சிகரத்துடன் சில நிமிடங்கள் : நண்பர்கள் பதிப்பகம்
சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?
நான் வாசகன், எழுத்தன். கூடவே நண்பர்கள் பதிப்பகம் எனும் நூல் மகப்பேறு மையத்தின் வைத்தியன்.
கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?
எதிர்மறை எண்ணம் முற்றுப்புள்ளி அளவில் கூட இல்லாமல் இருக்க வேண்டும்.
கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?
அரசியல் ஒரு வரியில்லா வர்த்தகம். அவன் மட்டுமே அங்கே விற்கும் ஏமாளி.
கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?
உயிருக்கு உதவும் காற்று போன்றது.
கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?
எனைப்போன்ற நால்வருக்கு உதவி என்றில்லாமல் உறுதுணையாவது.
கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?
இரண்டுமே இன்றியமையாதது.
கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?
குறைந்தாலும் மறைந்து விடாது. மழலையை மடியில் ஏந்தி ரசிக்கும் மனம் எப்படி அழியும்?
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?
வரமே சில நேரம் சாபமாகலாம்.
கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?
அவர்களுடன் அவையும் பிறந்து கொண்டிருக்கும்.
கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?
புதிய நுட்பங்களை கண்டுபிடித்து அவற்றிக்கு தமிழில் பெயரிட்டால் போதும்.
-சிகரம்
#நேர்காணல் #கேள்வி #பதில் #நண்பர்கள்_பதிப்பகம் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்