சிகரத்துடன் சில நிமிடங்கள் : முகில் நிலா தமிழ்
சிகரத்துடன் சில நிமிடங்கள்:
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!
கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?
எனது இயற்பெயர் கனகீஸ்வரி, புனைபெயர் முகில்நிலா தமிழ். இல்லத்தரசி, கோவை மாவட்டத்தைச் சார்ந்தவள்.
கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?
வாசிக்கும் வாசகனை ஈர்க்கும்விதமாகவும் அவனின் (சமூகம்) வாழ்வியல் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வைத்தருவதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?
மிக நெருக்கடியான நிலையில் தற்சமயம் மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். மக்களுக்கான சேவை மனப்பான்மை கொண்ட காமராசரைப்போல ஒரு தலைவர் தற்போதைக்கு தேவையென நினைக்கிறேன்.
கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். தனது சொந்த மொழியில் இயற்றப்படும் கலை, இலக்கிய நூல்கள்தான் பெரும்பாலும் சமூகத்தின் விடிவெள்ளியாய் இருந்து வழிகாட்டுகிறது (குறிப்பாக திருக்குறளைச் சொல்லலாம்). ஒவ்வொரு மொழியினருக்கும் தனித்தனி கலாச்சாரம், பண்பாடு, இன ஒற்றுமை என மொழி சார்ந்தே யாவும் தீர்மானிக்கப்படுகையில் சமூக வளர்ச்சிக்கு மொழியின் பங்கு மிகமுக்கியமானதென உணர்கிறேன்.
கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?
என் குழந்தைகளை பொறுப்பானவர்களாக, நல்லவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்தின் முன் எனது சிறு பங்களிப்பாய் சமூக மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய ஒரு நூலையேனும் வெளியிட வேண்டும்.
கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா?
நிச்சயம் பாதுகாக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்துக்கான திட்டங்களையும் வகுத்தாக வேண்டும். கடந்த காலத்தின் பாதைகள் யாவும் நமக்காக (எதிர்காலத்துக்காக) உருவாக்கப்பட்டவைதானே?
கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா?
நிச்சயம் அழியாது. கணினியைவிட புத்தகங்கள் தரும் வாசிப்பனுபவம் அலாதியானது.
கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா?
எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே வரமா சாபமா என தீர்மானிக்கலாம். என்னைப்பொறுத்தவரை வரமே.
கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்?
எழுத்தாளர்கள்- கல்கி, விக்ரமாதித்யன், சதத்ஹசன் மண்டோ, மாப்பசான், கா.சு.வேலாயுதன், அரசன், இரா.பூபாலன், அம்சப்ரியா, பொள்ளாச்சி அபி, செங்கவின், ராசு ராசு, அ.வெண்ணிலா.
நாவல்கள் & சிறுகதைகள்- பொழுத்துக்கால் மின்னல், பொன்னியின் செல்வன், தாய்மனை, இண்டமுள்ளு, தாகம், குல்சாரி, எங்கேயும் எப்போதும், ஆதலினால் காதலித்தேன், மாப்பசான் கதைகள், வீடுபள்ளத்தில் இருக்கிறது, சுஜாதா கவிதை நூல்கள், விக்ரமாதித்யன் கவிதைகள், பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, என் இரவு ஒரு தேநீர்கோப்பையாகிறது, களையெடுப்பின் இசைக்குறிப்புகள், உள்ளே கவிதையென்று எதுவுமில்லை.
நாவல்கள் & சிறுகதைகள்- பொழுத்துக்கால் மின்னல், பொன்னியின் செல்வன், தாய்மனை, இண்டமுள்ளு, தாகம், குல்சாரி, எங்கேயும் எப்போதும், ஆதலினால் காதலித்தேன், மாப்பசான் கதைகள், வீடுபள்ளத்தில் இருக்கிறது, சுஜாதா கவிதை நூல்கள், விக்ரமாதித்யன் கவிதைகள், பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, என் இரவு ஒரு தேநீர்கோப்பையாகிறது, களையெடுப்பின் இசைக்குறிப்புகள், உள்ளே கவிதையென்று எதுவுமில்லை.
கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?
எந்த மொழியைக் கற்றிருந்தாலும் தன் தாய்மொழியில் பேசுவதையும், எழுதுவதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பிற மொழிக் கலப்பின்றி பேசவும் எழுதவும் கற்றாலே நம் மொழி உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
முகில் நிலா தமிழ்
முகில் நிலா தமிழ்
-சிகரம்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #முகில்_நிலா_தமிழ் #நேர்காணல் #கேள்வி_பதில் #தமிழ் #Interview #Q&A #உரையாடல் #SIGARAM #சிகரம்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #முகில்_நிலா_தமிழ் #நேர்காணல் #கேள்வி_பதில் #தமிழ் #Interview #Q&A #உரையாடல் #SIGARAM #சிகரம்
என் டார்லு முகில் பேட்டி இப்பதான் பார்க்குறேன். வாழ்த்துகள் இருவருக்கும்
ReplyDeleteஅருமையான பதில்கள்
ReplyDeleteதொடருவோம்