BBTamil2 | Week 06 | Day 38 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 38 | வாங்க மஹத் !

'மாமா மாமா, ஏம்மா ஏம்மா, சிட்டு போல பெண்ணிருந்தா' என்ற பழைய பாடலுடன் எழுந்தனர் போட்டியாளர்கள். இந்திய எல்லையில் போராடும் இராணுவ வீரர்களை வாழ்த்திப் பேச வேண்டும். பத்துப் போட்டியாளர்களும் பேசியதில் டேனி பேசியது சிறப்பாக இருந்ததாக நடுவர் ஷாரிக் தேர்ந்தெடுக்கிறார். டானிக்கு TVS Star City மோட்டார் சைக்கிள் ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது. அவர் இதனை பிக் பாஸ் வீட்டை விட்டு செல்லும்போது எடுத்துச் செல்லலாம். 



தொடர்ந்து படுக்கை அறையை சொந்தமாக்கிக் கொள்வதற்கான போட்டி. முற்றத்தில் (Garden Area) இரண்டு மாதிரிக் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மூன்று பூட்டுகள் இடப்பட்டிருக்கும். இரு அணிகளில் இருந்தும் ஒவ்வொருவர் வந்து அந்த கதவுகளுக்கான சாவிகள் இடப்பட்டுள்ள மேலங்கியை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அணிந்துள்ள மேலங்கிகளில் எதிரணியின் கதவுகளுக்கான சாவிகளே இருக்கும். 



பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

வைஷ்ணவி - VAISHNAVI
மும்தாஜ் - MUMTAZ
யாஷிகா - YASHIKA
பொன்னம்பலம் - PONNAMBALAM
மஹத் - MAHATH
Created with PollMaker



மேலங்கிகளை அணிந்தவர்கள் முற்றத்தில் எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். இரு அணிகளில் இருந்தும் ஒவ்வொருவர் வந்து தமது அணியின் கதவுகளுக்கான சாவிகளை அவர்களிடம் இருந்து கைப்பற்றி பூட்டுக்களைத் திறக்க வேண்டும். மும்தாஜின் அணி வெற்றி பெற்று தமது மஞ்சள் கொடியை படுக்கையறை வாசலில் பதித்தனர். 




மதியம் போட்டியாளர்களை அழைத்து கூட்டம் போட்டார் பிக் பாஸ். 'எங்க ஏரியா, உள்ள வராத' போட்டியில் பிக் பாஸ் வீட்டின் ஐந்து பகுதிகளில் ஜனனியின் அணி இரண்டு பகுதிகளையும் மும்தாஜின் அணி ஒரு பகுதியையும் கைப்பற்றியுள்ளது. மும்தாஜின் அணி ஒரு பகுதியை மட்டுமே கைப்பற்றியுள்ளதால் மும்தாஜ் தனது அணியில் பலவீனமானவர் என்று கருதும் ஒருவரை சிறைக்கு அனுப்பி விட்டு மஹத்தை சிறையில் இருந்து விடுவித்து தனது அணியில் இணைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறார். 




உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


பாலாஜியை சிறைக்கு அனுப்பி விட்டு மஹத்தை தனது அணியில் மும்தாஜ் இணைத்துக் கொள்கிறார். ஏற்கனவே இந்தப் போட்டியில் மும்தாஜிற்கும் எதிரணிக்குமான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மஹத்தையும் இதில் கோர்த்து விட்டிருப்பது பிக் பாஸ் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் இதனைச் செய்கிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது. அநேகமாக அடுத்த அத்தியாயம் ரணகளமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்!

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!