BBTamil2 | Week 06 | Day 36 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | நாள் 36 | கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்க!

இந்த வார வெளியேற்ற பரிந்துரை அனைவரின் முன்னிலையிலும் இடம்பெற்றது. கடந்த பருவத்திலும் இதே போல நடைபெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது. அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற்ற பரிந்துரையை செய்ய முடியாது. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வேளைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். பிக் பாஸ் பெயர் சொல்லி அழைக்கும் போட்டியாளர் தான் வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்க விரும்பும் இரு போட்டியாளர்களை முற்றத்திற்கு (Garden Area) அழைத்து வர வேண்டும். 

அங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற மைப்பூச்சு வைக்கப்பட்டிருக்கும். இரு போட்டியாளர்களின் முகத்திலும் கருப்பு மற்றும் சிவப்பு நிறப் புள்ளிகளை இட்டு தான் வெளியேற்ற விரும்புவதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரின் பரிந்துரைகளின் போதும் எல்லாப் போட்டியாளர்களும் முற்றத்திற்கு வந்திருந்தனர். தொடர்ந்து அவரவர் வேலைகளுக்கு திரும்ப வேண்டும். சிறிது நேர இடைவெளியின் பின்னர் பிக் பாஸ் அடுத்த போட்டியாளரை அழைப்பார். இப்படியே தொடர்ந்து நடைபெற்றது. 



ஒவ்வொருவரின் பரிந்துரை விபரங்களும் இதோ: 

வைஷ்ணவி : மும்தாஜ் - டேனி 
பொன்னம்பலம் : யாஷிகா - டேனி 
ஷாரிக் : வைஷ்ணவி - பொன்னம்பலம் 
ரித்விகா : யாஷிகா - ஐஸ்வர்யா 
மும்தாஜ் : வைஷ்ணவி - சென்றாயன் 
டேனி : வைஷ்ணவி - பொன்னம்பலம் 
சென்றாயன் : வைஷ்ணவி - மும்தாஜ் 
யாஷிகா : வைஷ்ணவி - பொன்னம்பலம் 
ஜனனி : யாஷிகா - ஐஸ்வர்யா 
பாலாஜி : மும்தாஜ் - ஐஸ்வர்யா 
ஐஸ்வர்யா : வைஷ்ணவி - பொன்னம்பலம் 

மஹத் இந்த வார வெளியேற்றத்திற்கு இன்று நேரடியாக பிக் பாஸினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவர் இந்த நிகழ்வில் பங்கு கொள்ளவில்லை. 

மதியம் குறும்படம் ஒன்றை போட்டியாளர்களுக்காகத் திரையிட்டார் பிக் பாஸ். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்ற விதிமீறல்களின் தொகுப்பாக அமைகிறது. தூங்குவது, தமிழைத் தவிர பிற மொழிகளில் பேசுவது, போட்டிகளுக்கு நேரத்துக்கு சமூகமளிக்காதது உள்ளிட்ட விதி மீறல்கள் அக்குறும்படத்தில் இடம்பெற்றிருந்தன. 

இவற்றில் அதிக விதிமீறல்களில் ஈடுபட்ட ஒருவரை அனைவரும் இணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மஹத் உடனடியாக சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கான உணவு பிக் பாஸினால் வழங்கப்படும். வீட்டிலுள்ளவர்கள் உணவு வழங்கக் கூடாது. மேலும் இந்த வார வெளியேற்றத்திற்கு மஹத் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார். இனி ஒவ்வொரு விதி மீறல்களுக்குமான தண்டனை இதை விட மிகக் கடுமையாக இருக்கும் என போட்டியாளர்களை எச்சரிக்கிறார் பிக் பாஸ். 

போட்டியாளர்கள் அதிக விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாலும் தலைவர்களும் கூட விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாலும் இந்த வாரத்திற்கு தலைவர் இல்லை. பின்னர் மும்தாஜ் அனைவரையும் அழைத்து சமையல் மற்றும் சுத்தப்படுத்துதல் அணிகளை வீட்டின் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்ல ஏற்படுத்துகிறார். 

இந்த வாரம் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பொன்னம்பலத்தை ஹிந்தியில் தங்களுக்குள் திட்டிய காட்சியும் மதியம் ஒளிபரப்பான குறும்படத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் தமிழ் உப தலைப்புகள் காணப்படவில்லை. ஹிந்தியில் என்ன பேசினார்கள் என்பதை வைஷ்ணவி சக போட்டியாளர்கள் சிலருக்கு மொழி பெயர்த்துக் கூற அது வில்லங்கமாகிவிடுகிறது. ஐஸ்வர்யா வைஷ்ணவியை கோபமாகத் திட்டி விடுகிறார். 

மதியம் நிகழ்ந்து முடிந்த இந்தப் பிரச்சினையை வைஷ்ணவி மாலையில் மீண்டும் ஐஸ்வர்யாவிடம் சென்று ஆரம்பிக்கிறார். சக போட்டியாளர்கள் தடுத்தும் கேளாமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் வைஷ்ணவி. வைஷ்ணவி வேண்டுமென்றே வலிந்து ஒரு சிக்கலான சூழலை உருவாக்க திட்டமிடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. 

இந்த வார வெளியேற்றத்திற்குத் தேர்வானவர்கள்: 

வைஷ்ணவி 
மும்தாஜ் 
ஐஸ்வர்யா 
யாஷிகா 
பொன்னம்பலம் 
மஹத் 



பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 06 | யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

வைஷ்ணவி - VAISHNAVI
மும்தாஜ் - MUMTAZ
யாஷிகா - YASHIKA
பொன்னம்பலம் - PONNAMBALAM
மஹத் - MAHATH
Created with PollMaker



* நீங்கள் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உங்கள் அபிமான போட்டியாளருக்கு வாக்களிக்கலாம். 

* ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் சனிக்கிழமை வரை 'சிகரம்' தளத்தில் வாக்களிக்கலாம்!

கடந்த வாரம் போட்டியின் போது ஐஸ்வர்யாவுக்கு விசேட சக்தி ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சக்தியின் மூலம் என்ன செய்யலாம் என்பதை பிக் பாஸ் இன்று அறிவித்தார். இந்த வார வெளியேற்றத்தில் இருந்து ஐஸ்வர்யா சக போட்டியாளர் ஒருவரையோ அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கிறார். ஐஸ்வர்யா யாஷிகாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்கிறார். 

ஐஸ்வர்யா யாஷிகாவிடமும் மஹத்திடமும் பொன்னம்பலம் இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவார் எனக் கூறுகிறார். ஜனனி பாலாஜியிடம் பொன்னம்பலம் இந்த வாரம் வெளியேற மாட்டார் எனக் கூறுகிறார். இதில் யார் கூறுவது உண்மை? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!