BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 23 | HIGHLIGHTS | ONLINE VOTING | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 23 | திட்டம் போட்டு திருடுற கூட்டம் !
பொன்னம்பலத்துக்கு ஏழரைச் சனி போல. மனிதர் என்னதான் அமைதியாக இருந்தாலும் அவரது வாயைக் கிளறி எதையாவது எடுத்து அதை ஊதிப் பெரிதாக்கி பேன் பார்த்து விடுகிறார்கள். 22ஆம் நாள் இரவு விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவி, சென்றாயன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் ஆண்கள் படுக்கை அறையில் உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலில் 'நா குண்டா இருந்திருந்தா என்னை எப்படி தூக்கியிருப்பீங்க?' என்று வைஷ்ணவி சென்றாயனிடம் கேட்கிறார். அதற்கு சென்றாயன் 'ஆம்பளைக்குன்னு ஒரு வீரம் இருக்கு, வீராப்பு இருக்கு, எவ்ளோ பெரிய பொம்பளையா இருந்தாலும் தூக்கிருவான்னு ஒரு விஷயம் இருக்கு, என்னண்ணே?' என்று சென்றாயன் பொன்னம்பலத்திடம் கேட்கிறார்.
டே எஃபெக்ட்ல (Effect) ஒன்னும் தெரியாது, நைட் எஃபெக்ட்ல நான் தான் வின் பண்ணுவேன்' என்று பதில் கூறுகிறார் பொன்னம்பலம். 'எப்படி சொல்றாரு பாரு' என்கிறார் சென்றாயன். அதற்கு 'அண்ணே, இப்படியெல்லாம் பேசாதீங்கண்ணே' என்கிறார் வைஷ்ணவி. 'நா பகல்ல தூக்க மாட்டேன், ராத்திரில தான் தூக்குவேன்' என்று பொன்னம்பலம் பதில் சொன்னதாக வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் அதைப் பற்றவைத்து அடுத்த நாள் மதியம் வரை போட்டியாளர்களுக்கிடையில் இது குறித்த உரையாடல் நீண்டு செல்கிறது. எஃபெக்ட் (Effect) என்று பொன்னம்பலம் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது, அது மற்றவர்களிடம் பொருள் மாறிச் சென்று விடுகிறது.
பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE?
Created with PollMaker
23ஆம் நாள், மதியம் 02.15 மணி. இந்த வாரத்துக்கான முதல் போட்டி ஆரம்பமாகிறது. மூன்று பேர் திருடர்களாக இருக்க வேண்டும். அவர்கள் திட்டமிட்டு வீட்டிலுள்ள பொருட்களைத் திருட வேண்டும். எந்தெந்த பொருட்களைத் திருட வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். திருடப்படும் பொருட்களுக்கு பிக் பாஸ் பொறுப்பேற்க மாட்டார். இந்த வாரத்துக்கான இப்போட்டியின் பெயர் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. பொதுமக்களைப் பாதுகாக்க மூன்று காவலர்கள் இருப்பார்கள். இப்போட்டியில் பொதுமக்களுக்கு தலா ரூ 1000, காவலர்களுக்கு ரூ 500, திருடர்களுக்கு ரூ 250 பணம் வழங்கப்படும். போட்டியின் முடிவில் எந்த அணி அதிக பணம் வைத்திருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும்.
பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | WHO WILL BE SAVE?
Created with Make a Quiz
காவல்துறை அணி மும்தாஜ், மஹத், சென்றாயன். திருடர்கள் அணி ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா. மீதமுள்ள எட்டு பேர் பொதுமக்களாக இருப்பார்கள். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைத் திருடி இந்த வீட்டை ஸ்தம்பிக்கச் செய்வதே திருடர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்துடன் இன்னும் பல விதிமுறைகள் இந்த விளையாட்டிற்காகக் கொடுக்கப்படுகின்றன.
மதியம் மூன்று மணியளவில் பொன்னம்பலம் இரவு சொன்னதாக சொல்லப்படும் வார்த்தை குறித்து பொன்னம்பலம் வைஷ்ணவியிடம் கேட்கிறார். வைஷ்ணவி நான் யாரிடமும் சொல்லவே இல்லை என்று சாதித்துவிட்டு பின்னர் ஜனனியிடமும் டேனியிடமும் மட்டும் கூறியதாக கூறுகிறார். வைஷ்ணவி இதையெல்லாம் திட்டமிட்டு செய்வது போன்று தெரிகிறது. ஜூலியைப் போல வைஷ்ணவிக்கும் குறும்படம் காட்ட வேண்டும் போல.
03.15 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. திருடர்கள் பல பொருட்களைத் திருடுகிறார்கள். ஆனால் காவல்துறையால் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் யாஷிகா முகப்பூச்சைத் திருடி மாட்டிக் கொள்கிறார். மஹத்துக்கும் யாஷிகாவுக்கும் இடையில் ஒரு பிரச்சினை உருவாகிறது. அதனால் மஹத் பல சந்தர்ப்பங்களில் எரிச்சலும் கோபமும் அடைகிறார்.
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
Created with PollMaker
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்