வலைப்பதிவு வழிகாட்டி - 04

வணக்கம் நண்பர்களே! 

இது மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்து இடைநடுவில் கைவிட்ட பதிவு. 

முந்தைய பதிவுகளைப் படிக்க: 




இன்றைய பதிவு: 

இன்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்வதற்கு சில காரணங்கள் உண்டு. 

1. பதிவை மீண்டும் தொடர்ந்து புதிய வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டுவது. 

2. வலைப்பூவில் (பிளாக்கர்) ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை உலகுக்கு தெரியப்படுத்துவது. 

இரண்டும் ஒன்றே என்பதால் இப்படியே வாசிக்கலாம். 

வலைப்பூவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

பாரிய மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும் வலைப்பதிவர்களை கவரக் கூடிய மாற்றங்களாகவே இருக்கின்றன. 

வலைப்பதிவர்கள் எதிர்பார்த்த புதிய தீம்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமே. 

மாற்றங்கள்: 

01. பதிவுகளின் பட்டியலை காண்பிக்கும் முகப்புத் திரை மாறியிருக்கிறது. 


இது எந்தவொரு பதிவும் இல்லாத புதிய வலைப்பதிவு காட்சியளிக்கும் முறை. 


இது பதிவுகள் உள்ள வலைப்பதிவு ஒன்று காட்சியளிக்கும் விதம். 

இதனைப் பார்க்கும் பழைய பதிவர்கள் தமது வலைப்பதிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும். 







இவ்வாறு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை தெரிவு செய்து அழிக்க, திருத்த, குறிச்சொற்களை மாற்ற முடியும். 

புதிய பதிவுகளை + அடையாளத்தை சொடுக்கி பதிவிட முடியும். 

இவை தான் முகப்புப் பக்க மாற்றங்கள். 

இனி பதிவுகளை இடுவதில் தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அவற்றில் பாரிய மாற்றங்கள் என கூறுவதற்கு எதுவும் இல்லை. 

ஒன்றைத் தவிர. 

அது என்ன? 

பொறுங்கள், பார்க்கலாம். 

முதலில் பதிவொன்றை எப்படி இடுவது என பார்க்கலாம். 

புதிய பதிவுகளை + அடையாளத்தை சொடுக்கி பதிவிட முடியும். 



புதிய பதிவுக்கான தெரிவை சொடுக்கியதும் மேற்கண்ட இடைமுகம் உங்களுக்குக் கிடைக்கும். 

ஒரு பதிவுக்கு தலைப்பு முக்கியம். 

தலைப்பு வித்தியாசமானதாகவும், மக்களை ஈர்ப்பதாகவும் அமைய வேண்டும். 

தலைப்பே முதலில் யார் கண்ணிலும் படும். ஆகவே தலைப்பு கவர்ச்சிகரமானதாக அமைய வேண்டும். 

'Title' பகுதியில் தலைப்பை உள்ளிடுங்கள். 

பதிவு எழுதுவதற்கான பகுதி பெரிதாக்கப்பட்டுள்ளது. 

பதிவு எழுதும் பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த கரைகள் நீக்கப்பட்டு திரை முழுவதும் பதிவு எழுத பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஏனையவை மாற்றங்கள் இல்லை என்றாலும், மெருகேற்றப்பட்டிருக்கின்றன. 

ஆகவே தற்போது பாரிய மாற்றத்தை குறித்து பார்க்கலாம். 

அடுத்த பதிவில் பதிவு எழுதுவது குறித்து பார்க்கலாம். 

தற்போது பாரிய மாற்றம் குறித்து பார்க்கலாம். 

அதாவது நீங்கள் அட்டவணைகளை (Chart / Table) தற்போது வலைப்பதிவில் இணைக்க முடியும். 


படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஐகானை சொடுக்கி அட்டவணைகளை உருவாக்க முடியும். 


அதன்போது இவ்வாறான திரை ஒன்று கிடைக்கும். 

அதில் 'Insert Table' தெரிவை சொடுக்குங்கள். 


இப்போது உங்களுக்கு அட்டவணை கொண்ட திரை ஒன்று காட்சிப்படுத்தப்படும். 

தேவையான நிரல்களை நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும். 


இவ்வாறு தேவையான நிரல்களை இணைத்து உங்கள் அட்டவணையை நீங்கள் வடிவமைக்க முடியும். 


நீங்கள் உங்கள் அட்டவணை பதிவை பகிர்ந்ததும் மேற்கண்டவாறு காட்சியளிக்கும். 

ஆகவே, தரவரிசை உள்ளிட்ட விடயங்களை நீங்கள் இனி இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம். 

சரி. இப்போது ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து உங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

அத்துடன், உங்க வலைப்பதிவை 'வலை ஓலை'யில் இணைக்க மறந்து விடாதீர்கள்!

வலைப்பதிவு வழிகாட்டி - 04
http://newsigaram.blogspot.com/2020/05/valaippathivu-valikaatti-04.html

Comments

  1. நல்லதொரு Contempo Theme...

    இன்னும் கைபேசிக்கேற்ப பல மாற்றங்கள் செய்ய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்தவரை மாற்றங்கள் செய்து விட்டேன். தங்களுக்கு தெரிந்த வழிகள் இருந்தால் வழி காட்டுங்கள் தோழர்.

      Delete
  2. ஆமாம் நல்ல சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் சில விஷயங்கள் கடினமாகிவிட்டன - குறிப்பாக படங்கள்/காணொளி இணைப்பது. அதிக நேரம் எடுப்பது போலத் தோன்றுகிறது எனக்கு.

    தொடரட்டும் வழிகாட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஆம். சில நேரம், புதிய தோற்றம் காரணமாக அவ்வாறு தோன்றலாம். நாளடைவில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்...

      Delete
  3. பயனுள்ள பகிர்வு. பயன்படுத்த முயற்சிப்பேன். நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!