Thursday, 12 July 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02


பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

பகுதி - 02

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.


நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர்.


என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்டிருந்த பட்டு வேட்டியையும் சட்டையையும் கை அனிச்சையாய் எடுத்து உடுத்த ஆரம்பித்தது.


இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை நிவேதிதா என அழகிய குடும்பம். வீட்டில் ஜெய் என்றும் நண்பர்கள் ஜெய் அல்லது ஜே.கே என்றும் அழைப்பார்கள். கடந்த காலக் காதல் என்னுள் ஏற்படுத்திய காயங்கள் காரணமாக இது வரை எனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருந்தேன். எனக்கு 27 வயதாகிறது. தங்கைக்கு 23 வயது தான் என்றாலும் அவளுக்கும் சில நல்ல வரன்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக அவளுக்கு முன்னால் எனது திருமணத்தை முடித்துவிட பெற்றோர் எதிர் பார்த்தனர். இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.


"ஜெய்... இன்னும் என்னப்பா பண்ற?" - அம்மாவின் அழைப்புக் குரல் என்னை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. "இதோம்மா..." என்று பதிலளித்து ஐந்து நிமிடங்களில் நான் தயாராகி வெளியே வந்தேன். அடுத்த சில நிமிடங்களில் வீட்டாரும் சுற்றத்தாரும் புடை சூழ எமக்காக வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த வாகனங்களில் பெண் பார்க்கப் புறப்பட்டோம், எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........

10 comments:

 1. சிறப்பாகத் தொடர்கிறது சொந்தமே விறுவிறுப்புடன்.வாழ்த்துகக்கள்.!சந்திப்போம்
  ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. இன்னும் விறுவிறுப்புடன் கதைக் களம் நகரப் போகிறது காத்திருங்கள்.

   Delete
 2. நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன்.

  நான் ஒருமுறை அவளது நினைவால் எளிதில் மீள முடியாமல், நான் இறங்கும் நிறுத்தத்தில் இறங்காமல் பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்க்கே சென்று விட்டேன் தோழி. அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...

  தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. # அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...#

   ம்ம்ம்... பேரூந்துக்குத்தான் எத்தனை வலிமை? இந்த மாதிரியான உணர்வு பூர்வமான கருத்துரைகள் என்னை மிகவும் மனம் நெகிழச் செய்கின்றன. நன்றி தோழி.

   Delete
 3. எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........//

  ஆஹா! கதை விறு விறுப்பாய் போகிறதே!

  ReplyDelete
  Replies
  1. அக்காவுக்கு கதை பிடிச்சிருக்கு போல? ம்ம்ம்.... வாசிங்க....

   Delete
 4. விறுவிறுப்பாகத் தொடர்கிறது தொடர்
  நானும் தொடர்கிறேன்

  ReplyDelete
 5. super en life mathiriye irukku manasa pathichiruchu

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...