Friday, 19 June 2015

ஆபீஸ் முதல் ரெட்டை வால் குருவி வரை...

வணக்கம் வாசகர்களே! நீங்கள் நலமா? நான் நலம். நான்  இன்று பேசப்போவது எனக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பற்றி. என்ன டிவி சீரியல் பத்தியா? அட ஆமாங்க. இந்த தொலைகாட்சி தொடர்களையே விரும்பாதவன் நான். ஆனால் விதி யாரை விட்டது? என்னையும் சில தொடர்கள் கவர்ந்தன. விஜய் டிவி இன் ஆபீஸ் தொடர் அதில் முதன்மையானது. ஒரு அலுவலக சூழலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இத்தொடர் தான் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.


               கார்த்திக் , ராஜி , விஷ்ணு , லக்ஷ்மி , விஸ்வநாதன் சார் என்று ஒவ்வொரு கதா பாத்திரமும் என்னைக் கவர்ந்திருந்தது. விறுவிறுப்பாக நகர்ந்தது  கதையின் முன்பாதி. கார்த்திக் - ராஜி இன் காதலும் மோதலும் மிகவும் ரசிக்க வைத்தது. விஸ்வநாதன் சாரின் பாத்திரம் நமக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. விஷ்ணு - லக்ஷ்மி காதல் கலகலப்பாக இருந்தது. இந்த நால்வரின் நட்பும் நல்ல நட்பைக் காட்டியது.

இரண்டாம் பாதி சற்றே அறுவையாய் இருந்தது. விஷ்ணு - லக்ஷ்மி பிரிவு , கார்த்திக் - ராஜி பிரிவு , கமல் இன் வருகை இதெல்லாம் சோகம். அலுவலக சூழலில் நிகழ்த்தப்பட்ட மாற்றம் மட்டுமே வரவேற்கத் தக்கதாய் இருந்தது. கார்த்தியை பிரிந்த ராஜி கமலை கல்யாணம் செய்ய சம்மதிப்பதும் தடுமாறுவதும்.... அய்யோ ....... ஏன்டா இப்படிப் பண்ணீங்க????? கார்த்தி - ராஜி பிரிவை இழுத்து... இழுத்து.... காட்டிவிட்டு கடைசி ரெண்டு அத்தியாயத்தில் தடாலடியாய் இணைத்துவிட்டு ஆபீஸ் ஐயும் மூடிவிட்டார்கள்.

          563 அத்தியாயங்களோடு விடை பெற்றது ஆபீஸ். தொடர் முடிவடைந்ததை விட அலுவலக சூழலை அழகாகக் காட்டி வந்த தொடர் முடிந்து போனது தான் கவலை. வாழ்த்துக்கள் விஜய் டிவி. .அடடா.... ஆபீஸ் முடிஞ்சு போச்சே...... அடுத்து என்ன பாக்குறதுன்னு தேடுனேன். புதுசா ஆரம்பிச்சதா இருந்தா பின் தொடர சுலபமா இருக்குமேன்னு யோசிச்சேன். ஆங்... கிடைச்சிருச்சி.....


       ரெட்டை வால் குருவி. புத்தம் புதிய தொடர். மையக் கருத்து ஆபீஸ் தொடர் தந்தது தான். ஈகோ. புரிந்துணர்வின்மை, இன்ன பிற.... ஆரம்பமே முன்கதையுடன் துவங்குகிறது. முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள். இந்த தொடர் ஆபீஸ் போல இல்லாமல் நன்றாக இறுதிவரை போகும் என நம்புகிறேன். ஏனெனில் புரிந்துணர்வின்மையால் பிரியும் இருவர் மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை. பிரிந்தவர்களை சேர்க்கிற கதை என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்??

                முன்பு யூ டியூப் மூலம் தனது தொடர்களின் முழுமையான அத்தியாயங்களை வழங்கி வந்த ஸ்டார் டிவி நெட்வொர்க் இவ்வருட ஆரம்பம் முதல் ஹாட்ஸ்டார் என்னும் தளம் மூலம் ஒளிபரப்ப ஆரம்பித்தது. கைப்பேசியில் இலங்கையில் பார்க்க முடியவில்லை. மடிக்கணினியில் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் யூ டியூப் இல் பார்ப்பது போன்று இது அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்பதே குறைபாடு. பார்க்கலாம்.

          என்ன , படிச்சீங்களா? உங்களுக்கும் பிடிச்ச தொலைக்காட்சி தொடர்கள் இருக்குமே? அதை இங்கே பகிரலாமே? வாங்க பேசலாம்.

அன்புடன்,

சிகரம்பாரதி. 

8 comments:

 1. பார்த்தால் தான் சொல்வதற்கு...? Sorry...

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை. வரவுக்கு நன்றி.

   Delete
 2. ஏனோ hotstar இல் பார்க்க ஆர்வம் ஏற்படுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே! வருகைக்கு நன்றி.

   Delete
 3. வணக்கம் முதல் வரவாகிறேன் !

  அட நீங்களுமா இந்த வில்லங்கத்தில் மாட்டிக் கிட்டீங்க நானும் தெய்வம் தந்த வீடுன்னு ஒரு தொடர் பார்த்து சலித்துப் அதை மறக்க பட்ட பாடு ஐயோ ....மறந்தாச்சு இப்போ எதுவும் பார்ப்பதில்லை !

  வேறு நல்ல பதிவுகளை அன்புடன் எதிர்பார்க்கிறேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி. ஆமாங்க. தொலைக்காட்சித் தொடர்களில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நல்லதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். நிச்சயம் நல்ல பதிவுகளை தருவேன்.

   Delete
 4. வணக்கம்.

  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை.

  நீங்கள் கொடுத்து வைத்தவர்.

  நல்ல நடை ஆளுமை உங்களது.

  தொடருங்கள்.

  தொடரகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...