BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 25 | BIGG BOSS COURTS | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 25 | பிக் பாஸ் பஞ்சாயத்து!

புதிய தலைவி நித்யாவின் தலைமையில் பிக் பாஸ் வீடு இயங்குகிறது. 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' போட்டியில் பங்குபற்ற ஜனனியும் பாலாஜியும் தொடர்ந்தும் மறுக்கின்றனர். நித்யாவும் ரித்விகாவும் தொடர்ந்து விளையாட வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். திருடர்கள் காவல் நிலையத்திலேயே தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர். திருடர்கள் மட்டும் தான் போட்டியில் ஒற்றுமையாகவும் முழுமையாகவும் ஈடுபட்டு வருகின்றனர். பிக் பாஸ் அவங்களை சரியாத்தான் பாராட்டியிருக்காரு.




25ஆம் நாள் காலை 'ஏ டசக்கு டசக்கு டும் டும்...' என்ற பாடலுடன் விடிகிறது. காலையிலேயே டேனி புகார் எழுதும் கோப்பைத் திருடிக் கொண்டு வந்துவிடுகிறார். அதன் பின் சென்றாயன் குளிப்பதற்காக எலுமிச்சம் பழம் வாங்க மும்தாஜிடம் பத்து ரூபாய் கேட்கிறார். மும்தாஜ் முடியாது என்று பிடிவாதமாகத் தர மறுக்க அது ஒரு பஞ்சாயத்து. ஏங்க ஒரு எலுமிச்சம் பழத்துக்குப் போரா? குடுத்துருங்களேன்...



உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker



மஹத் குறட்டை விட்டுத் தூங்க அது அடுத்த பஞ்சாயத்தைத் தொடக்கி வைக்கிறது. அது குறித்து வீட்டின் தலைவி மும்தாஜிடம் நித்யா நியாயம் கேட்க வாய்த்தர்க்கம் அதிகமாகிறது. என்னடா இது, வீட்டுத் தலைவிங்கிற மரியாதை கூட இல்லாம.... புடிச்சு சிறைல தள்ளுங்க ஐயா... 




பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE?

ஜனனி - JANANI
நித்யா - NITHYA
வைஷ்ணவி - VAISHNAVI
Created with PollMaker


இன்று ஷாரிக்கும் ஜனனியும் பத்திரிகையாளர்கள். பகலில் ரித்விகா புகார் அளிக்க காவல் நிலையம் வருகிறார். காவல் துறையில் ஒருவரான சென்றாயன் ரித்விகாவிடம் நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்கிறார். அதனை அத்து மீறலாகக் கருதி மஹத் சென்றாயனை சிறைக்குள் அடைத்து விடுகிறார். மஹத்துக்கு ஒரு விருது பொட்டலம் கட்டிருங்க பிக் பாஸ். 




பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | WHO WILL BE SAVE?

யாஷிகா - Yashika Aannand
நித்யா - Nithya
பாலாஜி - Balaji
பொன்னம்பலம் - Ponnambalam
Created with Make a Quiz


மாலை ஆறு மணியளவில் மழை பெய்ய டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மூவரும் மழையில் நனைந்தபடி பேபி பேபி என்று பாட்டுப்பாடியபடி நடனமாடுகின்றனர். எல்லாருக்கும் தமன்னான்னு நெனப்பு போல. போங்கடா, போய் உக்காருங்க.




இரவில் பிக் பாஸ் அதிரடி மாற்றத்தை அறிவிக்கிறார். பிக் பாஸ் இல்ல உறுப்பினர்களின் இந்த போட்டி தொடர்பான குற்றம் குறைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க 'பிக் பாஸ் பஞ்சாயத்து' உருவாக்குகிறார். ஜனனி நாட்டாமையாக இருந்து குறைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். இல்ல உறுப்பினர்களால் 'விஷ பாட்டில்' என்று அழைக்கப்படும் ஜனனி இன்று முதல் 'நாட்டாமை' என்று அழைக்கப்படுவாராக. 

பஞ்சாயத்தில் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஜனனியை ரகசிய அறைக்கு அழைக்கிறார் பிக் பாஸ். திரும்பி வந்த ஜனனி மஹத்தை சிறையில் அடைப்பதாக தீர்ப்பு வழங்குகிறார். மஹத் தான் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று தானே ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருடர்கள் தீர்ப்பில் நியாயம் இல்லை என்று கருதுகின்றனர். 




இன்று பாரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. நாளையுடன் போட்டிகள் எல்லாம் முடிந்து விடும். இந்தப் போட்டியின் மூலம் போட்டியாளர்களுக்கிடையில் குழுக்கள் உருவாகியிருக்கின்றன. கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. கமலுக்காக குறும்படங்களும் பல பஞ்சாயத்துகளும் காத்திருக்கின்றன. கமல் என்ன செய்வார்? விரிவாக விசாரித்துத் தீர்ப்பளிப்பாரா? அல்லது மேம்போக்காக கடந்து சென்று விடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!