BBTamil2 | WEEK 05 | DAY 33 | BALAJI IN JAIL | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 33 | பாலாஜிக்கு சிறை!

'சித்திரம் பேசுதடி' போட்டி இன்றைய நாளுக்கான முதல் போட்டி. போட்டிகளுக்குப் பெயர் வைப்பதில் பிக் பாஸ் விற்பன்னர். Vivo V 9 திறன்பேசி ஒன்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுக்குப் பிடித்த ஐந்து போட்டியாளர்களுடன் அதில் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இரகசிய அறையின் முன்னால் உள்ள ஒளிப்பதிவுக் கருவியின் முன் காட்ட வேண்டும். 



பின்னர் மதியம் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியில் செல்பி எடுத்தவரின் பெயரும் அவர் தெரிவு செய்த ஒரு புகைப்படமும் காண்பிக்கப்படுகிறது. அவர்கள் ஏன் அந்தப் புகைப்படத்தைத் தெரிவு செய்தார்கள் என்பதை எல்லோர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும். டேனியும் சென்றாயனும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர். சிலர் பொன்னம்பலத்தையும் தேர்வு செய்திருந்தனர். 



BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | WHO IS YOUR FAVOURITE CONTESTANT?

ரம்யா - RAMYA
பாலாஜி - BALAJI
ஐஸ்வர்யா - AISHWARYA
பொன்னம்பலம் - PONNAMBALAM
ஜனனி - JANANI



இந்த வார 'கனாக் காணும் காலங்கள்' போட்டியின் முடிவுகளை பிக் பாஸ் அறிவிக்கிறார். போட்டியாளர்கள் எல்லோரும் அந்தப் போட்டியில் ஆர்வமாகக் கலந்து கொண்டாலும் சில போட்டியாளர்கள் கதாபாத்திரத்தை மறந்து நடந்து கொண்டனர். மேலும் 33ஆம் நாளான இன்று மதியம் ஷாரிக், யாஷிகா, மஹத் (இந்த வார தலைவர்) ஆகியோர் பகலில் தூங்கினர். 'கனாக் காணும் காலங்கள்' போட்டிக்கான மொத்தப் புள்ளிகள் 2600. இப்போட்டியில் ஆர்வம் காட்டாத போட்டியாளர்களுக்காக 200 புள்ளிகளும் பகலில் தூங்கிய போட்டியாளர்களுக்காக 600 புள்ளிகளுமாக மொத்தம் 800 புள்ளிகள் கழிக்கப்பட்டு பொருட் கொள்வனவிற்காக 1800 மதிப்பெண்கள் மாத்திரம் வழங்கப்பட்டன. 




இரவு 'நிமிர்ந்து நில்; துணிந்து செல்' போட்டி. இந்த வார வெளியேற்றத்திற்கு தேர்வாகியுள்ள ஐந்து பேரையும் டேனியல் நேர்காணல் செய்கிறார். பிக் பாஸ் டேனியலுக்கு ஐந்து கேள்விகளை வழங்கியுள்ளார். அந்த ஐந்து கேள்விகளையும் டேனியல் அவர்களிடம் கேட்க வேண்டும். ஏனைய போட்டியாளர்கள் வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்கலாம். 




நேர்மையான முறையில் பதில் சொன்னதாக டேனியலால் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாரம் சிறப்பு சக்தி ஒன்று பிக் பாஸினால் வழங்கப்படும். கடந்த முறை பொன்னம்பலத்துக்கு வழங்கப்பட்ட சக்தி போல இருக்குமா? அல்லது வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவாரா? நேர்மையற்ற முறையில் பதில் சொல்லப்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி இரவு பதினோரு மணியளவில் சிறையில் அடைக்கப்படுகிறார். டேனி மும்தாஜிடம் இன்று பகல் சொன்னது போல வைரஸை சுத்தப்படுத்திவிட்டார் போலும். அடுத்து ஆண்டவனின் தீர்ப்பு. பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #SIGARAMCO

Comments