கால் நூற்றாண்டுக் காதல் கடித்தைத் தேடிப் போகலாம் வாருங்கள்!

'கால் நூற்றாண்டு காதல்' குறுந்திரைப்படத்தை பார்த்து முடித்த சூட்டோடு அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். முதலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. 


ஒரு வாசகம்: நீங்கள் விரும்பிச் செய்யும் எதிலும் உங்களுக்கு தோல்வி கிடையாது! 

ஒரு கோரிக்கை: வலை ஓலை வலைத்திரட்டியை தங்கள் வலைத்தளங்களின் மெனுவில் இணைப்பதுடன், தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள். 

குறும்படம்: 
25 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்தைத் தேடிய ஒரு பயணம். ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையாக இயக்கப்பட்டிருக்கிறது. 




தேவையில்லாத பின்னணிக் கதைகள், துணைக் கதைகள், வரலாறு எல்லாம் இல்லாமல் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

நடிப்பு வேறு ரகம். அனாவசியமான மினக்கெடல்கள் இல்லாத இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது. 

நாம் வாழ்வில் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சில அர்த்தங்கள் உடனடியாக தெரியவரும். சில, காலம் கனிந்தால் தான் புரிய வரும். 

25 வருடத்துக்கு முன்னால் அந்த கடிதம் உரிய நேரத்தில் கிடைத்திருந்தால்? அந்த பையனுக்கு ஒரு பயண அனுபவம் கிடைத்திருக்குமா? அந்த நேரத்தில் அந்த காதல் கடிதம் இதே மகிழ்ச்சியை அந்த தம்பதிக்கு கொடுத்திருக்குமா? இன்னும், வழியில் சந்தித்த மனிதர்களையெல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால் காணக் கிடைத்திருக்குமா?

இல்லை. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. சொல்லப்பட்ட காதல்களுக்கும் சரி, சொல்லப்படாத காதல்களுக்கும் சரி. 

பழைய ராஜா கதைகளில் ராஜாவின் உயிர் கிளியில் இருப்பதாக சொல்வார்கள். இந்த கதையில் தந்தையின் உயிர் ஒரு பழைய கடிதத்தில் இருந்திருக்கிறது. 

ஒரு மன நிறைவான குறுந்திரைப்படத்தைப் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி! 

குறுந்திரைப்படம்: 





இணைப்புச் சுட்டி: Kaal Nootraandu Kaadhal Tamil Short Film| Saran RV | SIIMA AWARDS BEST ACTOR Vignesh Kumar | Ashwin 

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் உயிர்ப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். 

இந்த நாளில் அன்று: 
2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து ஒரு நகைச்சுவைப் பதிவை எழுதியிருந்தேன். இன்றைக்கும் பொருத்தமாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.


கந்தசாமியும் சுந்தரமும் - 02 

குறிப்பு: பதிவின் அமைப்பு நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களிடம் இருந்து சுடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றி. விரைவில் அமைப்பை மாற்றிக் கொள்கிறேன். 

படிப்பதோடு நில்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு யோசனை: கொரோனாவால் இப்போது எல்லாமே இணையவழி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் இணையவழி வலைப்பதிவர் சந்திப்பை நடத்தினால் என்ன?

Comments

  1. குறும்படத்தை நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். அடுத்தவர் கதையினை அதுவும் காதல் கதையினை தெரிந்துக்கொள்ள கசக்குமா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பாருங்கள். அருமையாக இருக்கும். காதல் கதைகள் எப்போதும் இன்மையானவை தானே?

      Delete
  2. என் பதிவினையும் இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சி சிகரம் பாரதி. குறும்படம் குறித்து நீங்களும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களது முந்தைய பதிவினையும் இதோ படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. தங்கள் பகிர்வுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!