BBTamil 2 | WEEK 05 | DAY 32| பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 05 | நாள் 32

பிக் பாஸ் பள்ளிக்கூடம் போட்டி இன்றோடு முடிவுக்கு வருகிறது. சென்றாயன் முதலிடத்தைப் பெற்று சிறந்த மாணவனாக தேர்வாகிறார். இது டேனிக்குப் பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா இரண்டாமிடத்தையும் பாலாஜி மூன்றாமிடத்தையும் பெறுகின்றனர். 



ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் பத்துப் பதினைந்து பேர் பிக் பாஸ் இல்லத்திற்கு வருகை தருகின்றனர். போட்டியாளர்கள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். குழந்தைகளுக்கு வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பின்னர் குழந்தைகள் அவர்களைப் பற்றிக் கூறுகின்றனர். 




சின்னா என்னும் சிறுவன் அவனது அம்மா அப்பா சண்டை போட்டு பிரிந்துவிட்டதாகவும் அவர்கள் ஒன்று சேர பிரார்த்திப்பதாகவும் கூறுகிறான். ஆகாஷ் என்னும் சிறுவன் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆலுமா டோலுமா பாடலைப் பாட பொன்னம்பலத்துடன் இணைந்து நடனமாடுகிறான். 




BIGG BOSS TAMIL 2 | WEEK 05 | WHO IS YOUR FAVOURITE CONTESTANT?

ரம்யா - RAMYA
பாலாஜி - BALAJI
ஐஸ்வர்யா - AISHWARYA
பொன்னம்பலம் - PONNAMBALAM
ஜனனி - JANANI


சிறுவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் பேசியத்தைக் கேட்டு பல பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளம் உருகுகின்றனர். சிறுவர்கள் கிளம்பும் நேரம் ஆலுமா டோலுமா பாடல் ஒலிபரப்பாக போட்டியாளர்களும் சிறுவர்களும் ஆடுகின்றனர். 




சிறுவர்கள் சென்ற பின்பு அவர்களைச் சுற்றியே போட்டியாளர்களின் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆகாஷ் என்னும் சிறுவன் 'அம்மா இறந்துட்டாங்க, அப்பா ஓடிப் போயிட்டாரு' என்று கூறினான். ஏனையவர்களும் இது போன்ற வலிகளை இன்று பகிர்ந்து கொண்டிருந்தனர். இவை நம்மையே கலங்கடித்திருக்கின்றன. இதைப் பற்றி கமல் நிச்சயம் சனிக்கிழமை பேசுவார். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!