Share it

Sunday, 1 July 2018

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்

'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல். பிக் பாஸ் முதலாம் பருவத்தில் போட்டியாளர்கள் அவர்கள் அவர்களாகவே வாழ்ந்தார்கள், ஆனால் முதலாம் பருவத்தைப் பார்த்துவிட்டு வந்துள்ள இரண்டாம் பருவ போட்டியாளர்கள் உண்மையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு போலியாக நடிப்பதாகக் கூறுகிறார் கமல். 

இரண்டாம் வாரத்தின் நிகழ்வுகள் தொகுத்து ஒளிபரப்பப்படுகின்றன. அதன் பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளிக்கிறார். நிகழ்ச்சியின் பெயர் ஏன் பிக் பாஸ் என்று ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது, இந்த பருவத்தில் உள்ள போட்டியாளர்கள் ஏன் போலியாக இருக்கிறார்கள், நித்யா - பாலாஜி இருவரின் பிரச்சினைகள் மட்டுமே நிகழ்ச்சியில் காட்டப்படுவதாகத் தெரிகிறதே, நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு முகாமை செய்கிறீர்கள், பெண்கள் வேலைக்காரர்களாக போட்டியில் இருந்தபோது ஆண்களுக்கு உணவு ஊட்டுவது போன்ற பணிவிடைகளைச் செய்வது சரியா, விஸ்வரூபம் பாடல் வெளியீடு எப்போது ஆகிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து பதின்மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. காலை எட்டு மணிக்கு போட்டியாளர்கள் பாடலின் மூலம் எழுப்பி விடப்படுகின்றனர். மதியம் நிப்போன் வண்ணப் பூச்சுகளில் போட்டியாளர்கள் தங்கள் கை அடையாளங்களை frame ஒன்றில் பதிக்குமாறு கோரப்படுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் அவை போட்டியாளர்களுக்கு வழங்கி வைக்கப்படும். பதினாறு போட்டியாளர்களினதும் விதவிதமான வண்ணக் கை அடையாளங்களை ஒரு சேரப் பார்க்கும் போது அழகாக இருக்கிறது. 

உணவு மேசையில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சென்றாயன் கைப்பட்டு ஊறுகாய் தவறி மும்தாஜின் உடையில் பட்டு விடுகிறது. உடன் மும்தாஜ் கோபப்பட்டு திட்டிவிடுகிறார். பிறகு சென்றாயனிடம் சமாதானமாகப் பேசுகிறார் மும்தாஜ். ஒரு வேளை ஞாயிறு வெளியேற்றம் கூட அவரது அமைதிக்குக் காரணமாக இருக்கக் கூடும். 

மாலை VIVO V 9 திறன்பேசியில் அனைவரும் குழுவாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர். எல்லாரும் உடனே கடைக்குப் போய் உங்க கைல இருக்கிற தொலைபேசியை குப்பையில் வீசிவிட்டு விவோ திறன்பேசியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் சொல்லுகிறார் போலும். பதின்மூன்றாம் நாள் காட்சிகள் விரைவாகக் காண்பித்து முடிக்கப்படுகின்றன. ஏம்பா இன்னிக்கு மட்டும் பிரச்சினையே இல்லாம இருக்கே, அதெப்படி? 

மீண்டும் கமலின் மேடை. சென்றாயனும் கமலும் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். சென்றாயன் இவ்வாரம் பிக் பாஸ் வீட்டில் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தின் மூலம் உரையாடுகிறார். பின்னர் சில உறை படங்களை (பிக் பாஸ் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்) காண்பித்து போட்டியாளர்களிடம் விளக்கம் கேட்கிறார். போட்டியாளர்களும் கலகலப்பாக தங்கள் விளக்கங்களை வழங்கினர். 

பிறகு விசாரணையைத் துவங்குகிறார் கமல். நீங்கள் நீங்களாக இல்லை. எல்லோரும் முகமூடி போட்டுக் கொண்டு நடிக்கிறீர்கள் என்று கூறுகிறார் கமல். போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் யார் போலியாக இருக்கிறார்கள் என்று வினவுகிறார் கமல். பொன்னம்பலம் கொஞ்சம் உண்மையாக பேசுவதாகத் தெரிகிறது என்று கமல் கூறுகிறார். 

கமல் மும்தாஜைப் பார்த்து நட்சத்திர வாழ்க்கை வாழ்வதற்காக இங்கு வந்தீர்களா என்று கேட்கிறார். இந்த வாரம் எஜமானர் போட்டியின் போது மும்தாஜ் உடை மாற்ற இடமில்லை என்று பிரச்சினை செய்ததைப் பற்றி விசாரிக்கிறார். அந்த பிரச்சினை பற்றி விரிவாக விசாரணை செய்கிறார் கமல். மும்தாஜ் மைக்கை கழற்றியது மிகப் பெரிய விதி மீறல் என்று கூறுகிறார் கமல். உரையாடலின் முடிவில் மும்தாஜை மைக்கை கழற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் வெளியே இருக்குமாறு கமல் கூறுகிறார். இடைவேளை முடிந்து மீண்டும் நிகழ்ச்சி துவங்கும்போது மும்தாஜ் மீண்டும் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அப்போது பிக் பாஸ் மும்தாஜை மறு அறிவித்தல் வரும் வரை வெளியில் இருக்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் பின்னர் சனிக்கிழமை ஒளிபரப்பு முடியும் வரைக்குமே மும்தாஜ் வெளியில் தான் இருந்தார். 

இந்த வார நித்யா - பாலாஜி விவகாரம் தொடர்பாக விசாரிக்கிறார். எஜமானர்கள் போட்டியில் நித்யாவை ஏன் அடுத்த வார வெளியேற்றத்திற்கு பரிந்துரைத்தீர்கள் என்று ஆண்களிடம் விசாரிக்கிறார் கமல். அவர்களுக்காக குறும்படம் ஒன்றைக் காண்பிக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டியில் பெண்கள் எஜமானர்களாக இருந்த போது நடந்த நித்யா - பாலாஜி விவகாரம் தொகுக்கப்பட்டிருந்தது. குறும்படத்தைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை தொடர்கிறது. பாலாஜி மற்றும் நித்யாவிடம் கூட விசாரணை நடக்கிறது. பாலாஜி கோபப்பட்டு நித்யாவிடம் நடந்து கொள்ளும் முறை தொடர்பாக மீண்டும் ஒரு குறும்படம் காண்பிக்கப்படுகிறது. இரண்டாம் குறும்படத்தில் பாலாஜி பேசிய பல சொற்கள் கத்தரி வைக்கப்பட்டிருந்தன. யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்று காலம் பாலாஜிக்கு அறிவுரை கூறுகிறார். யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் நல்ல தமிழில் திட்டப்போவதாகக் கூறிவிட்டு 'கற்கக் கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக' என்னும் குறளைக் கூறுகிறார் கமல். இருவரும் அர்த்தம் புரியாமல் விழிக்கின்றனர். இருவரும் ஆங்கிலத்தில் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார் கமல். 

இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதைக் குறித்த உரையாடல் துவங்குகிறது. முதலில் பொன்னம்பலம் காப்பாற்றப்படுகிறார். மிகுதி மூன்று போட்டியாளர்கள் தொடர்பான முடிவுகள் ஞாயிறு அத்தியாயத்திலேயே காண்பிக்கப்படும். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பாடல் வெளியீடும் ஞாயிறு அத்தியாயத்தில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிடுகிறார் கமல். 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #கமல்ஹாசன் #விஷ்வரூபம் #மும்தாஜ் #பொன்னம்பலம் #நித்யா #பாலாஜி #BiggBoss #BiggBossTamil #VijayTV #VivoBiggBoss #Kamalhassan #Vishwaroopam2 #Mumtaz #Ponnambalam #Nithya #Balaji #Nomination #Eviction #SIGARAMCO #சிகரம்  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts