Thursday, 17 April 2014

கந்தசாமியும் சுந்தரமும் - 02

"கந்தசாமி அண்ணே.. கந்தசாமி அண்ணே..." என்று தன்னை அழைக்கும் குரல் கேட்க தொலைக்காட்சியிலிருந்து தன் கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார் கந்தசாமி. வேறு யார்? நம்ம சுந்தரம் தான்.

"வாப்பா சுந்தரம், உட்கார்."

"டிவி ல சித்திரைக் கொண்டாட்டம் இன்னும் முடியலையோ?" - ஆசனத்தில் அமர்ந்தபடியே கேட்டார் சுந்தரம்."அதில்லப்பா.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் கூத்துக்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்."

"அதுவா? இந்த உள்ளூர் அலைவரிசைகள் போதாதுன்னு போன வாரம் நம்ம பிள்ளைங்க Sun Direct ஆன்டனாவை வாங்கிப் போட்டாங்க. போட்டு என்ன பிரயோசனம்? எல்லாம் தேர்தல் மயமா இருக்கு."

"உண்மை தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போய்க்கிட்டிருந்த நேரத்துல எல்லாம் இந்த பொல்லாத தேர்தல் கூத்துகள் தான் போகுது சுந்தரம்."

"அது சரிண்ணே... 2014 ஆம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்கன்னு நினைக்கிறீங்க?"

"யாரப்பா சொல்றது? மக்கள் அறிவு பூர்வமா மட்டும் வாக்களிக்கறவங்களா இருந்தா உறுதியா சொல்லலாம். ஆனா நிலைமை அப்படி இல்லையே....?"

"ஆமாண்ணே... தமிழகத்துல அ.இ.அ.தி.மு.க இல்லைன்னா தி.மு.க, மத்தியில காங்கிரஸ் இல்லைன்னா பா.ஜ.க தானே?"

"சரியா சொன்ன. ஜெயலலிதா, கருணாநிதி ரெண்டு பேரும் தாங்க செஞ்ச சாதனைப் பட்டியலையும் மத்தவங்களைப் பத்தின குற்றப் பட்டியலையும் வாசிக்கிறாங்க."

"விஜயகாந்த் இவங்க ரெண்டு பேரையும் தாக்குறாரு. கருணாநிதியும் ஜெயலலிதாவும் விஜயகாந்த், வை.கோ, காங்கிரஸ், பா.ஜ.க எல்லாரையும் தாக்குறாங்க."


"மொத்தத்துல ஒரு சொற்போருக்கான தேர்தல் களம் இதுன்னு சொல்லலாமில்லையா சுந்தரம்?"

"ம்ம்... வாய்ப்பேச்சு தான் ஜனநாயகம்ன்னு மக்கள் தவறா நினைச்சுகிட்டிருக்காங்க ."

"வேட்பாளர்களைப் பொறுத்தவரை மக்கள் ஒரு வாக்களிக்கும் இயந்திரம். அவ்வளவு தான்."

"ஆமாண்ணே... மக்களைக் கவர திரையுலகப் பிரபலங்கள் கூடஇப்போ பிரச்சாரம் செய்றாங்களே?"

"திண்டுக்கல் லியோனி, ஆனந்தராஜ், ராமராஜன், செந்தில், குண்டு கல்யாணம், வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு."

"ம்ம்.. விஜயகாந்த் பேசினதுல எனக்கு ஒன்னு மட்டும் தாண்ணே எனக்கு பிடிச்சிருந்தது."

"என்னப்பா அது?"

"ஜெயலலிதா ஹெலிகாப்டர்ல பறந்து வரும்போதே அமைச்சர்கள் எல்லாம் குனிந்து வணங்குகிறார்களே, ஏன் தெரியுமா? தரையிறங்கும் போது கண்ணுல தூசி விழுந்துரக் கூடாதுன்னு தான்னு சொன்னாரே?"

"அதை மட்டுமா சொன்னார்? வணக்கம் வைக்கிறதை நடித்தும் காட்டினாரே?"


"இந்த நடிகர்கள் பிரச்சாரம் செய்கிற மாதிரியே கலைக்குழுக்களின் ஆடல் பாடல் நிகழ்சிகளும் இடம் பெறுகிறதாமே ?"

"என்னமோப்பா, ஒரு திருவிழா போல இந்தியாவே தேர்தலால் களை கட்டியிருக்கிறது."

"முடிவுகள் தான் மக்கள் மனதில் யாருடைய கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தின என்பதை உணர்த்தும்."

"அதுவும் சரிதான் சுந்தரம்."

14 comments:

 1. திருவிழா தான்... மக்கள் திருதிரு... என்னமோ போங்க... ம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 3. பதவிக்காக என்னவெல்லாம் பேசறாங்க. காமெடி சானலுக்கு வேலையே இல்ல ஜாலியா பொழுது போவுது

  ReplyDelete
 4. தேர்தல் கூட ஒரு பொழுதுபோக்கு அம்சமாயிடுச்சில்ல? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா.

  ReplyDelete
 5. //"வேட்பாளர்களைப் பொறுத்தவரை மக்கள் ஒரு வாக்களிக்கும் இயந்திரம். அவ்வளவு தான்."//

  உண்மை......

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.

   Delete
 6. ஊழல் செய்தவர்கள் அரசியலில் இருந்து விலகுவதாக தெரியவில்லை ,மக்கள்தான் அவர்களை
  ஒதுக்கவேண்டும்,செய்வார்களா ?

  ReplyDelete
  Replies
  1. மக்கள் செய்வார்கள். முதலில் அவர்கள் 95 வீதத்துக்கும் அதிகமான கல்வி அறிவு பெற்ற சமூகமாக மாற வேண்டும். அப்போது தான் சாத்தியம் என்பது என் கருத்து. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா.

   Delete
 7. திருவிழாவில் காணாமல் போகாமல் இருந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. திருவிழா முடிந்த பின்னர் வாக்குறுதிகள் காணாமல் போய்விடுகின்றனவே!

   Delete
 8. விழா என்றாலே கூடிக்கலைவதுதானே !இதுவும் அப்படித் தான்! பணநாயகம் வளரவளர சனநாயகம் செத்துக் கொண்டே போவதுதான் என் கவலை!

  ReplyDelete
  Replies
  1. நியாயமான கவலைதான். ஆனால் தீர்வில்லை ஐயா. நன்றி.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...