பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 19 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 19

BB/T/S2/W3/D19/1 
பத்தொன்பதாம் நாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பிக் பாஸ் போட்டியாளர்களை எழுப்பி விடறார். ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கன்னு ஓய்வு குடுத்திருக்கார் போல. காலை 11.30க்கு சென்றாயன் கேமராவில் வீட்டுக்கு செய்தி சொல்லிக்கொண்டிருந்தார். மதியம் 02.00 மணி. 'தண்ணில கண்டம்' போட்டியில் வெற்றி பெற்றதற்காக போட்டியாளர்களுக்கு மேகி நூடுல்ஸ் பரிசாக வழங்கப்படுகிறது. உடனே மேகியை போட்டு வறுத்து சாப்பிட்டுவிடுகிறார்கள். 

மாலை 04.30 மணி. இந்த வார பொருட் கொள்வனவு இடம்பெறுகிறது. 'தண்ணில கண்டம்' போட்டியில் அணிகள் சிறப்பாக செயல்பட்டதாலும் மும்தாஜ் ரகசிய சவாலை சிறப்பாக செய்து முடித்ததாலும் போட்டிக்காக 3000 புள்ளிகளும் ரகசிய சவாலுக்காக மேலதிகமாக 300 புள்ளிகளுமாக மொத்தமாக 3300 புள்ளிகள் வழங்கப்பட்டன. 



BB/T/S2/W3/D19/2 
தேநீர்க் கோப்பையில் ஏதோ முட்டை வாசனை வருவதாக புகார் செய்கிறார் ஜனனி. கழுவியவர் சென்றாயன். அது தொடர்பில் மஹத்துக்கும் சென்றாயனுக்கும் வாய்த்தகராறு ஏற்படுகிறது. மும்தாஜ் சென்றாயனை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார். இந்த வாரம் சமையல் பாத்திரம் கழுவும் அணிக்கு சிக்கல் மேல் சிக்கலாக இருக்கிறது. இதைத்தான் பிக் பாஸ் 'தண்ணில கண்டம்'னு குறியீடா போட்டி மூலமா சொன்னாரோ? 

மாலை வைஷ்ணவியை ரகசிய அறைக்கு அழைத்து கண்டிக்கிறார். இனி யாராவது பகலில் தூங்கினால் அவர்களை நேரடியாக வெளியேற்றத்திற்கு பரிந்துரை செய்வதாக பிக் பாஸ் கூறியதாக வைஷ்ணவி சக போட்டியாளர்களை அழைத்து கூறுகிறார். மஹத் சென்றாயனிடம் சமாதானம் பேச செல்கிறார். அது அவர்கள் இருவருக்கிடையிலும் பஞ்சாயத்தாகி விடுகிறது. ஏம்ப்பா, சமாதானமாத்தான் போங்களேண்டா...

BB/T/S2/W3/D19/3 
இரவு 07.15 மணி. பிக் பாஸ் இன் ஒரு அனுசரணையாளரான 'Mutual Funds' நிறுவனத்தின் சார்பாக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு செடிகள் வழங்கப் படுகின்றன. அவற்றுக்கு போட்டியாளர்கள் நீரூற்றி வளர்க்க வேண்டும். அந்த செடி வளர்வதற்கான பொருட்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். பிக் பாஸில் இருந்து செல்லும்போது தங்கள் அன்புக்குரிய போட்டியாளருக்கு வழங்கலாம். அவர் அதனை வளர்ப்பார். 

பின்னர் போட்டியாளர்கள் தாங்கள் இந்தப் போட்டிக்கு வந்ததால் யாரை நினைத்து வருந்துகிறார்கள் என்பதையும் அவர்களின் அன்பையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம். முற்றத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும். மேலும் அங்கு ஒரு குட்டி பெட்டியில் இதய வடிவமும் ஒரு சிறிய தாளும் இருக்கும். அந்த தாளில் போட்டியாளர்கள் தங்கள் அன்பான செய்தியை யாருக்கு வழங்க விரும்புகிறார்களோ அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய செய்தியை குறுந்தகவலாக எழுதி அந்த பெட்டியில் வைக்க வேண்டும். அது உரியவரிடம் சேர்க்கப்படும். போட்டியாளர்களில் அநேகமானோர் கண்ணீருடன் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். 

BB/T/S2/W3/D19/4 
இரவு பதினோரு மணிக்கு போட்டியாளர்கள் தங்கள் அன்பையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். களஞ்சிய அறை மணியடிக்க போட்டியாளர்களுக்கு பிரியாணி வந்து சேர்கிறது. கூடவே மும்தாஜுக்கு அவரது சகோதரர் அவரது பிறந்தநாளுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையும் வந்து சேர்கிறது. இரவு 12 மணியளவில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. போட்டியாளர்கள் இன்று நம்மைக் கண்ணீர் மழையில் நனைய வைத்து விட்டார்கள். நாளை என்ன நடக்கும்? ஒன்னும் நடக்காது. ஏன்னா நாளைக்கு சனிக்கிழமை. ஆகவே கமல் வாறார். ஆக நாளை சண்டைக்கு விடுமுறை. சந்திப்போம்! 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!