கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08
பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 06
பகுதி - 07
பகுதி - 08
திவ்யா பரீட்சை முடிந்து வரும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடவென அடித்துக் கொண்டது. பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து தான் பேரூந்து நிலையத்தை அடைய வேண்டும். பாடசாலைக்கும் பேரூந்து நிலையத்திற்குமான இடைவெளி தான் அவளிடம் பேச உகந்த இடமாக இருந்தது. ஏனெனில் அந்த பிரதேசத்திற்குள் வெளியாரின் நடமாட்டம் இருக்காது. மேலும் அந்த எல்லைக்குள் சொல்லப்பட்ட காதல்கள் ஏராளம். தைரியமாக அந்த இடத்தில் வைத்து பேசி விட்டால் எப்படிப்பட்ட பெண்ணையும் மடக்கிவிட முடியும் என்பது எங்கள் 'ஐதீகம்'.
குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள் திவ்யா. "ஹாய்........." என்ற குரலோடு கையை நீட்டி இடைமறித்து அவளை நிறுத்தி அவள்முன் நின்றேன் நான். திடுக்கிட்டு சட்டென நின்று பார்த்தாள். நான் மறுபடியும் "ஹாய்......" என்றேன்.
"ஹாய் ஜெய்..." என்றாள் புன்னகையோடு. 'அட, நம்ம பெயர் இவளுக்கு எப்படி?' என்று ஆச்சரியப் பட்டுப் போனேன் நான். மேலும் அவள் விலகிச் செல்வாள் என்று பார்த்தால் நெருங்கி வருகிற மாதிரி கதைத்ததும் கூடுதல் ஆச்சரியத்தைத் தந்தது.
"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்.........?" கேட்டேன்.
"தெரியும்...... அத பிறகு சொல்றேன். உங்கள கல்யாணத்துல பார்த்தது நினைவிருக்கு."
"எனக்கும்..... சரி. உங்க பேரு?"
"சொல்லணுமா?"
"சொல்லலாமே...............?"
"திவ்யா."
"அழகான பேர்."
"சரி. நா வர்றேன்....."
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......"
"அன்னிக்கு கல்யாணத்துல கண்டதுனால தான் இப்ப பேசினேன். உங்கள மறுபடியும் காணுவேன்னு நினைக்கல. கண்டேன். பேசணும்னு தோணிச்சு. பேசிட்டேன். இனி என்ன இருக்கு?"
"ஏன்? நாம கொஞ்சம் பழகலாமே?"
"எப்படி பழகணும்னு எதிர்பார்க்குறீங்க?"
"இல்ல..... உங்கள புடிச்சிருக்கு....."
"கண்டதும் காதலா?"
"அப்படி சொல்லல. பழகிப் பார்க்கலாமே?"
"எங்க வீட்ல இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் ஏத்துக்க மாட்டங்க."
"அப்போ என்னை பிடிச்சிருக்கு. அப்படித்தானே?"
"..............................................................."
"மௌனம் சம்மதமா?"
அதற்கு மேல் அவள் பேசவில்லை. தன் நடையில் வேகம் சேர்த்து அவ்விடத்தில் இருந்து அகன்றாள். சற்றுத் தூரத்தில் நின்ற தன் தோழிகளுடன் அப்போது வந்த பேரூந்தில் ஏறிப் பயணித்தாள், ஜன்னலினூடே என்னைப் பார்த்துக் கொண்டே.........
திவ்யாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போயிருந்தது என்றாலும் அவளுடன் பேசுவதில் இருந்த தயக்கத்தை நண்பர்கள் வாயிலாக துடைத்தெறிந்து சில நிமிடங்கள் பேசியதில் மனம் குதூகலித்துக் கொண்டது. ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனது மனதின் ஒரு ஓரத்தில் கவலையைத் தந்தது.
"கலக்கிட்ட மச்சான்......." நண்பர்களின் குரல் கேட்டு நினைவுச் சிறையிலிருந்து விடுபட்டேன்.
"பதில் சொல்லாம போறாடா...." - நான்.
"சரி விடு..... நாளைக்கு பார்த்துக்கலாம்" - சுசி
"ம்ம்ம்......" - நான்
"அவள பின்தொடர்ந்து போவோமா?" - முரளி
"பஸ் தான் போயிருச்சில்ல.....?" - சுசி
"போயிருச்சா....? சொல்லவே இல்ல....?" - முரளி
"சும்மா இரு முரளி....." - நான்
"ஏன்டா ஜெய் கோவப்படுற?" - முரளி
"நீ வேற...." - நான்
"நாளைக்கு நீ அவகிட்ட பேச வேணாம் ஜெய்...." - விசு
"ஏன்டா?" - நான்
"நாளைக்கு அவ என்ன செய்றான்னு பார்ப்போம்...." - விசு
"ஆமாண்டா... விசு சொல்றது தான் சரி...." - சுசி
"டேய்... அவ பரீட்சை எழுதுற வரைக்கும் ஏதும் பண்ண வேணான்னு தோணுது......" - நான்
"ஏன்டா?" - முரளி
"ஒரு வேளை அவ நல்லா படிக்கிறவளா இருக்கலாம். அநாவசியமா எதுக்கு குழப்பணும்னு பாக்குறேன்" - நான்
"நீ சொல்றதும் சரி தான்..." - சுசி
"சரிடா... ஏதாச்சும் பார்த்துப் பண்ணலாம்... நாளைக்கு நாம சொன்ன மாதிரி செய்யலாம் என்ன?" - விசு
"சரிடா....." - நான்.
அத்தோடு எங்கள் அன்றைய சந்திப்பும் முடிவடைந்து போக அவரவர் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.
**********************************************************************
"என்னடா ஒன்னும் பேசாம வாற?"
"திவ்யா என்ன பேசப் போறான்னு தெரியலியே......."
"சரி..... அத விடு... நடக்குறது நடக்கட்டும். மனசைப் போட்டுக் குழப்பிக்காதடா"
"எப்படி சுசி? என்னால முடியல.... ஒரே குழப்பமா இருக்குடா....."
"என்ன குழப்பம் உனக்கு?"
"திவ்யா ஏன் பேசக் கூப்பிட்டிருக்கான்னு தெரியல. அனேகமா நாங்க கடைசியா சந்திச்சப்ப பேசினதப் பத்தித்தான் பேசுவான்னு நினைக்கிறேன்."
"எனக்கும் அப்படித்தான் இருக்குமோன்னு தோணுது ஜே.கே."
"நாங்க நந்தினிய பொண்ணு பார்க்கப் போறதுக்கு முன்னாடி நான் தான் மாப்பிள்ளனு திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்குமா சுசி?"
"சரியா சொல்லத் தெரியலடா..... ஆமா..... போட்டோ குடுக்கலன்னு சொல்லிருந்தேல்ல?"
"ஆமா. நாங்க போட்டோ குடுக்கல. அப்பாவோட நண்பருக்கு தெரிஞ்ச இடம்னு சொல்லிட்டிருந்தாரு."
"ம்ம்.... திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லன்னு தான் நினைக்கிறேன்."
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா என்னோட நம்பர திவ்யா குடுத்ததா தானே நந்தினி சொன்னா?"
"எல்லாக் கேள்விக்கும் திவ்யாவால தான் பதில் சொல்ல முடியும்."
"ம்ம்ம்............." - பெருமூச்செறிந்து கொண்டேன் நான்.
ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தின் பின் திவ்யாவின் ஊரை ஒட்டிய இடத்தில் நாங்கள் வழமையாகச் சந்திக்கும் இடத்தை வந்தடைந்தோம். அங்கே ஏற்கனவே சிவப்பு நிற மாருதி கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் நேரத்தில் அந்த மாருதியின் கதவுகளும் திறந்து கொண்டன.
திவ்யா மட்டுமே காரிலிருந்து இறங்கினாள். ஒரு வேளை அவள் மட்டுமே வந்திருக்கக் கூடும். சுசி காருக்கருகிலேயே நின்று கொண்டான். நாங்கள் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சென்றோம்.
"திவ்யா......"
"ஜே.கே. நல்லா இருக்கீங்களா.......?"
"ம்ம்... இருக்கேன்....... நீ?"
"நானும் இருக்கேன். பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சில்ல "
"ஆமா திவ்யா.... ஆனா இப்ப வரைக்கும் உன்ன மறுபடியும் ஒரு தடவையாவது பார்த்துற மாட்டமான்னு தவிப்பா இருந்திச்சி....."
"எனக்கும் தான்... இப்ப மனசுக்கு ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு...."
"மெலிஞ்சிட்ட போல?"
"ம்ம்... நீங்களும்..."
"சொல்லு திவ்யா....."
"கல்யாணத்துக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு?"
"இல்ல திவ்யா.... பல நேரங்கள்ல மனசுக்குப் பிடிக்காத வாழ்க்கையைத்தானே அமைச்சுக்க வேண்டியிருக்கு?"
"ம்ம்.... நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"
திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா, நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு என்கிறாளா?'. குழப்பத்துடன் என் பதிலை முன்வைத்தேன்.
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08
https://newsigaram.blogspot.com/2012/09/kalyaana-vaibogam-08.html
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
கதை விரு விருப்பாக செல்கிறது.
ReplyDeleteஉங்கள் தளம் சற்று மாற்றமாகவே உள்ளது. அழகாகவுள்ளது.
என்னுடைய தளத்தில்
தன்னம்பிக்கை -3
தன்னம்பிக்கை -2
நன்றி தோழா.
Deleteகதை நன்றாக செல்கிறது... குழப்பம் அடுத்த பதிவில் தீர்ந்து விடுமா...?
ReplyDeleteநன்றி. அதையும் பார்க்கலாம்.
Delete(லைட்) பச்சை பசேலென்று தளம் இப்போது அழகு...
ReplyDeleteநன்றி தோழா.
Deleteநன்றாக உள்ளது... இன்ட்லி இனை நீக்கி விடு.. தாமதம் கூடுகிறது.. எனது இறுதிப் பதிவு இங்கே...
ReplyDeletehttp://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html
நன்றி. பார்க்கிறேன்.
Deleteதொடருங்கள் நண்பா... அருமை. அடுத்த விறுவிறுப்பையும் முன்வைத்து விட்டீர்கள் போல...
ReplyDeleteஆம். நன்றி தோழா.
Deleteஅருமை.எதிர்பார்ப்போட ஒரு முடிவு.அருமை!
ReplyDeleteகதை மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது, அடுத்த பதிவு எப்போது?
ReplyDeleteநன்றி தோழி. விரைவில்.........
Deletearumai next
ReplyDeleteநன்றி தோழி. விரைவில் வெளியாகும்.
Delete