அவசர உலகம்
இன்றைய உலகத்தினை நாம் 'அவசர உலகம்' என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன அவசர உலகம்? நமது எந்தவொரு வேலையையுமே பொறுமையாக, முழுமையாக செய்து முடிக்க போதுமான நேரம் நமக்குக் கிடைப்பதில்லை. ஏன் இந்த நிலை? சதா சர்வ நேரமும் எல்லோருமே 'வேலை வேலை' என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு சுவாசிப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அதையும் ஒரு 'சம்பளமற்ற வேலை'யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் கடமைக்காக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு வேலையை நாம் செய்துதான் ஆகவேண்டுமா? 'அப்போ நீயா சோறு போடுவ?' என்று சிலர் கேட்கலாம். எல்லோருமே மூன்று வேலை முழுமையாக உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உழைக்கின்றனர். ஆனால் அந்த நோக்கத்தை உழைப்பவர்களால் சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஆனால் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் அடைவதற்காகத் தான் 'உழைப்பு' என்கிற இந்தப் போராட்டமே. இதில் ஜெயித்தவர்கள் எத்தனை பேர்? ".................................". பலருக்கு வெற்றி பெற முடிவதில்லை. அதையும் தாண்டி வெல்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறார்கள்.
'அவசர உலகம்' என்ற பதத்தை இல்லாதொழிக்க முடியாதா? மனிதர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கென்று உருவாக்கப் பட்ட இயந்திரங்கள் மனித மனங்களை இயந்திர மயமாக்கி விட்டன. 'அவசர உலகம்' என்ற பதம் உருவாக இது தான் காரணம். கணினி மயமாதலின் காரணமாக வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியினை சமாளிக்க தனி நபர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.
உழைப்பு முக்கியம் தான். ஆனால் உழைப்புக்குள் நமது வாழ்க்கையைத் தொலைத்து விடாமலிருக்க வேண்டும். நிம்மதியாக வாழ்வதற்காகத் தானே எல்லாம்? 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து விடுபடும் வரை நாம் எதிர்பார்க்கும் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் அமைத்துக் கொள்ள முடியாது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?
முதலில் உங்கள் வாழ்க்கைக்கான இலக்கினை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைவதற்கான பாதையைத் திட்டமிடுங்கள். பின்பு படிப் படியாக நிதானத்துடன் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஏனோ தானோ என்று வாழ்பவர்களால் 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து ஒரு போதும் விடு படவே முடியாது. எனவே வாழ்க்கையைத் திட்டமிடுவோம். முன்னேறுவோம்.

வணக்கம் சொந்தமே
ReplyDelete'அவசர உலகம்'ஃஃஃ
சரிய◌ாகச்சொன்னீர்கள்.காத்திரமான உண்மை,இதை எல்லோரும் புரிந்து கொண்டால் போதும்.வாழ்வு இலகுவாகிவிடும்.அருமையான பதிவு.முன்னொரு தரம் இங்கு கருத்துரைத்ததாய் ஏதோ ஒரு உணர்வு.சந்திப்போம் சொந்தமே...!
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள். உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
ReplyDeleteமுதலில் உங்கள் வாழ்க்கைக்கான இலக்கினை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைவதற்கான பாதையைத் திட்டமிடுங்கள். பின்பு படிப் படியாக நிதானத்துடன் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஏனோ தானோ என்று வாழ்பவர்களால் 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து ஒரு போதும் விடு படவே முடியாது. எனவே வாழ்க்கையைத் திட்டமிடுவோம். முன்னேறுவோம்.
ReplyDeleteஅருமையான கருத்து
இன்றைய நிலையில்
அவசியமான கருத்தும் கூட
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்களைப் போலவே எல்லோரும் புரிந்து கொண்டால் உலகம் இன்னும் பல சாதனையாளர்களை ஈன்றெடுக்கும். நன்றி தோழா.
Deleteஅவசர உலகம் ஒரு உணர்வுபூர்வமான ஆக்கம் இது
ReplyDeleteமனதை கவர்ந்தது தொடர வாழ்த்துக்கள் சகோ .
உழைப்பு முக்கியம் தான். ஆனால் உழைப்புக்குள் நமது வாழ்க்கையைத் தொலைத்து விடாமலிருக்க வேண்டும். நிம்மதியாக வாழ்வதற்காகத் தானே எல்லாம்? 'அவசர உலகம்' என்ற சூழலில் இருந்து விடுபடும் வரை நாம் எதிர்பார்க்கும் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் அமைத்துக் கொள்ள முடியாது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?
?????????..........:(
வாங்க உள்ளமே. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லோருமே கேள்விகளோடு தான் காத்திருக்கிறோம், விடைகளை அறியாமல்...... சந்திப்போம் உள்ளமே.
Delete