சிகரம் ஆசிரியர் பக்கம் | SIGARAM EDITORIAL | 14.09.2018
வணக்கம் 'சிகரம்' இணையத்தள வாசகர்களே!
சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் ஆறு வழிச்சாலைத் திட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தத் திட்டமே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவா தமிழக அரசின் தீர்வு? தமிழகத்தில் மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்தை விடாப்பிடியாக நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது ஏனோ? அடுத்த ஆட்சியாவது மக்கள் விரும்பும் ஆட்சியாக அமையுமா?
இலங்கையைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தலைமைப் பொறுப்பை 2030ஆம் ஆண்டில் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கவிருப்பதாக அண்மையில் பேசியிருந்தார். ஏற்கனவே ரணிலிடம் இருந்து தலைமைப்பொறுப்பை பறிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்திருந்தாலும் அவை வெற்றியளிக்கவில்லை. ரணில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி ஏராளமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. மக்களும் கட்சியில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு தலைவர் செயல்படுவாரா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரின் விடுதலை தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பினை வெளியிட்டிருந்தது. தமிழக அரசு ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தங்கள் தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து பரிந்துரைக்கலாம் என்று அந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. தமிழக அரசு ஏழு பேரையும் விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. சுயமாக ஆளுநரால் முடிவெடுக்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை ஆளுநர் கோருவார். இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலை சாத்தியமில்லை என்பதே நிஜம்!
-சிகரம்
bigg boss 1 contestants hindi
ReplyDelete