சிகரம் இன்று - SIGARAM TODAY - 01-07-2018

ஓராண்டில் 'சிகரம்' இணையத்தளம் !

'சிகரம்' இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டில் கையெழுத்துப் பத்திரிகையாக தனது பயணத்தைத் தொடங்கியது 'சிகரம்'. தொடர்ந்து இரண்டு வருடங்கள் கையெழுத்துப் பத்திரிகையாகவே செயற்பட்ட 'சிகரம்' பின்னர் 'சிகரம் பாரதி' என்னும் வலைத்தளத்தின் ஊடாக தனது சேவையைத் தொடர்ந்தது. நீண்ட காலமாகவே 'சிகரம்' இணையத்தளத்தைத் தொடங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் அது கைகூடவில்லை. 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் 'சிகரம்' இணையத்தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இணையத்தள கட்டமைப்புகள் பூர்த்தி செய்யப்பட்டு 2017.07.01ஆம் திகதி 'சிகரம்' இணையத்தளம் உத்தியோகபூர்வமாக தனது செயல்பாட்டை பிரத்தியேக இணையத்தள முகவரியில் துவங்கியது. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்னும் உயரிய நோக்கோடு இயங்கி வருகிறது 'சிகரம்' இணையத்தளம். எமது நோக்கத்தை திறம்பட செயல்படுத்த தமிழார்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓரணியில் திரள்வோம். தமிழைக் கொண்டாடுவோம்!



2006.06.01 அன்று 'சிகரம்' கையெழுத்துப் பத்திரிகை உருவானதில் இருந்து 'சிகரம் பாரதி' வலைத்தளம் மற்றும் 'சிகரம்' இணையத்தளம் வரை தொடர்ந்து ஆதரவு நல்கிக் கொண்டிருக்கும் பாடசாலை நண்பர்கள், ஆசிரியர்கள், வலைத்தள நண்பர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், வாட்ஸப் நண்பர்கள் மற்றும் அனைத்துத் தமிழார்வலர்கள் என எல்லோருக்கும் 'சிகரம்' சார்பில் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் 'சிகரம்' செயற்பாடுகள் அனைத்திற்கும் உங்கள் அனைவரினதும் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம். சிகரத்துடன் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி!

சிகரத்துடன் இணைந்து செயல்பட : 

சிகரம் பாரதி பேஸ்புக் தனிநபர் பக்கம் 

சிகரம் பாரதி பேஸ்புக் மக்கள் பக்கம் 

சிகரம் பாரதி டுவிட்டர் பக்கம் 

சிகரம் பாரதி கூகிள் பிளஸ் பக்கம் 

சிகரம் இணையத்தள தனிநபர் பக்கம் 

சிகரம் இணையத்தள மக்கள் பக்கம் 

சிகரம் தமிழ்க்கவிதைகள் குழுமம் 

சிகரம் பிக் பாஸ் தமிழ் பேஸ்புக் பக்கம் 

சிகரம் பிக் பாஸ் பேஸ்புக் குழுமம் 

சிகரம் இணையத்தள டுவிட்டர் பக்கம் 

சிகரம் இணையத்தள கூகிள் பிளஸ் பக்கம் 

சிகரம் இணையத்தள மின்னஞ்சல் 

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' 

- சிகரம் 

#சிகரம் #சிகரம்தமிழ் #மக்கள் #தமிழ் #Sigaram #SigaramThamizh #Tamil #Anniversary #SIGARAMCO 

Comments

  1. வாழ்த்துகள்... வெற்றிப் பயணம் தொடரட்டும்..

    ReplyDelete
  2. 'சிகரம்' வலைதளத்தால் 'சிகரம்' என்ற சொல்லின் பொருள் உயரட்டும்!

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!