பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 17 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 17

BB/T/S2/W3/D17/1 
'தண்ணில கண்டம்' என்று எந்த நேரத்தில் போட்டிக்குப் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, இரவும் பகலும் மழையாய்ப் பெய்கிறது. பதினாறாம் நள்ளிரவில் மழையுடன் போட்டி நடந்தது. மும்தாஜுக்கு பிக் பாஸ் ரகசிய சவால் ஒன்றைத் தந்தார். ரகசியமாக அதனை நிறைவேற்ற வேண்டும். கடந்த பருவத்தில் வைரத்தைத் திருடும் போட்டியில் சக்திக்கு ரகசிய சவால் தரப்பட்டதைப் போல் இது. தொடர் மழையால் போய்த் தூங்குங்க என்று போட்டியை இடை நிறுத்தினார் பிக் பாஸ். 



BB/T/S2/W3/D17/2 
'வடக்கே கேட்டுப் பாரு என்னைப் பத்தி சொல்லுவான்' என்ற பாடலுடன் பதினேழாம் நாள் காலைப் பொழுது விடிந்தது. வடக்குல உங்கள பத்தி கேட்டோம் பிக் பாஸ், ஆனா அவங்க நீங்க இவ்ளோ மோசமான ஆள்னு சொல்லலீங்க பிக் பாஸ்... தொடர்ந்து 'தண்ணில கண்டம்' போட்டி மீண்டும் ஆரம்பமானது. இன்றைக்கும் ஆங்கிலத்தில் பேசி இரு அணியினரும் மாட்டிக் கொள்ள தண்ணீர் வாளிகள் இடம்மாறியபடி இருந்தன. 


ஐஸ்வர்யா சமையல் அணியில் ஒத்துழைக்கவில்லை என்றொரு பஞ்சாயத்து. வைஷ்ணவி ரித்விகாவை அணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து தீர்த்து வைத்தார். டேனியும் பாலாஜியும் கொடுத்த பிராது இது. 'இப்படி ஆளாளுக்கு அணி மாறினா எப்படி?' என்றார் டேனி. எப்படியோ அப்படி தான் டேனி தம்பி. அடுத்து இரு அணியினரும் தங்கள் தண்ணீர்த் தொட்டியில் தண்ணீரின் அளவை அதிகரித்துக் கொள்ள ஒரு போட்டி. 



ஒவ்வொரு அணியில் இருந்தும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நீச்சல் குளத்தில் இரண்டு நிறங்களில் ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இடப்பட்டிருக்கும். ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி அதனை எடுத்து வெளியே இருப்பவரிடம் தர வேண்டும். அவர் அங்குள்ள பலகையில் ஒட்ட வேண்டும். 'SAVE WATER' என்கிற வார்த்தையை ஒட்டுகிறதோ அந்த அணியினர் எதிரணியின் தண்ணீர்த் தொட்டியில் இருந்து மூன்று வாளி தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். ஷாரிக்கின் அணி வென்றதாக நடுவர் வைஷ்ணவி அறிவித்தார். 

BB/T/S2/W3/D17/3
தண்ணீரின் அளவை உயர்த்திக் கொள்ள மீண்டும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியில் இருந்தும் ஆறு நபர்கள் போட்டியிட வேண்டும். இரண்டிரண்டு நபர்களாக சேர்ந்து வாளியில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானத்தை ஸ்டிராவின் மூலம் உறிஞ்சி சற்று தூரத்தில் இருக்கும் வாளியில் துப்ப வேண்டும். முதல் இரண்டு பேர் சென்றதும் அடுத்த இரண்டு பேர் அவர்களைத் தொடர வேண்டும். எந்த அணி அதிக குளிர்பானத்தை சேர்க்கிறதோ அந்த அணிக்கு மூன்று வாளி தண்ணீர் பரிசு. 



பாலாஜி நித்யா இணைந்து துப்பியது சிறப்பு. இறுதியில் சிவப்பு அணி சிறந்த துப்பறிவாளனாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'தண்ணில கண்டம்' மீண்டும் ஆரம்பமானது. அப்போது ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் ஏதோ பேச ஜனனி அதை ஆங்கிலத்திலேயே கண்டு பிடிக்க பஞ்சாயத்து துவங்கியது. ஸ்ஸப்பா... மிடில....

BB/T/S2/W3/D17/4 
மும்தாஜ் தனக்கான ரகசிய சவாலை நிறைவேற்றத் துவங்கினார். அதாவது அவர் தன் சொந்த அணிக்கே துரோகம் செய்ய வேண்டும். தன் அணியின் தண்ணீர்த் தொட்டி அளவை 1200 ஆக மாற்ற வேண்டும். இதன்மூலம் முழு வீட்டுக்கும் நன்மையளிக்கும் வகையிலான சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றார் பிக் பாஸ். மற்றவர்களிடம் இதைப் பற்றிப் பேசினாலோ அல்லது மாட்டிக்கொண்டாலோ ரகசிய சவால் ரத்தாகி விடும். 



தவறுதலாக ஆங்கிலத்தில் பேசுவது, மைக்கை அணிய மறப்பது, தண்ணீரை வெளியேற விடாமல் தடுப்பது போல நின்று கொண்டு கசிய விடுவது என்று எல்லா விதமான தவறுகளையும் சரியாகச் செய்து ரகசிய சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்தார் மும்தாஜ். ஒரு வழியாக இரவு 03 மணிக்கு சவாலை நிறைவு செய்து கட்டை விரலை கேமராவுக்கு காண்பித்தார் மும்தாஜ். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியை நிறுத்தினார். அடுத்து மும்தாஜுக்கு எதிராக என்னென்ன பஞ்சாயத்துகள் நிகழப் போகிறதோ? பிக் பாஸுக்கே வெளிச்சம்!

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!