BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 22 | HIGHLIGHTS | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 22
ஞாயிறு (நாள் 21) இரவு 08.00 மணிக் காட்சியுடன் பிக் பாஸ் துவங்கியது. டேனி பொன்னம்பலத்தை மஹத், ஷாரிக், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய நால்வரையும் கூப்பிட்டு பேசுங்கள் என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருந்தார். முன்னொரு நாள் இந்த நால்வரும் இரவில் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்க பொன்னம்பலம் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு அடுத்த நாளே மன்னிப்பும் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் இவர்கள் பேசிக் கொண்டிருந்ததற்காக பொன்னம்பலம் திட்டியுள்ளார்.
அனந்த் வைத்தியநாதன் வெளியேறும்போது அவரது மனதை நோகடித்த யாரையேனும் சிறையில் அடைக்கலாம் என்று பிக் பாஸ் கூற அவர் பொன்னம்பலம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியது தன் மனதை நோகடித்ததாக குறிப்பிட்டு அவருக்கு சிறைத் தண்டனையை வழங்கி விட்டு பிக் பாஸில் இருந்து விடைபெற்றுச் சென்றார்.
சக போட்டியாளர்கள் இரவு எட்டு மணியில் இருந்து பதினோரு மணிவரை பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப முடியாது என்றும் அவரது தண்டனையை இரத்து செய்யுமாறும் கோரி பிக் பாஸிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே சிறைக் கதவின் சாவியும் அவரை சிறைக்கு அனுப்பும் அறிவிப்பும் வந்த போதும் கூட அவரை சிறைக்கு அனுப்ப முடியாது என்று மறுத்தனர் போட்டியாளர்கள். பிற்பாடு பொன்னம்பலம் சிறைக்கு செல்லாத பட்சத்தில் இனி வரும் நாட்களில் விசேட உணவுப் பொருட்கள் வழங்கும் Luxury Budget புள்ளிகள் முழுமையாக இரத்தாகும் என்று பிக் பாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து பொன்னம்பலம் சிறைக்குள் சென்றார்.
அவர் சிறை சென்ற பின்பும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. ஞாயிறு அத்தியாயத்தில் கமல் இறுதியாக வீட்டின் ஒழுக்கம் பற்றிப் பேசிய போது 'முந்தாநாள் இரவு என்ன நடந்துச்சின்னு கேளுங்க' என்று பொன்னம்பலம் குறுக்கிட்டார். ஆனால் யாரையும் குறிப்பிட்டு பேச வேண்டாம் என்று தடுத்த கமல் இந்த வாரம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று பார்க்கலாம் என்று முடித்தார். 'நீங்கள் ஏன் அந்த விடயத்தை முழுமையாகச் சொல்லவில்லை? மக்கள் என்ன நினைப்பார்கள்? எங்களைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா?' என்று பஞ்சாயத்தை இழுத்தனர் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும்.
பிக் பாஸ் இந்த பஞ்சாயத்தையெல்லாம் ரொம்ப ரசித்தார் போல. நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் வீட்டின் விளக்குகளை அணைத்தார். வீட்டின் விளக்குகளை அணைத்தால் விவாதங்கள் அடங்கிவிடும் என்பதை அறியாதவரா என்ன? ஆனால் பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்புவதற்கான போராட்டத்தில் போட்டியாளர்களிடத்தில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. கமல் கூட ஞாயிறு அத்தியாயத்தில் நீங்கள் யாரும் உண்மை இல்லை, எல்லோரும் போலியாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
22ஆம் நாள் காலை எட்டு மணிக்கு 'சொப்பன சுந்தரி நாந்தானே' பாடலுடன் போட்டியாளர்களை எழுப்பினார் பிக் பாஸ். சென்றாயன் ஜெயிலுக்கு இங்கிலீஷ்ல என்னண்ணே என்று கஞ்சா கருப்பைப் போல கேட்டுக்கொண்டிருந்தார். அரைகுறை ஆங்கிலத்தில் பிக் பாஸுடன் உரையாடிக் கொண்டிருந்தார். சென்றாயனின் ஆங்கிலத்தைக் கேட்டு பயந்து போன பிக் பாஸ் ஆளை விடுடா சாமி என்று அடுத்த பதினைந்து நிமிடங்களில் பொன்னம்பலத்தை சிறையில் இருந்து விடுவித்தார்.
மதியம் 01.45. வைஷ்ணவியின் தலைமைப் பொறுப்பு முடிவுக்கு வந்தது. அடுத்த தலைவராக போட்டியின் மூலம் ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலை 06.15 மணிக்கு இந்த வார வெளியேற்றத்திற்கான பரிந்துரை ஆரம்பமானது. இம்முறை மூன்று அல்லது நான்கு பேரை குழுவாக இரகசிய அறைக்கு வரவழைத்த பிக் பாஸ் அவர்களுக்குள்ளேயே ஒருவரை கலந்துரையாடி வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்கும்படி செய்தார். யாஷிகா, நித்யா, பாலாஜி மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் வெளியேற்றத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE?
Created with PollMaker
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்