வாங்கையா வாங்க!
அண்மையில் எனது Google plus தளத்தில் எனக்கு ரசிக்கக் கிடைத்த 5 புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். அனைத்து புகைப்படங்களுமே இயற்கை சார்ந்தவை. ஏதோ ஒரு வகையில் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என நம்புகிறேன்.
மேலும் இப் பதிவின் மூலம் வாசகர்களுடன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அழகிய புகைப் படங்களை ரசித்த படியே இவற்றையும் இடைக்கிடை வாசித்துக் கொள்ளுங்கள். நான் இந்த 'சிகரம்' வலைப் பதிவை பல கனவுகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஆயினும் மனதில் ஒரு சின்ன குறை. நான் வலைப் பதிவை ஆரம்பித்து முதலாவது பதிவை வெளியிட்ட ஓரிரு நிமிடங்களில் வாசகர் ஒருவர் தனது கருத்தினை (Comment) 'சிகரம்' வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
அது எனக்கு மனதில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து வந்த பதிவுகளுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கருத்துரைகள் பதிவு செய்யப் படுவது அரிதாகவே நடை பெற்றது.
எனது பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாகுகளை வழங்குவதுடன் உங்களை கவர்ந்த பகுதியையும் மறக்காமல் கோடிட்டுக் காட்டிவிட்டுச் செல்லுங்கள். பதிவு பிடிக்க வில்லை என்றால் அதற்கான காரணத்தை குறிப்பிடுங்கள். அது எனது அடுத்த பதிவை இன்னும் சிறப்பாக வடிவமைக்க உதவும்.
இந்த விடயத்தை உங்களிடம் அன்பான வேண்டுகோளாக சமர்ப்பிக்கிறேன். தீர்ப்பை நீங்கள் தான் எழுத வேண்டும். உங்கள் தீர்ப்பை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
பாசத்துடன்,
உங்கள் தோழன்,
சிகரம் பாரதி.
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்