BB Tamil 2 | Week 08 | Day 50 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 50 | யார் முட்டாள்?
பிக் பாஸ் இரண்டாம் பருவம் ஐம்பது நாட்களைத் தொட்டிருக்கிறது. பாதிக்கிணறைத் தாண்டியாயிற்று. வெற்றிக்கோட்டை நெருங்கி விட்டோம். இனி புதுவரவுகள் இருக்கலாம். அடுத்து வரும் மூன்று வாரங்களுக்குள் அவர்கள் வரலாம். ஐம்பதாம் நாள் காலையில் புதிய தலைவி அணிகளைப் பிரித்துக் கொண்டிருந்தார். ஷாரிக் பிரித்த அணிகள் செல்லுபடியாகவில்லை போலும்.
அடுத்து வெளியேற்றப் பரிந்துரை. கடந்த வாரம் பிக் பாஸ் அழைத்துப் பேசாமல் வெளியேற்றப் பரிந்துரைக்கு வர மாட்டேன் என்று பிக் பாஸை பாலாஜி நள்ளிரவு வரை கதற வைத்திருந்தார். அதனால் இந்த வாரம் காலையிலேயே சொல்லிட்டுப் போங்க என்று ஆரம்பித்தார் பிக் பாஸ். 'ராணி மகா ராணி' ஐஸ்வர்யாவும் ஷாரிக்கின் பதில் தலைவி யாஷிகாவும் இந்த வாரம் தப்பினர்.
சென்றாயன், பொன்னம்பலம் ஆகியோர் தேர்வாகினர். யாஷிகா ரகசிய அறைக்கு செல்லாமல் போட்டியாளர்களின் முன்னால் ஜனனியின் பெயரை முன்மொழிந்தார். ஆகவே ஜனனி நேரடியாக வெளியேற்றப் பரிந்துரைக்குத் தேர்வானார். ஆக இம்மூவரில் ஒருவர் இந்த வாரம் கட்டாயம் வெளியேறியே ஆக வேண்டும். சென்றாயனின் மக்கள் ஆதரவைப் பரிசோதிக்கும் வாரம் இது.
'புகார்ப் பெட்டி' இன்றைய போட்டி. பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு அந்த வீட்டில் சக போட்டியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார்க் கடிதம் எழுத வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எழுதலாம். அல்லது ஒரே போட்டியாளரால் ஏற்படும் இரண்டு பிரச்சினைகள் குறித்தும் எழுதலாம். நடுவர் யாஷிகா. நடுவரைப் பற்றி புகாரளிக்க முடியாது.
'Ready set go' அடுத்த போட்டி. பெரிய தாயக்கட்டையை உருட்ட வேண்டும். ஒருவர் Spin Wheel ஐ சுற்ற வேண்டும். அதற்கேற்ப கட்டங்களில் நகர்ந்து முன்னேற வேண்டும். அணிக்கு ஐவர் வீதம் இரண்டு அணிகள். கட்டங்களில் முழுமையாக முன்னேறியதும் Store room இல் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெட்டிகளில் அவர்களின் உடமைகளை நிரப்பி எடுத்துக் கொண்டு activity area சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் தாளில் உள்ள வசனத்தை படித்து விட்டு அங்கு உள்ள காரில் ஐவரும் அமர்ந்து கொள்ள வேண்டும். அணி A வெற்றி பெற்றது. ஜனனி அணி வென்றது.
'புகார்ப் பெட்டி' போட்டியின் அடுத்த பகுதி. Activity areaவில் குற்றவாளிக்கூண்டு உள்ளது. நடுவர் யாஷிகா புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும். அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் அதற்கான வட்டத்தில் நின்று பேசலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடுவர் தான் விரும்பிய தண்டனையை அவருக்குக் கொடுக்க முடியும்.
மும்தாஜ் ஒட்டு மொத்தமாக அனைவரையும் கூண்டில் ஏற்றினார். குற்றவாளிக் கூண்டு நிரம்பி வழிந்தது. அனைவரும் தன்னை ஒதுக்கி வைப்பதாகவும் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயம் வழங்கப்படுவதாகவும் மும்தாஜ் குறிப்பிட்டார். பின்னர் டேனியல் மற்றும் பாலாஜி மும்தாஜுக்கு ஆதரவாக பேசினார்கள். டேனி குழு சேர்க்கிறார் என்கிற குற்றச்சாட்டை ஜனனி, பாலாஜி இருவருமே முன்வைத்தனர். ஆனால் டேனி மறுத்துவிட்டார்.
பாலாஜி மீதான குற்றச்சாட்டொன்றில் பேச வந்த சென்றாயன் கொஞ்சம் கோபப்பட்டார். பாலாஜி கூறியது போல சென்றாயனுக்கு சில விடயங்களை பேசிப் புரிய வைப்பது கடினமாக இருக்கிறது. எந்தவொரு கருத்தையும் முழுமையாக உள்வாங்கி பேசுவது இல்லை. இதனை கமல் வரும் நாட்களில் புரியாமல் விழிப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் சென்றாயன் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. சென்றாயன் பிக் பாஸ் இல் இருந்து வெளியே சென்றதும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து காணொளிகளையும் முழுமையாகப் பார்த்து தன்னை சுய பரிசீலனை செய்து கொள்வது அவசியம்.
மும்தாஜ் மீது ஐஸ்வர்யா முன்வைத்த குற்றச்சாட்டில் பேச வந்த பாலாஜி 'வெளியில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வருபவர்களிடம் என்னைப் பற்றி வெளில என்ன பேசிக்கிறாங்க என்று கேட்பது முட்டாள் தனமானது' என்று குறிப்பிட்டார். அதற்கு மஹத் என்னை நீ எப்படி முட்டாள் என்று சொல்லலாம் என்று சண்டைக்கு வந்தார். பாலாஜி சொன்னது உண்மையான கருத்து தான். நீங்கள் உண்மையாக நடந்து கொண்டால் வெளியில் உள்ளவர்கள் என்ன நினைத்தால் உங்களுக்கென்ன?
ஐஸ்வர்யா - பாலாஜி அப்பா, மகள் பாசம் நீடிக்குமா? டேனியலின் திட்டங்கள் வெற்றி பெறுமா? பாலாஜி கெட்ட வார்த்தைகள் பேசுவதை நிறுத்திக் கொள்வாரா? தலைவராக யாஷிகா சாதிப்பாரா? வனவாசம் முடிந்து மீண்டும் வந்துள்ள வைஷ்ணவி திருந்தி நடந்து கொள்வாரா? பொறுத்திருந்து பாப்போம்.

BB Tamil 2 | Week 08 | Who will be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?
Created with Survey Maker

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்