குடிச்சுப் பாருங்க!
ஒரு தொண்டு நிறுவனம் தொடர் மதுவிலக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்தது. மதுப் பிரியர்கள் அதிகம் உள்ள பகுதி அது. கூட்டம் ஆரம்பித்தது.
"அன்பானவர்களே... இந்தக் குடிப் பழக்கம் இருக்கிறதே... அதை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை... குடி குடியைக் கெடுக்கும்..."
அவ்வளவு தான். கூட்டத்தில் சலசலப்பு.
"யோவ் உக்கார்றியா? மண்டைல போடவா?" என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில் பேசியவர் தொங்கிய முகத்துடன் இருக்கையில் அமர்ந்தார். அடுத்தவர் வந்தார். மைக்குக்கு முன்னால் இருந்த சோடா பாட்டிலைப் (Bottle) பார்த்தார்.
"இதை யாரு இங்க வச்சது? யாராவது ஒரு குவாட்டர் பாட்டில் (Bottle) இருந்தா எடுத்து வந்து வைங்களேன்..."
கூட்டம் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தது.
"சின்ன வயசுல எங்கப்பா படி, படின்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. நான் கேக்கலையே, பத்தாவது பெயிலு... அதுனால என்ன குறைஞ்சா போயிட்டேன்?"
"அப்படிப் போடு!" கூட்டத்தில் ஒரு குரல்.
"என்ன... வேலை கிடைக்கல. போயிட்டுப் போகுது. சொத்தையெல்லாம் வித்துக் குடிச்சேன்...." கூட்டத்தில் அமைதி.
"என் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. போறா கழுதை!"
கவனமாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.
"இப்போ குடிச்சு குடிச்சு குடல் வெந்து போச்சு. டாக்டர் சீக்கிரமே செத்துப் போயிடுவேன்னு சொல்றாரு. உயிரு தானே, போயிட்டுப் போகுது!"
அந்தப் பகுதியில் மது விலக்குப் பிரசாரம் வெற்றிகரமாக நடந்தது.
நன்றி: உதய சூரியன் வார வெளியீடு (இலங்கை)
2012.06.14, பக்கம் - 11.
என்னை யோசிக்க வைத்ததற்கு நன்றி. ஆனால், இதை எல்லோரையும் வாசிக்க வைக்க வேண்டும். அதில் தான் உங்கள் முயற்சி கைகூடும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...... குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் தோழரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே. மீண்டும் சந்திப்போம்.
Deleteநல்ல பதிவு. குடிப்பதை சமூக அடையாளமாக எண்ணும் பலர் படிக்க வேண்டிய பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி உள்ளமே. இதனை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டுமே என்பதே என் ஆதங்கம். தங்களின் பின் தொடர்கைக்கும் நன்றிகள். சந்திப்போம் உள்ளமே.
Delete