BB TAMIL 2 | WEEK 09 | DAY 57 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 57 | வைஷ்ணவி எதிர் டேனியல்

பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். மக்கள் அபிமானம் நிறைந்த ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் அவரோடு போட்டியிட்ட ஏனைய இரண்டு பேரும் கூட மக்கள் அபிமானம் பெற்றவர்கள் தான். மக்கள் யாரைத் தெரிவு செய்வது என்கிற குழப்பத்தில் நிகழ்ந்த விளைவாக இருக்கலாம். 

பிக் பாஸ் ஒன்பதாம் வாரத்துக்கான முதல் போட்டி. Vivo V 9 திறன்பேசியில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். மூன்று விதமான புகைப்படங்களை எடுக்க வேண்டும். மூன்று பேர் கொண்ட மூன்று குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்தனர். ஜனனி மாதிரியாக (Model) நின்றார். ஒவ்வொரு அணியும் ஐந்து புகைப்படங்களை எடுக்க வேண்டும். 



மாலை 05.00 மணிக்கு வெளியேற்றப் பரிந்துரை ஆரம்பமானது. இது முற்றத்தில் (Garden Area) இடம்பெறும். அங்கு போட்டியாளர்களின் புகைப்படங்கள் பதிக்கப்பட்ட வட்ட வடிவ பலகை இருக்கும். பிக் பாஸ் ஒவ்வொருவரையும் அழைக்கும் போது அவர் பரிந்துரைக்கும் இரு போட்டியாளர்களின் புகைப்படங்களின் மீது சிறு அம்பை வீசி குத்த வேண்டும். 

இந்த வாரத் தலைவி ஐஸ்வர்யாவுக்கு நேரடியாக ஒருவரை வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர் ரித்விகாவை தேர்வு செய்கிறார். இந்த வாரம் ஐவர் வெளியேற்றப் பரிந்துரைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். 

* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே. 

* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். 

* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். 

* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும். 


Bigg Boss Tamil 2 | Week 09 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

Vaishnavi | வைஷ்ணவி
Senrayan | சென்றாயன்
Janani | ஜனனி
Daniel | டேனியல்
Rythvika | ரித்விகா
Created with PollMaker



காலையில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் டேனியல் அணியை வெற்றி பெற்ற அணியாக ஜனனி அறிவிக்கிறார்.  Vivo V 9 திறன்பேசி வடிவிலான கேக் ஒன்றை பரிசளிக்கிறார் பிக் பாஸ். டேனியல் அணி எடுத்த புகைப்படம் ஒன்றை தனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக ஜனனி தேர்வு செய்கிறார். 

இன்று முக்கியமான நிகழ்வுகள் வேறு ஏதும் இல்லை. இந்த வாரம் வெளியேறப் போவது யார்? இந்தக் கேள்வி தான் அனைவர் மனதிலும் இருக்கிறது. டேனியல் வெளியேற்றப் பட்டியலுக்குப் புது வரவு. இது வரை வராத விருந்தாளி வந்திருக்கிறார். மக்கள் உபசரிப்பார்களா அல்லது வெளியேற்றுவார்களா? பொறுத்திருப்போமாக!

BIGG BOSS TAMIL | BIGG BOSS TAMIL SEASON 2 | BIGG BOSS TAMIL 13-08-2018 | BIGG BOSS 2 TAMIL | BIGG BOSS TAMIL SEASON 2 13/08/2018 VIJAY TV SHOW ONLINE | BIGG BOSS TAMIL 2 EPISODE 58 | BIGG BOSS TAMIL WRITTEN UPDATE | BIGG BOSS TAMIL TODAYS EPISODE | BIGG BOSS TAMIL 2 13th AUGUST 2018 | VIJAY TV BIGG BOSS SHOW ONLINE 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!