பிக் பாஸுக்கு தடையில்லை! நீதிமன்றம் அறிவுப்பு!

பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்துக்கு கடந்த வாரம் முதலே சிக்கல்கள் ஆரம்பித்திருந்தன. தமிழ்நாடு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழகத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் படப்பிடிப்புக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 90%மானோர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். முதலாம் பருவத்திலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருந்த போதும் 'இந்த முறை மட்டும் விட்டிருங்க' என்பது போல பேசி முடித்திருக்கின்றனர். அனால் இம்முறையும் அது போலவே நடைபெற விஷயம் பெரிதாகியிருக்கிறது. பிக் பாஸ் படப்பிடிப்புக்கு இந்த இரண்டாம் பருவத்தில் மும்பை தொழிலாளர்கள் 90%மானோரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தைச் (FEFSI) சேர்ந்த தொழிலாளர்கள் 10%மானோரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் படப்பிடிப்பு தொழிநுட்பங்கள் தமிழகத்திற்குப் புதிது என்பதால் பெப்சி சங்கம் தமிழகத் தொழிலாளர்கள் 50%மானோரை மட்டுமேனும் பயன்படுத்துமாறும் தொடரும் அடுத்தடுத்த பருவங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் பெப்சி சங்கம் பேச்சுவார...