பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 21 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 21 | திறந்தது பிக் பாஸ் சிறை!

BB/T/S2/W3/D21/1 
பிக் பாஸ் ஞாயிறு அத்தியாயம் என்றாலே அதில் முக்கியமானது வெளியேற்றம். இம்முறை அந்த வெளியேற்றத்துடன் சேர்ந்து பிக் பாஸ் சிறைக் கதவுகளும் திறந்து கொண்டன. பாலாஜி மற்றும் நித்யா இருவருக்கிடையிலும் புரிதல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. சனிக்கிழமை அத்தியாயத்தில் மும்தாஜ் மட்டும் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஞாயிறு பாலாஜியும் நித்யாவும் காப்பாற்றப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டனர். மீதமிருப்பவர்கள் அனந்த்தும் பொன்னம்பலமும். உரையாடல்களுக்குப் பின்னர் அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். 



BB/T/S2/W3/D21/2 
அனந்த்தை நக்கலடித்துக் கொண்டே இருந்த டேனி கட்டிப்பிடித்து அழுதார். வெளியேறும் அனந்த்துக்கு பிக் பாஸ் ஒரு வரத்தைக் கொடுத்தார். அதாவது அனந்த்துக்குப் பிடிக்காத செயலைச் செய்த ஒருவரை பிக் பாஸ் சிறைக்குள் தள்ளிவிட்டு வரலாம். இரண்டு வாரத்துக்கு முன்னால் ஐஸ்வர்யாவை பொன்னம்பலம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதற்கு பொன்னம்பலம் ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பொன்னம்பலத்துக்கு சிறைத் தண்டனை வழங்குவதாக அனந்த் அறிவித்தார். 

BB/T/S2/W3/D21/3 
அனந்த் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி மேடைக்கு வந்தார். அனந்த்துடனான உரையாடலுக்குப் பின்னர் மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களைச் சந்தித்தார் கமல். யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத், ஷாரிக் உள்ளிட்டவர்கள் சற்று எல்லை மீறிப் போகிறார்கள் என்கிற உணர்வு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உள்ளது. அதைப் பற்றி கமல் உரையாடினார். பொன்னம்பலமும் மும்தாஜும் தங்கள் கருத்துக்களைக் கூற முற்பட்ட போதும் அவர்களைத் தடுத்த கமல் நீங்கள் பார்க்காததையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக தன்னுடைய அறிவுரைகளைக் கூறி இந்த வாரம் சிறப்பாக நடந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார் கமல். 

BB/T/S2/W3/D21/4 
பொன்னம்பலத்தின் சிறைத் தண்டனையை ரத்துச் செய்யுமாறு போட்டியாளர்கள் கமலிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அது தன்னுடைய பணியல்ல என்று குறிப்பிட்ட கமல் அதைப் பற்றி பிக் பாஸுடன் கலந்துரையாடுமாறு குறிப்பிட்டார். 

ஞாயிறு அத்தியாயத்தில் பிக் பாஸ் வீட்டில் எந்தெந்த பொருட்கள் எங்கெங்கு உள்ளன, எவ்வளவு உள்ளன போன்ற வினாக்களை ஆரம்பத்தில் கமல் போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். கடந்த பருவத்திலும் இதே போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது நமக்கு நினைவிருக்கும். அடுத்து ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஒரு கேள்வியைக் கேட்டார். அவர் அதற்கு ஆம், இல்லை என்று சொல்ல வேண்டும். ஏனையவர்கள் அதனை ஒப்புக் கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அட்டை மூலம் காண்பிக்க வேண்டும். 

மும்தாஜ் இந்த வாரமும் தனக்கு வீட்டின் தலைவியால் கொடுக்கப்பட்டிருந்த தண்டனை ஒன்றை ஏற்க மறுத்திருந்தார். அதனைப் பற்றி கமலோ அல்லது பிக் பாஸோ கேட்கவில்லை. இனி வரும் வாரங்களிலும் இதே நிலை தொடருமா? பொன்னம்பலத்தின் சிறைத் தண்டனை என்னவாகும்? எப்படி இருக்கும்? இன்னும் யாரெல்லாம் பிக் பாஸ் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள்? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!