Share it

Thursday, 9 August 2018

BB Tamil 2 | Week 08 | Day 53 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | நாள் 53 | வழக்காடு மன்றம்

இந்த வார போட்டி இரண்டே நாளில் முடிந்தே போனது. கலைஞரின் மறைவா அல்லது போட்டி பிக் பாஸுக்கே போரடித்து விட்டதா தெரியவில்லை. இன்றும் நாளையும் இரண்டு நாள் இருக்கிறது. பிக் பாஸ் எப்படி ஓட்டப்போகிறார் என்று தெரியவில்லை. விடிய விடிய யோசித்து ஏதாவது போட்டியை உருவாக்கியிருப்பார். போட்டியாளர்களை ஓய்வெடுக்க வைத்து வேடிக்கை பார்ப்பாரா என்ன? 

53ஆம் நாள். காலை எட்டு மணி. அமைதியான பாகுபலி பாடல். யாரும் ஆடவில்லை. சோகமாய் நின்று கொண்டிருந்தார்கள். கருணாநிதிக்கு அஞ்சலியோ? இருக்கலாம். கலைஞரைப் பற்றி காலையிலேயே பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள். நித்யா அலங்காரம் போடாமல் தான் அழகாக இருப்பாராம். உங்களுக்கு இருக்கு நித்யா கிட்ட. வாங்க வெளிய.மதியம் பாத்திரம் கழுவுவது தொடர்பாக சிக்கல் எழுந்தது. என்னால் தேநீர்க் கோப்பைகளை கழுவ முடியாது, விரல் வலிக்கும் என்றார் மும்தாஜ். நேற்றே என்னால் மதிய உணவுப் பாத்திரங்களை மட்டுமே கழுவ முடியும் என்று சொல்லி இருந்தார். சமையல் அணியில் இருந்த போது கூட காலை உணவை மும்தாஜ் சமைக்க வருவதில்லை. அவரது உடல் உபாதைகளை முன்வைத்து கடமைகளில் இருந்து விலகி நிற்பதை மும்தாஜ் வாடிக்கையாக வைத்திருக்கிறார். பின்னர் பாலாஜியும் டேனியும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என அறிவித்தனர். 

'என்னைப் போல் ஒருவன்' போட்டிக்கான முடிவுகளை அறிவிக்கும் நேரம். சிவப்பு அணியில் இருந்து ஜனனி மற்றும் நீல அணியில் இருந்து சிறந்த போட்டியாளர்களாக நடுவர் ரித்விகா அறிவித்தார். இவர்கள் இருவரும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வானார்கள். ஒரு வேளை கடந்த வாரம் இது போல ஷாரிக் தேர்வாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது போல ஜனனியும் போய் விடுவாரா? சிவப்பு அணியில் இருந்து பொன்னம்பலம் மற்றும் நீல அணியில் இருந்து டேனியல் மோசமான போட்டியாளர்களாக தேர்வானார்கள். இவர்கள் இருவரும் மட்டும் தான் இன்றும் நாளையும் அனைவருக்கும் சமைக்க வேண்டும். BB Tamil 2 | Week 08 | Who will be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 08 | யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

SENRAYAN | சென்றாயன்
PONNAMBALAM | பொன்னம்பலம்
JANANI | ஜனனி
Created with Survey Maker


இந்த வார பொருட் கொள்வனவு. 2500 புள்ளிகளுக்கு கொள்வனவு செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட புள்ளிகளுக்கு அதிகமாக பட்டியலை எழுதினால் மொத்த கொள்வனவு கோரிக்கையும் நிராகரிக்கப்படும் என்பது விதி. கூட்டல் கணக்கு பிழைத்ததில் 100 புள்ளிகளுக்கு அதிகமாக எழுதியிருப்பது இறுதியில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. பொருள் வருமா வராதா என்று குழம்பிப் போயினர் போட்டியாளர்கள். 

இரவு 09.00 மணி. கலைஞரின் சாதனைகளையும் பெருமைகளையும் குறிப்பிட்டு பிக் பாஸ் அனுப்பிய அறிக்கையை வாசித்தார் டேனி. தொடர்ந்து எல்லோரும் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் அஞ்சலியைத் தெரிவித்தனர். அத்துடன் தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். 

இரவு 10.45 மணி. 'வழக்காடு மன்றம்' போட்டி. ஜனனி நடுவர். கடித உறையில் காணப்படும் கூற்றை நடுவர் வாசித்துக் காட்டுவார். அதற்கு ஆதரவாக இரண்டு பேரும் எதிராக இரண்டு பேரும் பேச வேண்டும். நடுவர் அதற்கு தீர்ப்பு வழங்குவார். இரவு ஒரு மணியளவில் ஆனது இது முடிவதற்கு. சிறப்பான போட்டியாளராக வைஷ்ணவியும் மோசமான போட்டியாளராக சென்றாயனும் தேர்வானார்கள். 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

1 comment:

  1. படத்தில் இருக்கும் பெண் யாருன்னே எனக்கு தெரியாதே......!!!!!!!11

    ReplyDelete

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts