BBTamil2 | Week 06 | Day 37 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 37 | BIGG BOSS DAILY UPDATE
'எங்க ஏரியா, உள்ள வராத' போட்டி ஆரம்பம். ஆறாம் வாரத்துக்கான போட்டிகள் இன்று முதல் ஆரம்பம். பிக் பாஸ் வீடு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படும். போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்படுவர். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாகப் போட்டிகள் வைக்கப்படும். இரண்டு அணிகளும் அந்த ஐந்து பகுதிகளையும் கைப்பற்றப் போராட வேண்டும்.
அணி A (மஞ்சள்) : மும்தாஜ் (தலைவர்), யாஷிகா, ரித்விகா, வைஷ்ணவி, பாலாஜி
அணி B (நீலம்) : ஜனனி (தலைவர்), டேனி, ஐஸ்வர்யா, சென்றாயன், பொன்னம்பலம்
நடுவர் : ஷாரிக்
போட்டியின் முடிவில் எந்த அணி அதிக பகுதிகளைக் கைப்பற்றுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்ற அணியாகும்.
முதலில் சமையல் பகுதி மற்றும் உணவு மேசைப் பகுதி ஆகியவற்றுக்கான போட்டி. கேசரி மற்றும் மீன் துண்டுகள் வழங்கப்படுகின்றன. அவை சிறு சிறு கோப்பைகளில் இடப்பட்டிருக்கின்றன. எந்த அணி அதிகமாக சாப்பிடுகிறதோ அந்த அணிக்கு சமையல் பகுதி முழுவதும் உரித்தாகும். ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் மட்டுமே பங்குபற்றலாம்.
ரித்விகா மற்றும் சென்றாயன் போட்டியில் பங்குபற்றுகின்றனர். சென்றாயனின் அணியான ஜனனி அணி வெற்றி பெறுகிறது. மும்தாஜின் அணி ஜனனி அணியின் அனுமதி இல்லாமல் சமையல் பகுதிக்குள் உள்நுழைய முடியாது.
அடுத்து முற்றத்தை (Garden Area) சொந்தமாக்கிக் கொள்வதற்கான போட்டி. இராணுவ முகாமில் செய்யப்படும் பயிற்சி மாதிரியில் இரு அணியின் உறுப்பினர்களும் ஒரு முழு சுற்றையும் செய்து முடிக்க வேண்டும். ஜனனியின் அணி வெற்றி பெறுகிறது.
தொடர்ந்து சமையல் பகுதியில் ஜனனியின் அணி உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மும்தாஜ் உள்ளே புகுந்து தனது அணியின் மஞ்சள் நிறக் கொடியை வைத்து சமையல் பகுதி தனது அணிக்கு உரித்தாகிவிட்டதாக தனது அணியினரையும் வரவழைத்து வாதாடுகிறார். அது விதிமீறல் என நடுவர் அறிவித்ததும் சிறிய விவாதத்திற்குப் பின்னர் மும்தாஜ் அணியினர் அங்கிருந்து அகன்றனர்.
சமையல் பகுதிக்குள் மும்தாஜின் அணி வர வேண்டுமானால் அந்த அணியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வந்து உணவருந்த முடியும். சமையல் பகுதிக்குள் வருவதற்கு ஜனனி அணி கொடுக்கும் சிறு சிறு வேலைகளை (Task) செய்ய வேண்டும்.
இரவு உணவு வேளையில் ஐஸ்வர்யாவுக்கும் ரித்விகாவுக்கும் இடையில் பிரச்சினை உருவாகிறது. இந்தப் பிரச்சினையில் ஜனனிக்கும் மும்தாஜிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெறுகிறது. மும்தாஜ் தனது அதிகாரத்தின் மூலம் பிக் பாஸில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறாரா? இல்லை மக்கள் அபிமானம் தனக்குத்தான் அதிகமாக இருக்கிறது என்று மனப்பால் குடிக்கிறாரா? எது உண்மை என்பது போகப்போகத் தெரியும்.

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
This poll has ended at 9/22/2018, 7:00:00 PM
Created with PollMaker
சமையல் பகுதிக்குள் மும்தாஜின் அணி வர வேண்டுமானால் அந்த அணியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வந்து உணவருந்த முடியும். சமையல் பகுதிக்குள் வருவதற்கு ஜனனி அணி கொடுக்கும் சிறு சிறு வேலைகளை (Task) செய்ய வேண்டும்.
இரவு உணவு வேளையில் ஐஸ்வர்யாவுக்கும் ரித்விகாவுக்கும் இடையில் பிரச்சினை உருவாகிறது. இந்தப் பிரச்சினையில் ஜனனிக்கும் மும்தாஜிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெறுகிறது. மும்தாஜ் தனது அதிகாரத்தின் மூலம் பிக் பாஸில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறாரா? இல்லை மக்கள் அபிமானம் தனக்குத்தான் அதிகமாக இருக்கிறது என்று மனப்பால் குடிக்கிறாரா? எது உண்மை என்பது போகப்போகத் தெரியும்.
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்