கூகுள் வரைபடத்துடன் இணையும் இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
இன்றைய தொழிநுட்ப உலகில் நமக்கு கூகுளின் சேவை மிக அத்தியாவசியமானது. ஆண்ட்ராய்டு (Android), ஜி மெயில் (G-Mail), கூகுள் வரைபடம் (Google Map), கூகுள் குரோம் (Google Chrome) என கூகுளின் சேவைப் பட்டியல் மிக நீளமானது. அவற்றுள் கூகுள் மேப் எனப்படும் கூகுள் வரைபடம் மிக முக்கியமானது.
குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை அறிதல், நிகழ் நேர போக்குவரத்து நெரிசல்களை அறிதல், வியாபார நிறுவனங்கள், வங்கிகள், வங்கி தன்னியக்க இயந்திரங்கள், உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், திரையரங்குகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை கண்டறிதல் என கூகுள் வரைபடத்தின் சேவைகள் அளப்பரியவை.
இவ்வாறாக பல சிறப்புகளைக் கொண்ட கூகுள் வரைபடத்தின் ஊடாக இவ்வருட இறுதி முதல் நாளாந்த பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்களையும் இலங்கைப் பயனர்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commission - NTC) தலைவர் எம். ஏ. பி. ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
புதிய வசதியின் மூலம் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். புதிய வசதியில் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து போக்குவரத்து சாதன வழிகள் (Inter-Province bus routes), புகையிரதப் போக்குவரத்து வழிகள், மேல் மாகாண பேரூந்து போக்குவரத்து வழிகள், தென் மாகாண பேரூந்து போக்குவரத்து வழிகள் மற்றும் பல தகவல்கள் கிடைக்கப்பெறும்.
மேலும் சிறந்த போக்குவரத்து முறைகள், பேரூந்து கால அட்டவணை, பேரூந்து வழி இலக்கங்கள் மற்றும் பேரூந்துக் கட்டணங்கள் ஆகிய தகவல்களையும் இந்த வசதியின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகளை மக்கள் துரித கதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும். இவ்வருட இறுதியில் புதிய வசதிகள் அடங்கிய கூகுள் வரைபட செயலியை இலங்கைப் பயனாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
#GoogleMap #NTC #SLTB #SLR #Google #LK #LKA #SriLanka #Lanka #Transport #PublicTransport #Bus #Train #Schedule #TimeTable #கூகுள் #போக்குவரத்து #பஸ் #பேரூந்து #புகையிரதம் #SIGARAMCO #சிகரம்

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்