயணம் எத்தனை யுகங்களாய் தொடர்ந்தாலும் சலிப்படையாது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விடா முயற்சிதான் வெற்றிக்கான அடித்தளம். உங்கள் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டேயிருங்கள். வெற்றி தானாக உங்களைத் தேடி வரும்.
#வெற்றி #உழைப்பு #வாழ்க்கை #திட்டமிடல் #வாய்ப்பு #Success #Win #Planning #Goal #Life #Work #Sigaram_INFO
நல்ல விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteசிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.
ReplyDeleteபுத்துணர்வூட்டும் பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு....
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete