கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04
பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.
திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
"நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."
குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.
"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது.
நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.
"ஹ... ஹலோ சு.. சுசி..."
"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"
"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."
"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"
"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."
"ஆனா....?"
"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"
"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."
"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"
"சரிடா... நா வர்றேன்."
சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.
ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.
"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."
"..................."
"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"
"விஷயமே வேற சுசி..."
"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."
"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"
"என்னடா சொல்ற?"
"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
Post Created at 26.07.2012
Edited at 19.04.2019
அடுத்து தொடருமா...? அறிய ஆவல்...
ReplyDeleteநன்றி ...
நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி. இன்னும் பல சுவாரஷ்யமான திருப்பங்களோடு கதைக் களம் நகரக் காத்திருக்கிறது. அடுத்த வியாழனன்று 5 ஆம் பகுதியை எதிர் பாருங்கள். சந்திப்போம் தோழரே.
Deleteதோழியா?????!!!!!!???? என்னய்யா நடக்குது இங்க
Deleteவருகைக்கு நன்றிகள். பின் தொடர்கைக்கும் நன்றிகள் பல. # என்னய்யா நடக்குது இங்க# கதை தான் தோழா. காத்திருங்கள். இன்னும் பல திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
Deleteதாங்கள் என்னை அழைத்தீர் நான் வந்துவிட்டேன் தோழி... இனி தொடர்ந்து வருகிறேன், தங்கள் தளத்தினை என் கணினியில் Book Mark செய்து விட்டேன்....
ReplyDeleteதங்கள் அன்புக்குரிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி. ஆனால் தங்கள் கருத்தில் ஒரு திருத்தம். நான் தோழி அல்ல. தோழன். தெய்வத் திருமகள் சராவின் புகைப்படத்தை இணைத்திருப்பதால் அப்படி நினைத்திருக்கலாம். மீண்டும் சந்திப்போம்.
Deleteசிறு விண்ணப்பம், தங்கள் Commentsல் உள்ள Word Veryficationஐ எடுத்து விடுங்களேன். சிறிது காலம் தாழ்த்துகிறது...
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதனை சரி செய்ய ஆவண செய்கிறேன் தோழி.
Delete"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."//
ReplyDeleteஆஹா சஸ்பென்ஸ், தொடரை படிக்க புருவத்தை உயர வைக்கிறதே....!!!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே. எனது வலைப்பதிவு ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டி கருத்தளித்த முதல் நபர் நீங்கள் தான். நன்றிகள் பல. நிச்சயமாய் பல திருப்பங்களோடு கதைக்களம் நகரும். காத்திருங்கள்.
Deleteவேர்ட் வெறிபிகேஷனை நீக்குங்கள், கமெண்ட்ஸ் போட யோசிப்பார்கள் வாசகர்கள்...!
ReplyDeleteநிச்சயமாக. இரவின் புன்னகை வலைப் பதிவரும் இதனை சுட்டிக் காட்டியிருந்தார். சரி செய்கிறேன் தோழா.
Deleteகதை நல்ல விறுவிறுப்பாக நகருகிறது தோழி...அடுத்த பதிப்பு எப்போது வரும்?
ReplyDeleteம்ம்ம்.... நிறைய ஆர்வமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதே ஆர்வத்துடன் வரும் வியாழன் வரை காத்திருங்கள் தோழி.
Deleteசிறு விண்ணப்பம், நான் தோழி இல்லை, தோழன்.
Deleteமன்னிக்கவும். நானும் உங்களைப் போல தவறாகப் புரிந்து கொண்டேன் தோழா.
Deleteபஞ்சாயத்து முடிஞ்சிட்டா.. ஸப்பாஆ
Deleteஒரு வழியா முடிச்சிட்டோம் தோழா. இல்லன்னா மத்தவங்கல்லாம் மொக்க போடுறதா நெனச்சிக்குவாங்க.
Deleteஆமா நீங்க பெரிய எழுத்தாளர் போல தோன்றுகிறது ....
ReplyDeleteஇருங்கள் மொத்தமாக நேரமெடுத்து ரசித்துப் படித்துவிட்டு மிகுதியை சொல்கிறேன்....:)
நாங்களும் எழுதுவோம்ல........ ம்ம்ம்ம்,,,, உங்க அன்பான விமர்சனத்துக்காய் காத்துகிட்டிருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க தோழா.
Deleteவியாழன் கடந்து, ஞாயிறும் வந்துவிட்டது... தினமும் வந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது...
ReplyDeleteதங்கள் ஏமாற்றத்திற்காய் நான் வருந்துகிறேன். எதிர்வரும் வியாழனன்று அதாவது ஆகஸ்ட் 02 ஆம் திகதி தான் ஐந்தாம் பகுதி வெளியாகும். ஏனெனில் நான்காம் பகுதியை இந்த வியாழன், அதாவது 26 ஆம் திகதி தான் வெளியிட்டிருந்தேன். அதுவரை சற்றுப் பொறுத்திருக்க பணிவுடன் வேண்டுகிறேன். பிரதி வியாழன் தோறும் இத் தொடரினை நீங்கள் வாசித்து மகிழலாம் தோழா.
Deleteவணக்கம் பாரதி.
ReplyDeleteஉங்கள் கதை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நிச்சயம் பிறகு வந்து படிக்கிறேன்.
நன்றிங்க.
அழைத்தது வந்தமைக்கு நன்றி. தங்கள் கருத்திற்காய் காத்திருக்கிறேன்.
Delete"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."//
ReplyDeleteஅம்மாவுக்கு பிடித்து விட்டதா ! அப்புறம் என்ன கதைக்கு நல்ல முடிவை கொடுப்பீர்களா?
காத்து இருக்கிறேன்.
ஒரே நாளில் வாசித்து முடித்ததும் அல்லாமல் நான்கு பகுதிகளுக்கும் தவறாது கருத்துரையையும் இட்டிருக்கிறீர்கள். நன்றிகள் பல தோழி. அடுத்த அத்தியாயத்திற்காய் காத்திருங்கள்.
Deleteபாரதி.... கதை அருமையாக போகிறது. தொடருங்கள்.
ReplyDeleteஆனால் என்ன.. இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதலாம்.
பாரதி என் கவிதைகளைப் படித்தப் பாருங்களேன். சுமாரா இருக்கும். வாங்க.
http://arouna-selvame.blogspot.com
மறக்காமல் மீண்டும் வந்து படித்துவிட்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றிகள். # ஆனால் என்ன.. இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதலாம்.# தங்கள் வேண்டுகோளை அடுத்த பகுதியில் நிறைவேற்றுகிறேன். தங்கள் சுயவிவரப் பக்கம் மூலம் ஏற்கனவே தங்கள் இரண்டு தளங்களையும் பார்த்துவிட்டேன். ஆனால் கவிதை தளத்திற்கு கருத்துரை இடத்தான் நேரம் கிடைக்கவில்லை. விரைவில் எனது கருத்துரை உங்கள் கவிதை தளத்தில் இடம்பெறும். இன்ட்லி மூலம் பின்தொடர்கின்றமைக்கு நன்றிகள். சந்திப்போம் தோழா.
Deleteவணக்கம் சொந்தமே!தாமத்திற்கு மிகமிகவே வருந்துகிறேன்.:(....கல்யாணம் முடியும் வரை இங்க தான் இருப்பேன்...எழுதுங்க.நல்லா போயிட்டுஇருக்கு.இதே வேகத்தில ரனையில தொடருங்க.வாழ்த்துக்கள் சொந்தமே!:) :)
ReplyDeleteசந்திப்போம்.
வருகைக்கு நன்றி தோழி. எங்கே காணாம போயிட்டீங்களோனு பார்த்தேன்.
Delete#கல்யாணம் முடியும் வரை இங்க தான் இருப்பேன்.#
உங்கள் ஆதரவுடன் இன்னும் சிறப்பாக "கல்யாண வைபோகம்" இடம்பெறும் தோழி.
அருமையான கதை.... என்னை பொறுத்த வரை பெருமையாக இருக்கு. உன் நண்பனாகஉன் வளர்ச்சி கண்டு... என் செம்மொழி பதிவு குறித்து உன் கருத்து என்ன?
ReplyDeletehttp://varikudhirai.blogspot.com/2012/07/is-tamil-really-classical-language.html
#உன் நண்பனாகஉன் வளர்ச்சி கண்டு...#
Deleteநன்றி நண்பா. உன் தொடர்ச்சியான வருகையை என் தளத்திற்கு எதிர்பார்க்கிறேன்.
இணைத்தாயிற்று நண்பா பாகம் 18 எழுதுங்க
ReplyDeleteதங்கள் முயற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள். எனக்கு பதினேழு என்று தானே தங்கள் தளத்தில் அறிவித்திருந்தீர்கள்? #பகுதி 17 - பாரதி - சிகரம் # மீண்டும் ஒரு தடவை சற்று உறுதிப்படுத்தி சொல்லுங்க தோழா.
Deleteஆம் நண்பா சில வேளைகளில் முந்தி பிந்தலாம்.. இன்னும் பலரோடு நான் தனிப்பட்ட முறையில் கதைக்கவில்லை..
Deleteசரி நண்பா. எனக்கான முறை மிகப் பின்னாலிருப்பதால் முன் பின் மாறுவதில் பிரச்சினை இல்லை. தகவலுக்கு நன்றி. தங்கள் உறுதிப்படுத்தலுக்காய் காத்திருக்கிறேன் தோழா.
Deleteபதிவில் தொடர் எப்படி இருக்கவேண்டும் என
ReplyDeleteமிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். பதிவில் தொடர் எழுதுவது முதல் தடவை. ஆனால் சரியாகக் கைகூடி வந்துவிட்டது. நன்றி தோழா.
Deleteaduththu enna aarvama irukku
ReplyDeleteஅதே ஆர்வத்துடன் தொடர வேண்டுகிறேன்.
Delete