பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 15 | வைஷ்ணவிக்கு வாழ்க்கை கொடுத்த பிக் பாஸ்!

பதினான்காம் நாளான ஞாயிறு இரவுக் காட்சியில் இருந்து இன்றைய பிக் பாஸ் அத்தியாயம் துவங்குகிறது. பிக் பாஸ் ஞாயிறு அத்தியாயத்தைப் பற்றிய உரையாடல்கள் நடக்கின்றன. போட்டியாளர்கள் பலரும் சோகமாகவே இருக்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு தான் பிக் பாஸ் விளக்குகளை அணைத்தார். அழுதது போதும், போய்த் தூங்குங்கடா என்று சொல்லியிருப்பாரோ?

பதினைந்தாம் நாள் காலை எட்டு மணிக்கு 'சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல' என்ற பாடலோடு பிக் பாஸ் போட்டியாளர்களை எழுப்பி விட்டார். காலைத் தேநீரை பருகுகின்றனர். மஹத் யாஷிகாவை கொஞ்சிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸின் மன்மதன் இவர். போட்டியாளர்கள் எல்லாம் சுமூகமாகவே உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்திருக்கும். ஏதாச்சும் யோசிச்சிருப்பார். 

மஹத் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பெண்களின் படுக்கை அறையில் உரையாடல் நிகழ்கிறது. நண்பகல் 12 மணிக்கு பிக் பாஸ் நித்யா உங்களின் தலைமைப் பொறுப்பு இத்தோடு முடிகிறது என்று அறிவிக்கிறார். டேனி குட் ஜாப் நித்யா என்று வாழ்த்துகிறார். நித்யா என்னிக்குடா தலைவியா இருந்திச்சி? பிக் பாஸ் தானே அவங்கள வச்சி செஞ்சாரு? 



அதனைத் தொடர்ந்து நித்யா மற்றும் அனந்த் ஆகியோர் மூன்றாம் வார வெளியேற்றத்திற்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் இந்த வார தலைவருக்கான போட்டியில் அவர்கள் பங்கெடுக்க முடியாது. ஏனைய போட்டியாளர்கள் இந்த அறிவிப்பின் முடிவில் சில நொடிகள் பிக் பாஸ் ரகசிய அறைக் கதவுகள் திறக்கும் போது உள்ளே வர வேண்டும். முதலில் வரும் இருவர் இந்த வார தலைவருக்கான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார். வைஷ்ணவி மற்றும் சென்றாயன் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

போட்டி என்னவென்றால் அன்பின் அடையாளமான அரவணைப்பை (Hug) இவர்கள் இருவரும் ஏனைய போட்டியாளர்களிடம் இருந்து பெற வேண்டும். யார் கூடுதலான அரவணைப்பைப் பெறுகிறார்களோ அவரே இந்த வாரத் தலைவர். நா சொல்லல? பிக் பாஸ் விவகாரமான ஆளுன்னு... யோசனையைப் பார்த்தீங்களா? சினேகன் மட்டும் இப்போ அங்கே இருந்திருக்கணும்....

சென்றாயன் நா காலைல கக்கூஸ் கழுவுனேனே என்ன யாராவது பாராட்டுனீங்களா? என்று கேட்டு கட்டிப்புடி வைத்தியத்தை செய்து கொண்டிருக்கிறார். ஏன்யா... உனக்கு வேற யோசனையே கிடைக்கலையாடா..? வைஷ்ணவி ஏதோ சொல்லி கண்ணீர் விட்டு ஜனனியிடம் கட்டிப்புடி வைத்தியம் பண்ணுகிறார். ஆனால் சென்றாயன் பண்ணுவது தலைவருக்கான போட்டி என்பதை டேனி கண்டுபிடித்து விடுகிறார். என்ன சென்றாயன் இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே! 

வைஷ்ணவி கட்டிப்புடி வைத்தியத்திற்காக என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். சென்றாயன் வெற்றிகரமாக நிறைவு செய்து பிக் பாஸ் கேமரா முன்னால் சென்று நிறைவு செய்து விட்டதாக சொன்னார். வைஷ்ணவி சென்றாயனை அழைத்து இப்படி பண்ணாதீங்க, விதியை மீறுறீங்க... என்று சொன்னார். 

மாலை ஆறு மணிக்கு போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்த பிக் பாஸ் சென்றாயன் போட்டி அறிவித்த சிறிது நேரத்திலேயே ஏனைய போட்டியாளர்கள் கண்டுபிடித்துவிட்டதால் அவரைத் தகுதி நீக்கம் செய்து வைஷ்ணவியை இந்தவார தலைவராக அறிவித்தார். உடனேயே இந்த வார வேலைகளுக்கான அணிகளை வைஷ்ணவி பிரித்து அறிவித்தார். 



ஐஸ்வர்யா தன்னை இந்த வார வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்குமாறு புலம்பிக் கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பிக் பாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறார். பிக் பாஸ் போட்டியாளர்களை தமிழில் தான் பேச வேண்டும் என எச்சரித்தும் கேட்கவில்லை. இனி யாரவது தமிழில் பேசாவிட்டால் சைரன் ஒலி அடிக்கும். உடனே சம்பந்தப்பட்டவர் நீச்சல் குளத்தில் சென்று குதிக்க வேண்டும். நல்ல தண்டனை பாஸ் இது. 

இந்த வார வெளியேற்றத்திற்கான பரிந்துரை ஆரம்பமாகிறது. நித்யா மற்றும் அனந்த் இந்த வார வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை பரிந்துரைக்க முடியாது. இந்த வாரத் தலைவியான வைஷ்ணவியையும் பரிந்துரைக்க முடியாது. டேனியல் மற்றும் ரித்விகா ஆகியோர் இந்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதால் அவர்களையும் பரிந்துரைக்க முடியாது. நித்யா, அனந்த், பொன்னம்பலம், மும்தாஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் இந்த வார வெளியேற்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இரவு பதினோரு மணிக்கு வீட்டின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Senrayan #Vaishnavi #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!