முக நூல் முத்துக்கள் பத்து
எனது முக நூலில் (பேஸ்புக்) என்னைக் கவர்ந்த சில பகிர்வுகளை இங்கே நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை இதோ:
01. #என்னிடம் 271 நண்பர்களுடன் (254 பெண்கள் நண்பிகள்) ஒரு பொய்யான fb account விட்பனைக்கி உண்டு தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும் .....#
02. #முகத்தை காணும் முன்பே நேசிக்கத்
தெரிந்தவள் " தாய்" மட்டுமே#
03. #தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
தாய் ரெண்டு தாய் இருக்குதா
Image Credit: Google / Facebook |
04. #காதல்- காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி. தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது...#
05. #ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!!
-அப்துல் கலாம்-#
06. #நீங்கள் வாழக் கற்றுக்கொடுத்ததில்லை..
வாழ்ந்து காட்டினீர்கள்..
அப்பா உங்களை பார்த்தே வளர்ந்தோம்..
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!#
07. #எனக்கு என்று
எதுவும் வேண்டாம் கடவுளே,
என் அம்மாவுக்கு மட்டும்
ஒரு சூப்பர் figure
மருமகளா வரணும்.
அது போதும் எனக்கு.#
08. #நான் என்னைக் கூட
இழக்கத் தயார்,
என்னால் இழக்க முடியாத
என் தன்னம்பிக்கைக்காக....#
09. #ஏறு!! ஏற!!
முன்னேறு!
மூச்சுப் பிடித்தேறு!
மூளை கொதிக்க ஏறு !
முகில் தாண்டி ஏறு !
மலை உச்சியை தொடு (அல்லது) மரணத்தை தொடு !
♥ ♥ ♥#
10. #இன்னமும் தமிழனாக பிறந்த நாம் அகதிகளாக தான் வாழ்கிரோம். தமிழனுக்கு எழுதி வைத்த தலையெழுத்து அகதி என்ற வாசகம். அகதி என்ற உடன் நினைவுக்கு வருவதுதான் "கண்ணீர்". அகதி "உறவுகளை விட்டு பெற்றெடுத்த தாய் தந்தையை விட்டு கூடப்பிறந்த உறவுகளை விட்டு" தமிழனின் வாழ்க்கை.#
முக நூல் முத்துக்கள் பத்து
#பேஸ்புக் #கருத்து #எண்ணங்கள் #பகிர்வு #எழுத்து #நட்பு #உணர்வு #தாய் #காதல் #தந்தை #வெற்றி #முன்னேற்றம் #fb #Share
Post Created at 03.07.2019
Post Edited at 19.04.2019
அருமையான ரசிப்பு....9வது சூப்பர்.10து வலிக்கிறது...சந்திப்போம் சொந்தமே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி. 'அகதி' என்ற சொல் நம் தமிழர்களை குறிக்கும் ஒரு சொல்லாக மாறிப் போயிருக்கும் ஒரு சூழலை நாம் இன்று காண்கிறோம். அந்த வகையில் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, மலையகத் தமிழர்களும் ஒரு வகையில் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இரு தமிழ்த் தரப்பினரையுமே அடக்கி ஒடுக்க எத்தனிக்கும் ஒரு சூழலிலேயே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அடிமை வாழ்விலிருந்து என்று தான் நமக்கு விடுதலை கிடைக்குமோ?
Deleteஅனைத்தும் அருமை (1-9)... வாழ்த்துக்கள்...! தொடர்க...
ReplyDeleteTamil 10 மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
தங்கள் வருகை, கருத்து மற்றும் பின்தொடர்கை எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி தோழரே. வாக்குகளை விட இவ்வாறான கருத்துரைகளைக் காணும் பொது தான் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. தங்கள் எண்ணம் போல் இன்னும் பல சுவாரஷ்யமான பதிவுகளை நானும் வழங்கக் காத்திருக்கிறேன். சந்திப்போம்.
Deleteநம்பர் 4, கொசு துரத்துவது..ஹஹஹ
ReplyDeleteஹ.....ஹா.... நன்றி தோழி.
Delete