BBTamil2 | Week 05 | Day 34 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 34 | மூக்குச் சளி வர்றது தப்பா?

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் 34ஆம் நாள் மிக முக்கியமான நாளாக அமைந்தது. பிக் பாஸ் போட்டியாளர்களின் முகத்திரைகளை அவர்களாகவே கிழித்துக் கொண்ட நாள் இது. கமல் சனிக்கிழமை அத்தியாயத்துக்காக மேடைக்கு வந்ததும் ஐந்தாம் வார மீள்பார்வை, வெள்ளிக்கிழமை நிகழ்வுகள், பார்வையாளர்களின் கேள்விகளை முடித்துக் கொண்டு பிக் பாஸ் போட்டியாளர்களைச் சந்தித்தார். 

வெள்ளிக்கிழமை நீச்சல் குளத்தில் போட்டியாளர்கள் சிலர் இருந்திருக்கின்றனர். இதன் போது மஹத் சென்றாயனை தலைகீழாக தூக்க சென்றாயனுக்கு மூக்குச் சளி வந்து நீச்சல் குளத்தில் மிதந்திருக்கின்றது. இதனால் வைஷ்ணவி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். 'மூக்குச் சளி வர்றது தப்பா சார்?' என்று உணர்ச்சி வசப்பட்டார் சென்றாயன். 



அத்துடன் 'இந்த வீட்டில் யாருமே உண்மையாக இல்லை, எல்லோரும் உண்மையாக இருந்தால் இங்கு இரத்த ஆறு தான் ஓடும்' என்று சென்றாயன் சொல்ல பிக் பாஸ் வீட்டிலும் பிக் பாஸ் அரங்கிலும் பலத்த கரகோஷம். 'இங்கேயும் கை தட்றாங்க, வெளிலயும் கை தட்றாங்க, நா என்ன பண்றது?' என்றார் கமல். சென்றாயன் சொன்னது சரி என்றே நமக்கும் தோன்றுகிறது. 

பொன்னம்பலம் இரண்டு விடயங்களை முன்வைத்தார். முதல் வாரத்தில் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த போது பொன்னம்பலத்தின் மீது அருகில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த போது பொன்னம்பலத்தின் மீது அவர் கால் பட்டிருக்கிறது. அதற்கு பொன்னம்பலம் 'இது சரியில்லை, இப்படி இருக்கக் கூடாது' என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் பொன்னம்பலம் அதனை மீண்டும் நினைவு கூர்ந்தார்.



அடுத்து டேனியல், ஐஸ்வர்யா, யாஷிகா மூவரும் குழு சேர்ந்துள்ளனர். டேனியல் மற்ற இருவரின் திறமைகளை மறைத்து தான் மட்டும் முன்னேற நினைக்கிறார். மூவரும் சேர்ந்து ஆட்டம் போடுவது சரியில்லை. டேனியலின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது. ஆகிய கருத்துக்களை பொன்னம்பலம் முன்வைத்திருந்தார். 

பொன்னம்பலத்தின் கருத்துக்கள் ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாடு, கலாச்சாரம் என்கிற ரீதியில் ஐஸ்வர்யாவை குறிப்பிடுவது பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா ஏன் என்று கேட்கப்போக பொன்னம்பலம் கோபப்பட பிரச்சினை பெரிதாகியது. மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பொன்னம்பலத்துடன் சண்டைக்கு வந்தார். இதனை மேடையில் இருந்தே கவனித்த கமல் சனிக்கிழமை அத்தியாயத்தில் போட்டியாளர்களிடம் சொல்லாமலேயே விடைபெற்றார். இதற்கு கமலின் பதில் என்ன? மய்யம் என்ன சொல்லும்? பார்க்கலாம்! 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!