BIGG BOSS TAMIL 2 | Week 06 | Day 42 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 42 | ரகசிய அறையில் வைஷ்ணவி

கலாச்சாரம். இந்த பிக் பாஸ் வீட்டில் கலாச்சாரம் என்கிற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது. குறிப்பாக பொன்னம்பலம் தான் இந்த கலாச்சாரம் குறித்து அதிகம் பேசுபவர். பொன்னம்பலத்துக்கு ஒரு குறும்படம். இந்த வாரம் போட்டிகளின் போது ரித்விகா மற்றும் யாஷிகாவிடம் நடந்து கொண்ட விதத்தை அந்தக் குறும்படம் காண்பித்தது. அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று இருவருமே தெரிவித்தனர். பொன்னம்பலம் நாம் இருக்கும் இடத்திற்கேற்ப ஆடை அணிந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் எனக் கூறினார். 

கமல் எதுவுமே பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். உண்மை தான். நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவுமே தவறாகத்தான் தெரியும். ஆனால் பொன்னம்பலம் ஆடைக் கலாச்சாரத்தை மட்டுமே கலாச்சாரம் என இந்த பிக் பாஸ் வீட்டில் பேசவில்லை. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னரும் யாஷிகா, மஹத், ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் ஆகியோர் ஒரே கட்டிலில் குறும்பு செய்து விளையாடுவதையும் தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் தவறிழைக்காமல் இருக்கலாம். ஆனால் விளக்கணைத்த பின்னரும் பேசுவதைக் குறையுங்கள் என்றாவது கமல் சொல்லியிருக்கலாம். 

முன்னதாக போட்டியாளர்களின் சமையல் குறித்த ஒரு குறும்படம். வைஷ்ணவி தன் அறுந்துபோன செருப்பைத் தைத்துவிட்டு அதே கையுடன் சமையல் செய்கிறார். ஜனனி வேறு அதை ருசி பார்க்கிறார். மற்றும் சிலரின் சமையல் காட்சிகளும் விரிகின்றன. மும்தாஜ் அவ்ளோ தான் போங்க. கமல் சென்றாயனை மும்தாஜ் தனது சமையல் அணியில் அடுத்த வாரம் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார். ம்ம்... அப்போ நல்ல சண்டை இருக்கு...

வெளியேற்றம். அதுதான் இல்லை. நாம் மாங்கு மாங்கு என்று வாக்களித்தால் பிக் பாஸ் அதையெல்லாம் போங்காக மாற்றி விட்டார். வைஷ்ணவி போலியாக வெளியேற்றப்பட்டார். அதாவது கடந்த பருவத்தில் சுஜா வருணி ரகசிய அறையில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டது போல வைஷ்ணவியும் தங்க வைக்கப்படுகிறார். ஏன் பிக் பாஸ் உங்களுக்கு இந்தக் கொலைவெறி? 

பிக் பாஸ் தமிழ் - வாரம் 06 - வாக்களிப்பு முடிவுகள் 

மும்தாஜ் - 50 வாக்குகள் - 28% 
பொன்னம்பலம் - 44 வாக்குகள் - 24% 
வைஷ்ணவி - 33 வாக்குகள் - 18% 
யாஷிகா - 29 வாக்குகள் - 16% 
மஹத் - 24 வாக்குகள் - 13% 

மக்கள் வெளியேற்றம் - வைஷ்ணவி (போலியான வெளியேற்றம்) 



தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல். வைஷ்ணவியின் வெளியேற்றம் குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் கமல். வைஷ்ணவி ரகசிய அறையில் இருந்து இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து போட்டியாளர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வைஷ்ணவியை கமல் சந்திக்கிறார். 

கமல் விடைபெற்ற பின் பிக் பாஸ் வீட்டின் காட்சிகள் விரிகின்றன. பெண் போட்டியாளர்கள் சிலர் காலியாக இருந்த கட்டிலின் கீழ்ப் பகுதியில் ஒளிந்து கொண்டு பாலாஜி, பொன்னம்பலம் மற்றும் டேனி ஆகியோரை திறக்கச் சொல்லி விளையாட்டுக் காட்டுகின்றனர். 

ஏழாம் வாரத்துக்கு ஐஸ்வர்யா தலைவர். இப்போதெல்லாம் அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார். சென்றாயன், பாலாஜி மற்றும் மும்தாஜ் சமையல் அணியில். பாலாஜி இரண்டு பக்கமும் பேசுவார். மோதல்கள் வெடிக்குமா? ஐஸ்வர்யா சிறந்த தலைவர் என்னும் பட்டத்தை வெல்வாரா? வைஷ்ணவி மீண்டும் உள்நுழையும்போது ஒவ்வொருவரின் மன வெளிப்பாடுகள் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

  1. என் தொலைப்பேசி எண்கள்
    வாட்செப்பில் கவிதை குழவில் இணைக்கவும்

    0033 6 51 57 47 58

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!