Share it

Wednesday, 11 July 2018

BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 24 | RAMYA OUT; NITHYA IN | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 24 | ரம்யா வெளியே; நித்யா உள்ளே | ONLINE VOTE

பொன்னம்பலம் வேலியில் போகிற ஓணானை இழுத்துவிட்டுக் கொள்வது போல தானே தேடிச் சென்று பிரச்சினைகளை இழுத்துக் கொள்கிறார். 23ஆம் நாள் இரவுக் காட்சியுடன் பிக் பாஸ் துவங்குகிறது. திருடர்கள் தயிரைத் திருடிச் செல்ல காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் திருடர்களை சூழ்ந்து கொண்டனர். ஓடி வந்த பொன்னம்பலம் தயிரைக் கீழே தட்டி விடுகிறார். பெரியதாக இல்லாவிட்டாலும் சிறிது நேரம் பஞ்சாயத்தாகிறது. 24ஆம் நாள் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவாகின்றன. வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே போட்டி தொடர்கிறது. 23ஆம் நாள் இரவில் காவல்துறை திருடர்களை உணவுப் பொருட்களைத் திருட வைத்து அதைப் பங்கு போட்டுக்கொள்ள பேசிக்கொண்ட முரணான காட்சிகளும் அரங்கேறியதை நாம் கண்டோம். பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE?

ஜனனி - JANANI
நித்யா - NITHYA
வைஷ்ணவி - VAISHNAVI
Created with PollMakerமதியம் போட்டியில் பொதுமக்களுள் இருவரை தொலைக்காட்சிக்கு செய்தி சேகரிப்பவர்களாக பிக் பாஸ் அறிவிக்கிறார். பாலாஜி செய்தி சேகரிப்பவராகவும் ரம்யா ஒளிப்பதிவாளராகவும் செயல்படுகின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் பாலாஜிக்கும் மஹத்துக்கும் சிறு வாய்த்தர்க்கம் ஏற்படுகிறது. 

திருடர்களுடன் காவல்துறை பேசிக் கொண்டதன் அடிப்படையில் யாஷிகா மும்தாஜுக்கு தான் ஆப்பிளை ஒளித்து வைத்த இடத்தைக் காட்டுகிறார். மும்தாஜ் மூன்று ஆப்பிள்களைக் கைப்பற்றி அதனை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்கிறார். ஜனனி உணவுப் பொருட்களை காவல்துறை பொதுமக்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என வாதிடுகிறார். இந்த விவாதம் நீண்டு பாலாஜிக்கும் மஹத்துக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் முற்றி பஞ்சாயத்து பெரிதாகிறது. 
பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | WHO WILL BE SAVE?

யாஷிகா - Yashika Aannand
நித்யா - Nithya
பாலாஜி - Balaji
பொன்னம்பலம் - Ponnambalam
Created with Make a Quiz


பின்னர் பாலாஜி அழுது கொண்டிருக்க மஹத் சமாதானப்படுத்துகிறார். காலை தவறொன்றை இழைத்ததற்காக கைது செய்யப்பட்ட நித்யா இன்னமும் விடுதலை ஆகவில்லை. பொதுமக்களாக இருப்பவர்கள் மஹத் - பாலாஜி இடையிலான விவாதத்தைத் தொடர்ந்து விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றனர். பின்னர் திடீரென விளையாடுவதாக கூறுகின்றனர். விளையாட்டு ஒரு குழப்ப நிலையிலேயே தொடர்கிறது. 

மாலை நித்யாவை விடுதலை செய்து திருடர்களும் காவல்துறையினரும் உணவைப் பெற்றுக்கொள்கின்றனர். பகல் உணவு விடயத்தில் சென்றாயனுக்கும் ஷாரிக்குக்கும் மதியத்தில் ஓர் விவாதம் நடக்கிறது. பின்னர் திருடரான டேனியல் சென்றாயனுக்கு ஆப்பிள் கொடுக்கிறார். என்னடா நடக்குது இங்க? காவல்துறைக்கு திருடர்கள் உணவிடுவதா? 

இரவு சூழும் நேரத்தில் பொதுமக்கள் மீண்டும் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து தங்கள் மிகுதிப் பணத்தை ஒப்படைத்து விடுகின்றனர். காவல்துறையினர் திருடர்களுக்கு சார்பாகவே செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. பிக் பாஸ் அடுத்து சொல்லப் போகும் விடயத்தில் தான் இந்த விளையாட்டின் அடுத்த கட்ட நகர்வு தீர்மானிக்கப்படும். 

இந்த வார வெளியேற்றத்திற்கு மூன்று அல்லது நான்கு பேரை ஒன்றாக அழைத்து அவர்கள் தங்களுக்குள்ளேயே கலந்துரையாடி ஒருவரைப் பரிந்துரை செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்ததில் இருந்தே போட்டியாளர்களுக்குள் பிரச்சினைகள் அதிகமாகியிருக்கின்றன. 
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


இரவு 09.45க்கு போட்டியாளர்களை அழைக்கும் பிக் பாஸ் இந்த வீட்டின் விதிமுறைகளை மீறுதல், பொதுமக்களுடன் இணைந்து போட்டியை புறக்கணித்தல் ஆகிய குற்றங்களுக்காக வீட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கிறார். அத்துடன் ரம்யா அடுத்த வார வெளியேற்றத்திற்கும் நேரடியாகப் பரிந்துரைக்கப்படுகிறார். மேலும் பொதுமக்களில் இருந்து ஒருவர் யாருடனும் கலந்துரையாடாமல் தானாக முன்வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கிறார். உடனடியாக நித்யா முன்வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 

இந்த விளையாட்டு இனி எப்படித் தொடரப் போகிறது? பொதுமக்களில் நித்யா தலைமைப் பொறுப்பை ஏற்பதால் அவர் விளையாட்டில் பங்குபற்றியே ஆக வேண்டும். ரம்யா அடுத்த வார வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் விளையாட்டில் தொடராமல் இருக்க முடிவெடுக்கக் கூடும். பொதுமக்களில் ஏனையோர் தொடர்ந்தும் விளையாடுவார்களா? நித்யாவின் தலைமைப் பொறுப்பில் ஒன்றிணைவார்களா? நித்யாவின் தலைமையில் போட்டி தொடர்ந்தால் ரம்யாவின் பிரதிபலிப்பு எவ்வாறாக இருக்கும்? நித்யா தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது குறித்த பிரதிபலிப்பு பாலாஜி மற்றும் ஏனைய போட்டியாளர்களிடத்தில் எவ்வாறாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts