BB Tamil 2 | Week 07 | Day 49 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07 | நாள் 49 | வச்சி செய்யணும் !
ஞாயிறு பிக் பாஸ் கதவு திறந்த போது ஐஸ்வர்யாவும் பாலாஜியும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யா பாலாஜி காலில் விழுந்து ஆசீர்வாதமெல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டார். இந்த மாற்றம் யாருமே எதிர்பாராதது. 'என்கிட்ட மன்னிப்பு கின்னிப்புன்னு வந்தா அப்புறம் நடக்கிறதே வேற' என்று சவால் விட்ட பாலாஜி எங்கே என்று தேட வேண்டியிருந்தது. 'என் அப்பா திரும்ப கெடச்சிட்டார்' என்று ஐஸ்வர்யா சொன்னது நெகிழ்ச்சி.
இந்த வாரத்துக்கான இரண்டாவது குறும்படம். இதுவும் பாலாஜிக்குத் தான். கெட்ட வார்த்தை - கேட்ட வார்த்தைகள். உண்மையிலேயே பாலாஜி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் நல்லது. நல்ல நகைச்சுவை நடிகர் என்று அவருக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் காப்பாற்றிக்கொள்ள இது உதவியாக இருக்கும்.
வெளியேற்றம். சனிக்கிழமை அத்தியாயத்தில் ரித்விகா காப்பாற்றப்பட்டிருந்தார். உள்ளே யார் வெளியே யார்? மக்களின் வாக்களிப்பில் பிக் பாஸ் என்ன தந்திரத்தை ஒளித்து வைத்திருப்பார் என்றெல்லாம் நாம் மண்டையைக் குழப்பித் தெளிய வேண்டிய தருணம்.
ரித்விகாவுக்கு அடுத்த படியாக காப்பற்றப்பட்டவர் மும்தாஜ். அடுத்தது பொன்னம்பலம். மீதியிருந்த மூவரில் ஷாரிக் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்க குழம்பிப் போனார்கள் சக போட்டியாளர்கள். ஷாரிக்கை சரியான காரணத்துடன் யாரும் வெளியேற்றத்திற்குப் பரிந்துரைத்திருக்கவில்லை. அவர் வெளியேறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. உள்ளே இருப்பது சிறையும் இல்லை, வெளியே வருவது விடுதலையும் இல்லை என்கிற மாபெரும் தத்துவ முத்தை உதிர்த்தார் கமல்.
பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 07
சிகரம் வாக்களிப்பு
ரித்விகா - 76 வாக்குகள் - 22%
பாலாஜி - 76 வாக்குகள் - 22%
பொன்னம்பலம் - 67 வாக்குகள் - 19%
மும்தாஜ் - 65 வாக்குகள் - 19%
மஹத் - 34 வாக்குகள் - 10%
ஷாரிக் - 32 வாக்குகள் - 09%
மொத்த வாக்குகள் : 350
மக்கள் வெளியேற்றம் : ஷாரிக்
முதல் முறையாக பிக் பாஸ் வீட்டின் தலைவரே வெளியேற்றப்பட்டிருக்கிறார். இரண்டு நாள் தலைவராக இருந்திருக்கிறார் ஷாரிக். இப்போது தலைவர் போட்டி திங்களுக்குப் பதில் வெள்ளியன்றே நடத்தப்பட்டு விடுவது தான் இதன் காரணம். தலைவரை வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்க முடியாதே தவிர வெளியே அனுப்பலாம் போல.
பிக் பாஸ் மேடையில் ஷாரிக். கமலின் காலில் ஷாரிக் விழ கமல் ஒதுங்கி நின்று கொண்டார். ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து கட்டித் தழுவிக் கொண்டார். ஷாரிக்கின் பிக் பாஸ் பயணம் குறும்படம் காண்பிக்கப்பட்டது. பிக் பாஸ் போட்டியாளராக தான் உள்ளே சென்று ஏனைய போட்டியாளர்களை வைத்து செய்ய வேண்டும் என ஆசைப்படுவதாக உமா ரியாஸ் தெரிவித்தார். அனுப்புங்க கமல் ஜி.
கமல் சக போட்டியாளர்கள் புகைப்படங்களைக் காண்பிக்க அவர்களைப் பற்றிய கருத்துக்களை ஷாரிக் கூறினார். இந்த வாரத் தலைவராக ஷாரிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பதில் தலைவராக யாஷிகாவை நியமித்தார் ஷாரிக். சக போட்டியாளர்கள் ஷாரிக்கிற்கு பிரியாவிடை கருத்துக்களைக் கூறினர். பின் ஷாரிக் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் ரித்விகாவுக்கு கேக் வந்திருந்தது. வாழ்த்துக்கள் பாடி கேக்கை வெட்டிக் கொண்டாடித் தீர்த்தார்கள். நேரம் காட்டப்படவில்லை. பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த வாரம் ஐஸ்வர்யா பிக் பாஸ் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். யாஷிகா ஷாரிக் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். டேனியல், சென்றாயன் இன்னும் வெளியேற்ற பட்டியலுக்குள் வரவில்லை. பார்க்கலாம்.
இப்போதெல்லாம் நேரத்துக்கு முன்னதாகவே பிக் பாஸ் முடிக்கப்பட்டு விடுகிறது. நேரமின்மையா? காட்சிகள் பற்றாக்குறையா? மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து விட்டதா? வார இறுதி அத்தியாயங்களின் பரபரப்பும் சுவாரசியமும் குறைந்து வருகிறது. கமல் அரசியல் மற்றும் திரைப்படப் பணிகளுக்கிடையே பிக் பாஸை சமாளிக்கத் தடுமாறுகிறாரா? எது எவ்வாறு இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியும் கமலும் பழைய சுவாரசியத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதனை அனைத்து மக்களின் சார்பாகவும் கோரிக்கையாக முன்வைக்கிறோம்.
#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்