BBTamil 2 | Week 06 | Day 40 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 40

'எங்க ஏரியா உள்ள வராத' போட்டியின் இறுதிப் பகுதி. 39ஆம் நாளின் காட்சிகள் இன்னும் முடியவில்லை. பிக் பாஸ் வீட்டின் ஐந்தாவதும் இறுதியுமான பகுதியை கைப்பற்றுவதற்கான போட்டி ஆரம்பமானது. Living Area எனப்படும் வரவேற்பறைக்கான போட்டி இது. போட்டி நடைபெறும் இடத்தில் மஞ்சள் மற்றும் நீல நிற தலையணைகள் வைக்கப்பட்டிருக்கும். இரண்டு அணிகளும் தமது அணியின் நிறத் தலையணைகளை ஒரு முனையில் இருந்து மறு முனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எதிரணி அதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். 



விளையாடும் இருவர் அதைத் தடுக்கும் இருவர் என நால்வர் களத்தில் இருப்பர். கொடுக்கப்பட்ட நேரத்தில் எந்த அணி அதிக தலையணைகளைக் கொண்டு சேர்க்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும். மும்தாஜின் அணி வெற்றி பெற்று வரவேற்பறையையும் உரித்தாக்கிக் கொள்கிறது. இப்போது மும்தாஜ் அணிக்கு மூன்று இடங்களும் ஜனனி அணிக்கு இடங்களும் உரித்தாகியுள்ளன. 

அடுத்து பிக் பாஸ் தனது திருவிளையாடலைக் காட்டுவதற்கான நேரம். இரு அணிகளும் மற்றைய அணியின் இடங்களைக் கைப்பற்றி ஆக்கிரமிக்கலாம். ஒரு முறை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முடியும். போட்டியாளர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகின்றன. சிலருக்கு காயங்கள் கூட ஏற்படுகின்றன. போராட்டத்தின் முடிவில் எதுவும் மாறவில்லை. 



பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

வைஷ்ணவி - VAISHNAVI
மும்தாஜ் - MUMTAZ
யாஷிகா - YASHIKA
பொன்னம்பலம் - PONNAMBALAM
மஹத் - MAHATH
Created with PollMaker


40ஆம் நாளில் வெற்றி பெற்ற மும்தாஜ் அணி மட்டுமே பொருட் கொள்வனவில் (Luxury Budget) ஈடுபடுகின்றனர். ஜனனி அணியினரை படுக்கை அறையில் காத்திருக்குமாறு கூறுகிறார் பிக் பாஸ். ஜனனி இதற்காக வருத்தப்பட்டார். பாலாஜியின் சிறைத் தண்டனை முடிவடைகிறது. நடுவர் ஷாரிக்கும் மும்தாஜ் அணியுடன் இணைந்து பொருட் கொள்வனவில் ஈடுபடுகின்றார். 

மும்தாஜ் அணியில் இருந்து யாஷிகாவும் ஜனனி அணியில் இருந்து சென்றாயனும் சிறப்பாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்டு அடுத்தவார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். மும்தாஜ் அணியில் இருந்து மும்தாஜும் ஜனனி அணியில் இருந்து பொன்னம்பலமும் மோசமாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்டு ஒரு கூடை சப்பாத்துக்களை துடைத்து பூச்சுப் பூசும் படி பணிக்கப்படுகின்றனர். 

அடுத்த வார தலைவருக்கான போட்டி இன்றே நடாத்தி முடிக்கப்படுகிறது. முற்றத்தில் போடப்பட்டுள்ள செட்டிநாடு அமைப்பில் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை மணி அடிக்கும் போதும் குறுகிய வாயிலைக் கொண்ட அந்த அமைப்பிற்குள் போட்டியாளர்கள் செல்ல வேண்டும். கடைசியாக செல்லும் இருவர் விலக்கப்படுவர். இறுதியாக ஐஸ்வர்யா வெற்றி பெறுகிறார். 

ஐஸ்வர்யா யாஷிகா இருவருக்கிடையில் விரிசல் உருவாகியிருக்கிறது. யாஷிகா மும்தாஜுக்கு ஆதரவாக பேசுகிறார். டேனி சில நாட்கள் மும்தாஜுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது அந்த நெருக்கம் குறைந்து விட்டது. இந்த வார போட்டிகளின் மூலம் மும்தாஜுக்கு எதிரானவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சனிக்கிழமை அத்தியாயத்தில் கமலின் விசாரணைகள் எந்தக் கோணத்தில் அமையும்? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!