பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 14 | விஸ்வரூபம் 02 | BIGG BOSS TAMIL 02 | WEEK 02 | DAY 14 | VISHWAROOPAM 02

பிக் பாஸின் ஆசியுடன் 'விஸ்வரூபம் 02' ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகும் என்னும் அறிவிப்புடன் பிக் பாஸ் பதினான்காம் நாள் நிகழ்வுகள் துவங்கின. பிக் பாஸ் போட்டியாளர்களும் 'விஸ்வரூபம் 02' பாடல் வெளியீட்டில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்த படியே வரவேற்பறையில் இருந்த உயர்தர தொலைக்காட்சி மூலம் கண்டு களித்தனர். கமல் பாட ஆரம்பிக்கிறார். கரவொலி அரங்கத்தைப் பிளக்கிறது. 'நானாகிய நதி மூலமே, தாயாகிய ஆதாரமே' என்று கமல் பாட ஸ்ருதி ஹாசனும் பாடலில் இணைந்து கொள்கிறார். 



பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களுடன் கமலும் ஸ்ருதியும் உரையாடுகின்றனர். போட்டியாளர்களிடம் 'விஸ்வரூபம் 2' பாடல் எவ்வாறு இருந்தது என்று கருத்துக்களைக் கேட்டறிகின்றனர். அதனைத் தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' டிஜிட்டல் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. அத்தனையும் பிக் பாஸ் ரசிகர்களுடன் பிக் பாஸ் போட்டியாளர்களும் கண்டு களிக்கின்றனர்.

இரண்டாவது பாடல் வெளியீடு துவங்குகிறது. இதிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஸ்ருதி ஹாசன் தனியாகப் பாடுகிறார். கமல் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்துகொள்கிறார். 'ஞாபகம் வருகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்' என்னும் பாடலை சிறப்பாகப் பாடுகிறார் ஸ்ருதி. ரசிகர்களும் பிக் பாஸ் போட்டியாளர்களும் கைதட்டி ரசிக்கிறார்கள். 

தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளிக்கிறார். நீங்கள் எழுதிய பாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் எழுதிய முதல் கவிதை இதுதான் என்று ஸ்ருதியை நோக்கி சுட்டிக் காட்டுகிறார். ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் அவரது குழுவினர் விடைபெற்றுக்கொள்கின்றனர். 



நேற்றைய சனிக்கிழமை அத்தியாயத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் தொகுத்துக் காட்டப்படுகின்றன. தொடர்ந்து அகம் டிவி வழியே பிக் பாஸ் போட்டியாளர்களை கமல் சந்திக்கிறார். இரண்டாம் வாரத்தில் வெளியேறப்போவது யார் என்பது தொடர்பான உரையாடல் தொடங்குகிறது. அனந்த், மமதி, மும்தாஜ் மூவரிடமும் கமல் உரையாடுகிறார். மற்ற போட்டியாளர்களிடம் யார் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள் என்று கருத்துக் கேட்கிறார். பெரும்பாலானோர் அனந்த்தின் பெயரைச் சொல்ல அனந்த் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவிக்கிறார். 

'உங்கள் வெளியேற்றத்தைத் தீர்மானிப்பது மக்கள், மக்களின் முடிவு என் கையில் இருக்கிறது' என்று கமல் அட்டையைக் காண்பிக்கிறார். உரையாடலுக்குப் பின் மும்தாஜை அமர வைக்கிறார். மமதி வெளியேற்றப்படுவதாக அறிவிக்கிறார். கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி மமதியே வெளியேற்றப்படுகிறார். மும்தாஜ் அழுகிறார். கமல் ஏனைய பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறார். மமதியும் சக பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறார். மும்தாஜ் மமதியை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுகிறார். VIVO V 9 திறன்பேசியில் எல்லோரும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். 



நீண்ட காலத்துக்குப் பின் ஒரு வெளியேற்றப்பட்ட போட்டியாளருடனான கமலின் உரையாடலை நாம் காண்கிறோம். பிக் பாஸ் முதலாம் பருவ காட்சிகள் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. மமதியுடனான கமலின் உரையாடல் துவங்குகிறது. மமதியின் பிக் பாஸ் பயணம் பற்றிய ஒரு தொகுப்பு ஒளிபரப்பாகிறது. மமதி - கமல் உரையாடல் மிக நீளவில்லை. 

ஆள் குறையக் குறைய வீட்டில் பிரச்சினைகள் அதிகமாகும் என்கிறார் கமல். அதுதானே பிக் பாஸுக்கும் வேணும்? அப்படியே பிரச்சினை இல்லைன்னாலும் விட்டுருவாரா என்ன? இன்னொரு எஜமானர் - வேலைக்காரன் போட்டியை வச்சு செஞ்சிருவாரே? ம்ம்... பிக் பாஸ் இரண்டாம் பருவத்தின் மூன்றாம் வாரம் எப்படி அமையப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்! 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!