குறள்நெறி வாழ்வீர்!

அருமறை குறளைக்கற்று
அதுதரும் பொருளைப்பெற்று
நெறிமிகு வழியில்நின்று
நிலத்தினில் வாழ்தல்நன்று 



மனைவியும் மக்களோடும்
மனதினி உறவினோடும்
மதியுரை நண்பரோடும்
மகிழ்வுடன் வாழ்தல்வேண்டும் 

அளவிலாப் பொருளைப்பெற்று
அளவுடன் செலவுசெய்து
வளமிகுப் பெருமையோடு 
வாழ்கநீர் நீடுவாழ்க!

***
நெஞ்சம்நிறைந்த
வாழ்த்துகளுடன்... 

மானம்பாடி புண்ணியமூர்த்தி 

குறள்நெறி வாழ்வீர்! 
https://newsigaram.blogspot.com/2018/10/kural-neri-vaalveer.html 
#திருக்குறள் #வாழ்க்கை #வழிகாட்டி #அனுபவம் #உண்மை #குறள்நெறி #உறவுகள் #தமிழ் #வலைத்தளம் #வள்ளுவர் #எண்ணம் #சிகரம் 

Comments