BB TAMIL 2 | WEEK 09 | DAY 62 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 62 | வெளியே போகலாம்

பச்சை கோட்டு மற்றும் பூட்ஸ்கள் சகிதம் பிக் பாஸ் மேடைக்கு வந்தார் கமல். வெளியே கன மழையோ? இந்த வார முன்னோட்டத்தைத் தொடர்ந்து நேரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் கமல். வெள்ளிக்கிழமையை காக்கை தூக்கிக் கொண்டு போய் விட்டதா என்ன? கமல் இடைவேளை கொடுத்ததும் மும்தாஜ் பஞ்சாயத்து மீண்டும் சபைக்கு வந்தது. ஐஸ்வர்யாவும் மஹத்தும் மும்தாஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 

யாஷிகா மும்தாஜின் அருகில் அமர்ந்தது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் கத்தினார். கதவைத் திறங்க, பிக் பாஸ் வீட்ல இருந்து நா போறேன் என்று கூறினார். இருவரையும் மற்றவர்கள் சமாதானப்படுத்த முயற்சித்தனர். மும்தாஜ் இப்போதும் அமைதியாகவே இருந்தார். அவருடைய திடீர் அமைதிக்குக் காரணம் என்னவோ? 

எதுவும் தெரியாதது போல கமல் போட்டியாளர்களைச் சந்தித்தார். மஹத்தும் ஐஸ்வர்யாவும் மும்தாஜ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மும்தாஜ் அன்பு காட்டி போட்டியாளர்களை தவறாக வழிநடத்துவதாக இருவரும் குற்றம் சாட்டினர். யாஷிகா இப்படியும் அப்படியுமாக தன் பதிலை முன்வைத்தார். இப்போது தான் எல்லோரும் உண்மையாக இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது என்னும் கமலின் கூற்றுக்கு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். 



ரித்விகா வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன் பின்னர் சும்மா நா போறேன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது. அஞ்சு நிமிஷம் பிக் பாஸ் வீட்டு கதவைத் திறந்து வைக்கிறேன். போறவங்க போகலாம் என்றார் கமல். உடனே போக எழுந்த ஐஸ்வர்யாவை மஹத்தும் பாலாஜியும் அமைதிப்படுத்தினர். கடந்த பருவத்திலும் இது போல கதவு திறக்கப்பட்டது. யாரும் போகவில்லை. இம்முறையும் அதே தான். 

இந்த வாரப் போட்டியின் போது மஹத் ரித்விகாவை தள்ளி விட்டது பற்றி கேட்டார் கமல். எனக்கும் அடிக்கத் தெரியும், ஆனா நா அமைதியா இருந்துட்டேன் என்றார் கமல். ஐஸ்வர்யா மற்றும் மஹத் ஆகிய இருவரும் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார் கமல். ரித்விகாவுக்கு மஹத் வெயில் படாமல் குடை பிடிக்க வேண்டும் என்று கூற இடையில் புகுந்த சென்றாயன் மஹத் என்னையும் அடிக்க வந்தான் சார் என்று புகாரளித்தார். அப்போது ஐஸ்வர்யா சென்றாயன் தன் முடியைப் பிடித்து இழுத்ததாக புகாரளிக்க சென்றாயனை ஐஸ்வர்யாவுக்கு குடை பிடிக்க சொன்னார். 

எல்லோரும் Activity Areaவுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு போட்டியாளர் எழுந்து நிற்க வேண்டும். அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏனைய போட்டியாளர்கள் முன்வைக்க வேண்டும். சிறந்த விமர்சனத்துக்கு பரிசு  உண்டு. மும்தாஜ் உண்மையாக இருப்பதாக ரித்விகா குறிப்பிட்டதற்கு பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். மும்தாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா அகியோரைப் பற்றிய விமர்சனங்கள் பெறப்பட்டன. ஏனையவை நாளை. 

கமல் கேரளா வெள்ளம், வாஜ்பாய் மரணம் என வரிசை கட்டி அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்தால் இம்முறை வேறு விதமாக அமைந்திருந்தது. ஆனால் இம்முறையும் அரை மணிநேரம் முன்னதாகவே நிகழ்ச்சி முடிந்தது. சனி ஞாயிறு அத்தியாயங்கள் ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பானது. இப்போதெல்லாம் நிகழ்ச்சி நேரம் குறைந்திருக்கிறது என்பது கவலையளிக்கிறது. பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதே. பிக் பாஸ் செவிமடுப்பாரா? பொறுத்திருப்போமாக.

BIGG BOSS TAMIL EPISODE 63 | BIGG BOSS TAMIL 18/08/2018 | BIGG BOSS TAMIL 18-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 18/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!