BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 28 | NITHYA ELIMINATE | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 28 | நித்யா வெளியேற்றம் | ஜெயிச்சிட்டு வாங்கப்பா !

பிக் பாஸ் நான்காம் வாரத்தில் வெளியேறப்போவது யார்? நித்யாவா? யாஷிகாவா? பாலாஜியா? அல்லது வெளியேற்றம் இல்லையா இப்படிப் பல கேள்விகளுடன் மக்கள் கமலின் வருகையை எதிர்கொண்டனர். கமல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே போட்டியாளர்களுக்கு டப்ஸ்மாஷ் போட்டி ஒன்றை வைத்தார். சென்றாயன், வைஷ்ணவி, மும்தாஜ் - டேனியல், சென்றாயன் - யாஷிகா, பொன்னம்பலம் - வைஷ்ணவி ஆகியோரின் காணொளிகளுக்கு போட்டியாளர்கள் டப்ஸ்மாஷ் செய்தது அருமையாக இருந்தது. கமலும் பாராட்டினார். ஆனால் பின்னர் வைஷ்ணவி பொன்னம்பலம் தனக்கு டப்ஸ்மாஷ் செய்தது தவறானது என்று குறைபட்டுக் கொண்டார். 



இந்தவாரம் குழுவாக மாறி வெளியேற்றத்திற்குப் பரிந்துரை செய்த அடிப்படையிலேயே போட்டியாளர்களை அமர வைத்து ஒவ்வொருவரும் ஏன் தமது குழுவில் இருந்து ஒருவரை வெளியேற்றத்திற்குத் தேர்வு செய்தனர் என்று காரணம் கேட்கிறார் கமல். 

தொடர்ந்து பாலாஜி காப்பாற்றப்படுகிறார். வெளியேறப்போவது அவராக இருக்குமா அல்லது இவராக இருக்குமா என்கிற பதற்றத்திலேயே போட்டியாளர்களை வைத்திருந்தார் கமல். வெளியேற்றம் இல்லாமல் கூட இருக்கலாம் என்று போட்டியாளர்கள் பேசிக் கொண்டனர். யாஷிகா மற்றும் நித்யா ஆகிய இருவரில் நித்யா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்கிறார். இறுகிய முகத்துடன் காணப்படுகிறார் பாலாஜி. 



'கோபப்படாத, வின் பண்ணிட்டு வா' என்பது தான் நித்யா பாலாஜிக்கு வழங்கிய அறிவுரை. நித்யாவுக்கும் பாலாஜிக்கும் இடையில் புரிதல் அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது. குழந்தையின் நலனுக்காக இருவரும் மீண்டும் இணைந்து வாழக்கூடும். அனால் நித்யாவின் இந்த வெளியேற்றம் சிலவேளைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வெளியுலகில் சுற்றங்களின் கருத்துகள், கடந்த மற்றும் எதிர்வரும் பிக் பாஸ் ஒளிபரப்புகள் ஆகியவை நிச்சயம் தாக்கம் செலுத்தும். பாலாஜி இப்போது போலவே தனது வெளியேற்றம் வரைக்கும் நீடித்தால் நல்லது. 

நித்யா மேடைக்கு வந்ததும் அவரது பிக் பாஸ் பயணம் குறுந் தொகுப்பாக ஒளிபரப்பாகிறது. ரசிக்கும்படியான அழகிய தொகுப்பாக அது அமைந்திருந்தது. பின்னர் போட்டியாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய வெண்பலகை மேடையில் வைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொருவரினதும் குணாதிசயங்களை எழுதுமாறு கேட்கப்படுகிறார் நித்யா. பாலாஜி - அன்பு, சென்றாயன் - பாசம், ஷாரிக் - Play Boy (லீலா விநோதன் என்று மொழிபெயர்த்தார் கமல்), மும்தாஜ் - நாடக ராணி (Drama Queen), ரம்யா - உண்மை, பொன்னம்பலம் - அக்கறை, ரித்விகா - பொறுமை, டேனி - வளர்ச்சி போன்ற குணாதிசியங்களை ஒவ்வொருவருக்கும் வழங்கினார் நித்யா. 



எழுதி முடிக்கும் போது நித்யாவின் மகள் போஷிகா மேடைக்கு ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். வீட்டுக்குள் இல்லாமலேயே பிக் பாஸ் வீட்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் என்று போஷிகாவுக்கு அறிமுகம் கொடுத்தார் கமல். போஷிகாவிடமும் நித்யாவிடமும் பாலாஜியிடம் பேசலாமா என்று அனுமதி கேட்கிறார். இருவரும் சம்மதம் தெரிவிக்க அகம் டிவியில் தோன்றினார் பாலாஜி. 

போஷிகா பேச ஆரம்பித்ததும் பாலாஜியின் கண்களில் கண்ணீர். பேச வார்த்தைகள் இல்லை. பாலாஜி எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி இது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களின் பின்னரான சந்திப்பு இது. சக போட்டியாளர்களின் கண்களிலும் கண்ணீர். கமலும் கூட கண்கலங்கியதை அவதானிக்க முடிந்தது. 'உன்னுடைய சுதந்திரத்தில் புது பாலாஜி தலையிட மாட்டேன்' என்று நித்யாவுக்கு பாலாஜி வாக்களிக்கிறார். நல்ல முடிவு பாலாஜி. 



போஷிகா - பாலாஜி சந்திப்பின் போது மேடையில் நித்யாவால் எழுதப்பட்ட வெண்பலகையும் போட்டியாளர்களின் கண்ணில் பட்டுவிட்டது. அதை பற்றிய பேச்சுக்களும் போஷிகாவைப் பற்றிய பேச்சுக்களுமாக அன்றைய இரவுப் பொழுது பிக் பாஸ் வீட்டில் கழிந்தது. நித்யாவுக்குப் பின் உறவுகள் என்று பிக் பாஸ் வீட்டில் யாரும் யாருக்கும் இல்லை. இனி வரும் நாட்களில் பிக் பாஸின் ஆட்டம் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | வெளியேறப்போவது யார்? 


'சிகரம்' வாக்களிப்பு முடிவுகள். 


பொன்னம்பலம் - 164 வாக்குகள் - 36% 
பாலாஜி - 129 வாக்குகள் - 29% 
நித்யா - 116 வாக்குகள் - 26% 
யாஷிகா - 43 வாக்குகள் - 10% 

நமது 'சிகரம்' வாக்களிப்பு முடிவுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரத்தில் மிகச் சரியாகப் பொருந்திப் போயின. அனால் இவ்வாரம் அது நடக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக யாஷிகாவை வெளியேற்றாது என்ற கருத்து உலவி வந்தது. சில நேரங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம். 



Tamil Glitz இணையத்தள முடிவுகள்: 


பொன்னம்பலம் - 168,635 வாக்குகள் - 26% 
பாலாஜி - 159,856 வாக்குகள் - 25% 
நித்யா - 158,926 வாக்குகள் - 24% 
யாஷிகா - 158,571 வாக்குகள் - 24% 

இந்த மாதிரி வாக்கெடுப்பைப் போன்று ஒன்றுக்கொன்று நெருங்கிய வாக்களிப்பு முடிவுகள் பிக் பாஸிலும் பெறப்பட்டிருக்கலாம். எது எப்படியோ நித்யாவுக்கு ஆப்பு வைத்தாகி விட்டது. அடுத்த ஆப்பு யாருக்கோ?  

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!