உன்னுடனே இருந்திடுவேன்
இயற்கை
நம்
உயிரே
ஒப்பிலா
நெடிதுயர்ந்த
மரங்கள்
தொலைதூரம்
பாம்பாய்
வளைந்து
நெளிந்து
செல்லும்
பச்சை கொடிகளும்
பக்க
கிளைபடர்ந்தே
சுற்றி சுற்றி
வந்தாலும்
கையிணையா
குறுக்கு
விட்டத்தில்
பருத்த
மரங்கள்
சுவையாய்
கனிகளும்
கண்ணுக்கு
இனிய
குளிர்ச்சி
மரம்
அப்பப்பா
எத்தனை
இனிமை
இயற்கை
எழிலில்
என்
உயிரின்
உயிர்த்துளி
நீ இல்லா
இடம்
எனக்கு
இனி
வேண்டாம்
உன்னோடு
சேர்த்து
என்னை
உன்
மகனாய்
ஏற்றுக்கொள்
உன்னுடனே
இருந்திடுவேன்
செ.வ. மகேந்திரன்
கள்ளக்குறிச்சி
#கவிதை #இயற்கை #தமிழ் #வாழ்க்கை #செ_வ_மகேந்திரன் #உயிர் #Tamil #Thamizh #Nature #Life #Sigaram #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்