BB Tamil 2 | Week 07 | Day 48 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 48 | நீங்க பார்த்தீங்களா?

'எப்பொழுதும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு. என்ன செய்யப் போகிறார் கமலஹாசன் என்கிற கேள்வி. எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது. இப்போது உங்களுக்குத் தெரிய வரும்' என்கிற பீடிகையோடு ஆரம்பித்தார் உலக நாயகன். தொடர்ந்து இந்த வார மீள்பார்வையும் வெள்ளிக்கிழமை காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. பிக் பாஸ் இரண்டாம் பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் பரபரப்பான வாரமாக இந்த வாரம் அமைந்திருந்தது. 

'ராணி மகா ராணி' என்னும் சர்வாதிகாரி - பொதுமக்கள் போட்டி. அதிகாரம் கிடைத்ததும் ஐஸ்வர்யாவுக்கு நேரலையில் கண்ட காட்சிகள் ஆத்திரத்தை ஏற்படுத்த நிதானம் இழந்து தன்னிலை மறந்து வேட்டையாடிய விதம் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரிடமும் கோபத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருந்தன. கமல் பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரத்திற்கு கமல் நியாயம் வழங்குவாரா இல்லையா என்கிற கேள்வி தான் ரசிகர்கள் அனைவரிடமும் நிறைந்திருந்தது. 



'என்ன நடக்குது வீட்ல?' என்ற கேள்வியுடன் பிக் பாஸ் போட்டியாளர்களைச் சந்தித்தார் கமல். 'கலவரம் நடந்து முடிஞ்சா மாதிரி இருக்கு' என்றார் பொன்னம்பலம். 'இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு நெனச்சோம். பாயாசமே குடிக்கிது' என்றார் சென்றாயன். சர்வாதிகாரி மீதான விசாரணைகளைத் துவக்கினார் கமல். நேரடியாக விரலை நீட்டி 'நீங்க செஞ்சது தப்பு, வெளில போங்க' என்று ஆத்திரத்துடன் சொல்லாவிட்டாலும் தவறை உணர்த்தி திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் கமல் உரையாடலை நகர்த்திச் சென்றார். 

'ஒருவரை தூக்கிப்போட்டு மிதிப்பதிலும் பார்க்க அன்பு காட்டி பெறும் வெற்றி இனியதாக இருக்கும்' என்றார் கமல். பாலாஜி கெட்ட வார்த்தை பேசுவதையும் கமல் கண்டித்தார். பிக் பாஸ் சொன்னது போல 'நீங்கள் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்' என்று சொல்லாமல் தவறுகளை உணர்த்திய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யாவின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 



இந்த வாரத்தின் குறும்படம் பாலாஜிக்கு. சர்வாதிகாரி பாலாஜிக்கு குப்பை கொட்டிய விவகாரத்தின் பின்னர் பாலாஜி சாப்பிட மாட்டேன் என மறுத்திருந்தார். நள்ளிரவில் சென்றாயன் கொண்டு வந்து கொடுத்த சப்பாத்தியை பாலாஜி ரகசியமாக சாப்பிட்டு 'உண்ணாவிரதம்' இருந்த காட்சிகள் தான் குறும்படம். தொடர்ந்து மஹத்தை 'நைட் விஷன் கேமராவை பார்த்தீங்களா?' என்று கேட்டார். பையன் ஏதோ குறும்பு பண்ணி இருக்கான் போல. 

இந்த வார வெளியேற்றத்துக்கான நேரம். வெளியேற்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களை நீங்கள் ஏன் பரிந்துரைக்கப்பட்டீர்கள் என்று கேட்டார் கமல். ரித்விகா காப்பாற்றப்பட்டார். ஷாரிக் என்னை நீங்க கேக்கலியே என்று கேட்க இருங்க அவசரப்படாதீங்க என்று சொல்லி விடைபெற்றார் கமல். இந்த வாரம் நிச்சயமாக வெளியேற்றம் உண்டு. 

யாஷிகாவுக்கு வெள்ளிக்கிழமை பிறந்த நாள். ஞாயிற்றுக்கிழமை ரித்விகாவுக்கு பிறந்த நாள். இந்த முறை பிக் பாஸ் கேக்கெல்லாம் அனுப்பி கொண்டாடுகிறார். இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அடுத்த நாளே அவங்களையே வெட்டி பிரியாணி பண்றது தான் நல்லா இல்லை. நாங்க சொன்னா கேட்கவா போறீங்க? நல்லா பண்ணுங்க பிக் பாஸ்! 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!