BB TAMIL 2 | WEEK 09 | DAY 58 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 58 | பொம்மலாட்டம்

'ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி' பாடலுடன் விடிந்தது காலைப் பொழுது. இந்த வார Luxury Budget போட்டி 'பொம்மலாட்டம்'. அணி A, அணி B என இரு அணிகளாகப் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். பொம்மைகள் தைப்பது தான் போட்டி. Garden Area வில் அமைக்கப்பட்டிருக்கும் Conveyor மூலம் மூலப் பொருட்கள் வழங்கப்படும். அதன் இரு புறமும் இரு அணியினரும் நின்று மூலப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அணி தைக்கும் பொம்மைகளை மற்றைய அணியின் மேற்பார்வையாளர் (Supervisor) தரம் பார்க்க வேண்டும். 

இதே மாதிரியான போட்டி முதலாம் பருவத்திலும் இடம் பெற்றிருந்தது. அதன் போது வெளியில் இருந்து மூலப் பொருட்கள் எறியப்பட்டன. அதனை வைத்து விரிப்பு தைக்க வைத்ததாய் ஞாபகம். இந்த முறை பொம்மைகள். இறுதியில் நிப்பான் பொம்மைகள் போல அல்லாமல் சூனியம் வைக்கும் போல பொம்மைகள் போல அமைந்து விட்டால் பிக் பாஸ் பாடு படு திண்டாட்டம் தான். 




மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யும் பொம்மைகளுக்கான பணத்தை அந்த அணி பிக் பாஸின் ரகசிய அறைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். போட்டியின் முடிவில் எந்த அணியிடம் அதிக பணம் இருக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும். அணி A : ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா, பாலாஜி, ரித்விகா. அணி B : மஹத், மும்தாஜ், சென்றாயன், ஜனனி, வைஷ்ணவி. பாலாஜி மற்றும் மும்தாஜ் மேற்பார்வையாளர்களாக இருப்பார்கள். 


நீலம் மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டன. மாதிரி பொம்மைகளும் தலா ஒன்று வழங்கப்பட்டன. ஐஸ்வர்யா அணிக்கு ஆரஞ்சு நிற ஆடையும் மஹத் அணிக்கு நீல நிற ஆடையும் கிடைத்திருந்தது. போட்டி ஆரம்பமானது. முதல் கட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அடித்துப் பிடித்து மூலப் பொருட்களை இரு அணியினரும் கைப்பற்றினார்கள். 


முதல் கட்டமாக தைக்கப்பட்ட பொம்மைகள் தரம் பார்க்கப்பட்டன. ஐஸ்வர்யா அணியின் இரண்டு பொம்மைகளும் மஹத் அணியின் எட்டு பொம்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பொம்மைக்கும் 30 பிக் பாஸ் காசுகள் (BIGG BOSS CURRENCY) வழங்கப்பட்டன. ஐஸ்வர்யா அணிக்கு 60 காசுகளும் மும்தாஜ் அணிக்கு 240 காசுகளும் வழங்கப்பட்டன. பணத்தை Garden Area வில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்டியில் தான் வைக்க வேண்டும். 


SIGARAM PUBLIC OPINION POLL 

* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே. 

* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். 

* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். 

* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும். 



Bigg Boss Tamil 2 | Week 09 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

Vaishnavi | வைஷ்ணவி
Senrayan | சென்றாயன்
Janani | ஜனனி
Daniel | டேனியல்
Rythvika | ரித்விகா
Created with PollMaker


பகல் உணவுக்குப் பின்னர் இரண்டாம் கட்ட போட்டி ஆரம்பமானது. இரண்டாம் கட்ட மூலப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முனையும் போது டேனிக்கும் மஹத்துக்கும் மோதல் உருவானது. அதன் பின்னர் இரு அணியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் எழுந்தது. மாலை நான்கு மணியளவில் இரு அணியினரும் தைக்க ஆரம்பித்தனர். தைத்து முடிந்த பின்னர் மும்தாஜ் எதிரணியில் யாரும் இல்லாத நேரம் அவர்களது பணத்தை எடுத்து தனது அணியின் பெட்டியில் வைத்துக் கொண்டார். 


இரண்டாம் கட்ட பொம்மைகள் தரம் பார்க்கப்பட்டன. பாலாஜி அணியின் நான்கு பொம்மைகளும் மும்தாஜ் அணியின் ஏழு பொம்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மூலப் பொருள் யாருக்கு அதிகமாகக் கிடைக்கிறதோ அவர்களே அதிகமாகத் தைக்க முடியும். மேலும் மும்தாஜ் அணி விரைவாகத் தைக்கின்றனர். இந்தப் போட்டியை இரு அணியினரும் சிறப்பாக செய்து கொண்டிருப்பதால் ஒரு பொம்மைக்கு 40 காசுகள் வீதம் வழங்கப்பட்டது. (பாலாஜி 160 காசுகள், மும்தாஜ் 280 காசுகள்) 


இரவு 07.45க்கு மூன்றாம் கட்ட போட்டி ஆரம்பமாகிறது. பொம்மைகள் தைத்து முடிக்கப்பட்ட பின்னர் தரம் பார்க்கப்படுகிறது. பாலாஜி அணியின் இரண்டு பொம்மைகளும் மும்தாஜ் அணியின் ஆறு பொம்மைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் மும்தாஜ் அணி இந்த சுற்றில் அதிக பொம்மைகளை வைத்திருப்பதால் மும்தாஜ் அணிக்கு மூன்றாம் சுற்றுக்கான பணம் இரட்டிப்பாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. (பாலாஜி 80 காசுகள், மும்தாஜ் 480 காசுகள்) 


நாளைய போட்டி இன்னும் கடுமையானதாக இருக்கலாம். டேனியல் சாதாரணமாகவே விளையாடி வருகிறார். யாஷிகா, டேனியல், ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா என பலமான கூட்டணியாக இருந்தாலும் குறைவான பணத்தையே சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களின் திருவிளையாடல் ஒருவேளை நாளை வெளிப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 

BIGG BOSS TAMIL | BIGG BOSS TAMIL SEASON 2 | BIGG BOSS TAMIL EPISODE 59 | BIGG BOSS TAMIL 14/08/2018 | BIGG BOSS TAMIL 14-08-2018 | BIGG BOSS TAMIL VIJAY TV EPISODE 59 | BIGG BOSS TAMIL TODAY EPISODE | WHAT HAPPENING IN BIGG BOSS TAMIL | BIGG BOSS TAMIL HOT | BIGG BOSS TAMIL HOT STAR | VIVO V9 BIGG BOSS | BIGG BOSS TAMIL ONLINE 

#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #BiggBoss2Tamil #VivoBiggBoss #BiggBossVijayTV #BiggBossDailyUpdate #BiggBossTamilElimination #BiggBossTamilOnline #SigaramINFO 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!