Saturday, 16 June 2012

சாத்தானின் தூதன் - டாக்டர் 7!

                          உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் காமிக்ஸ் கதைகள் மீது தீராத காதல் இருக்கிறது? காமிக்ஸ் புத்தகங்களை எங்கே வாங்குவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் வாசித்துத் தான் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.


                    தமிழ் காமிக்ஸ் கதைகளைப் பொறுத்த வரை எனக்கு நன்கு பரிச்சயமானது 'முகமூடி வீரர் மாயாவி'யின் கதைகள் தான். அது எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்று என் கரம் கிட்டியது. முதன் முதலில் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை நான் படித்தது 'முகமூடி வீரர் மாயாவி'யினுடையது அல்ல.

               'ஏஜென்ட் காரிகன்' இன் சாகசக் கதை. பிரபல வலைப் பதிவர்களுள் ஒருவரான லோஷன் அண்ணா அண்மையில் தான் படித்த 'தலை வாங்கிக் குரங்கு' பற்றிய பதிவொன்றினை இட்டிருந்தார். அதைப் படித்ததும் தமிழ் காமிக்ஸ் கதைகள் மீதான எனது ஆர்வம் சற்றே தூண்டப் பட்டது. ஆனால் எங்கே எப்படி வாங்குவது என்று தெரியாததால் தன் பாட்டில் இருந்தேன். அண்மையில் கொழும்பு-12 ஆமர் வீதியில் கிங்ஸ்லி திரையரங்கு செல்லும் வழியிலுள்ள நாற்சந்தியில் அமைந்துள்ள பத்திரிகை விற்கும் கடையொன்றில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம் என்கிற விளம்பரத்தைப் பார்த்து அது பற்றி கடைக் காரரிடம் விசாரித்தேன். அந்தக் கடையில் 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7' புத்தகம் மட்டுமே இருந்தது. இலங்கை விலை ரூபா 65 மட்டுமே. புத்தகத்துடன் அறைக்குச் சென்ற நான் ஒரே மூச்சில் அக் கதையை வாசித்து முடித்தேன்.
[Lion%2520Comics%2520Issue%2520No%2520211%2520Issue%2520Dated%2520Apr%25202012%2520Agent%2520X%25209%2520Phil%2520Corrigan%2520Sathanin%2520Thoodhan%2520Dr%25207%2520Story%25201st%2520Page%2520Pg%2520No%252005%255B4%255D.jpg]

                     கதை மிக சுவாரஷ்யமாக இருந்ததுடன் தமிழ் காமிக்ஸ் கதைகள் மீதான ஒரு காதலையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7'. மற்றையது 'ரிப் கிர்பி துப்பறியும் கன்னித் தீவில் ஒரு காரிகை'. மொத்தம் 108 பக்கங்களுடன் இப் புத்தகம் வந்துள்ளது. 'சாத்தானின் தூதன் - டாக்டர் 7!' கதை 42 பக்கங்களிலும், 'ரிப் கிர்பி துப்பறியும் கன்னித் தீவில் ஒரு காரிகை' கதை 48 பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளது. மிக மிக விறுவிறுப்பான கதைகள் இவை.


                        இங்கு முக்கியமாக குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் இனி வரும் காலங்களில் இலங்கையில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான். 'கோகுலம் வாசகர் வட்டம்' இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதனை நான் வாசித்த காமிக்ஸ் புத்தகத்தில் அவர்களால் இணைக்கப் பட்டிருந்த துண்டுப் பிரசுரம் மூலம் அறிந்து கொண்டேன். அந்த துண்டுப் பிரசுரம் மாற்றமின்றி உங்களுக்காக இதோ:


                  "இந்தியாவிலிருந்து வெளிவரும் லயன், முத்து, க்ளாஸிக் போன்ற தமிழ் காமிக்ஸ்களின் புதிய வெளியீடுகளை இலங்கையில் பெற்றுக் கொள்ளவும் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய தகவல்களை அறியவும் 'கோகுலம்' வாசகர் வட்டத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


kogulamrc@gmail.com
http://www.facebook.com/kogulam.rc
http://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069
http://kogulamrc.blogspot.com/


தொ.பே. இல. +94775143907
இப்போது உங்கள் வீடுகளுக்கே காமிக்ஸ் புத்தகங்களை தபாலில் வரவழைத்துக் கொள்ளலாம்."


                    அறிவிப்பைப் படித்தீர்களா? இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே? மேலும் லயன்-முத்து காமிக்ஸ் வெளியீட்டாளர்களால் வலைப் பதிவு ஒன்றும் தொடங்கப் பட்டுள்ளது. அதன் மூலம் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த வலைத் தளம் இதோ:
http://lion-muthucomics.blogspot.com


                  மேலும் காமிக்ஸ் வெளியீடுகள் பற்றிய தகவல்களை பின்வரும் வலைத் தளம் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
http://tamilcomicsulagam.blogspot.com


           தமிழ் காமிக்ஸ்களுக்கான ஆதரவு என்றுமே இல்லாமல் போகப் போவதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே தமிழ் காமிக்ஸ்களை விரும்பிப் படிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இனி நானும் தமிழ் காமிக்ஸ்களின் தொடர் வாசகனாக இருப்பேன் என்பதுடன் அவை பற்றிய தகவல்களையும் வலைத்தளம் மூலம் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறேன். வாழ்க தமிழ் காமிக்ஸ் உலகம்.


Photo: வாங்கிவிட்டீர்களா? நண்பர்களே!

6 comments:

 1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

   Delete
 2. அருமை நண்பரே. நானும் நீண்ட நாட்களின் பின்னர் இலங்கையில் கிடைக்கும் காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் பயன் அடைகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நல்லது நண்பரே. தமிழ் காமிக்ஸ்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என நம்பலாம்.

   Delete
 3. தகவலுக்கு நன்றி நண்பா நானும் காமிக்ஸ் காதலிதான்

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். காமிக்ஸ்களுக்கு இருக்கும் ரசிகர் வட்டம் என்றுமே குறையாது. நன்றி உள்ளமே. சந்திப்போம்.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...