சிகரம் ஆசிரியர் பக்கம் 2018.09.10 | Sigaram Editorial 2018.09.10

சிகரம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இன்றைய சூழலில் இரண்டு பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். சுவாதி, நிர்பயா, அனிதா என்பவர்களையெல்லாம் மறந்து கடந்து விட்டோம். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் விவாதப் பொருளை (Trending)மட்டுமே நாம் பின்பற்றுவது ஒன்றும் புதிதல்லவே? இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது சோபியா மற்றும் அபிராமி ஆகிய இரண்டு பெண்களைப் பற்றி. 



சோபியா விமான நிலையத்தில் வைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியின் தமிழக மாநில தலைவரான தமிழிசையை நோக்கி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் தமிழிசை கடந்து சென்றிருந்தால் இன்று நாம் இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருந்திருக்காது. ஆனால் இதனால் கோபமடைந்த தமிழிசை சோபியாவிடம் கார சாரமாக விவாதிக்க விடயம் பெரிதாகிவிட்டது. மேலும் தமிழிசையின் புகாரின் பேரில் காவல்துறை சோபியாவைக் கைது செய்ய நாடு முழுவதும் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 



சோபியாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்களின் குரல்கள் எழுகின்றன. ஏற்கனவே பா.ஜ.க கட்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படும் நேரத்தில் இந்த சம்பவம் மக்களின் எதிர்ப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. எமது பார்வையில் சோபியாவின் செயல் சரியானதே. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அவர்களின் செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சோபியா  எதையும் இட்டுக்கட்டிக் கூறவில்லை. மக்கள் மனதில் இருப்பதைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளை விடவும் சோபியா தான் உண்மையான மக்கள் பிரதிநிதி என்றாலும் கூட மிகையில்லை. 

அபிராமி. கள்ளக்காதலுக்காக தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பரலோகம் அனுப்பியவர். இந்த விவகாரத்திலும் ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் குரல்கள். நிகழ்வின் அடிப்படையில் அபிராமி செய்தது தவறு. பெண்களின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் என்னும் பெண்ணிய அடிப்படையில் அவர் மீது மட்டுமே தவறு இருக்க முடியாது. 



அபிராமியின் கள்ளக் காதலர் ஏற்கனவே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இவர்கள் இருவரும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு ஒன்றுசேர நினைத்ததன் காரணம்? கண்டிப்பாக இவர்கள் இருவரும் மட்டுமாக இருக்க முடியாது. இவர்கள் இருவரின் துணைகள் மற்றும் சமூக அமைப்பும் ஒரு காரணம். 

பெண் குழந்தையைப் பெற்றாலே அதை எப்படியாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதே இன்னொருவனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகத் தான் என்பது அவர்களின் நிலைப்பாடு. பெண்கள் மீதான மதிப்பீடுகளும் எண்ணங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தாலும் முழுமையான மாற்றம் இன்னமும் நிகழவில்லை. 

நாம் மனிதன் என்ற வகையில் சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சக மனிதனை மதிப்பது நல்ல பண்பின் அடையாளம். சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பதெல்லாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கைகள். ஆனால் அவற்றை நம்மால் நிரூபிக்க முடியாது. ஆகவே நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஒரு பிறப்பை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்ந்துவிட்டுப் போவதில் தவறேதும் இல்லையே? 

#Sophia #fasistbjpdowndown #BJP #TamilisaiSoundararajan #Tuticorin #bjpfails #terrorist #media #tn #mkstalin #dmk #admk #antiindian #abhirami #abirami #kundrathur #india #love #respect #girl #editorial #sigaram #sigarambharathi #SigaramINFO 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!